Published:Updated:

பேத்திகளுக்குத் திருமணப் பரிசு: எந்த முதலீடு ஏற்றது?

பேத்திகளுக்குத் திருமணப் பரிசு: எந்த முதலீடு ஏற்றது?

பிரீமியம் ஸ்டோரி

கேள்வி - பதில்

?எனக்கு ஐந்து வயது மற்றும் ஆறு மாத குழந்தை என இரண்டு பேத்திகள் இருக்கிறார்கள். என்னிடம் 2 லட்சம் ரூபாய் உள்ளது. இதை அவர்களின் திருமணத்துக்குப் பரிசாக தரத் திட்டமிட்டுள்ளேன். இதை எதில் முதலீடு செய்யலாம்?

குமரேசன், சென்னை.  அபுபக்கர், நிதி ஆலோசகர்.

''குறிக்கோள்களின் அடிப்படையில் முதலீடு செய்வது நல்லது. நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். டெம்பிள்டன் இந்தியா ஈக்விட்டி இன்கம், ஹெச்.டி.எஃப்.சி சில்ட்ரன் கிப்ஃட் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் பிளான் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஒவ்வொருவர் பெயரிலும் தலா 50 ஆயிரம் ரூபாய் இரண்டு ஃபண்டுகளிலும் பிரித்து முதலீடு செய்யலாம். நீங்கள் குழந்தைகளின் தாத்தா என்பதால் ஹெச்.டி.எஃப்.சி ஃபண்டில் முதலீடு செய்வதற்குத் தனி விண்ணப்ப படிவம் உள்ளது. இதில் குழந்தைகளின் பெற்றோரைப் பாதுகாப்பாளராகக் குறிப்பிட வேண்டும். குழந்தைகளின் திருமணத்துக்குத் தேவைப்படும்போது அவர்களின் பெயரில் பணம் வரவு வைக்குமாறு குறிப்பிட வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தில் முதலீட்டு தொகையைப்போல 10 மடங்கு, அதாவது 10 லட்சம் ரூபாய்க்கு விபத்து காப்பீடு பாலிசி கவரேஜ் இலவசமாகப் பெற்றோருக்குக் கிடைக்கும்.''

பேத்திகளுக்குத் திருமணப் பரிசு:  எந்த முதலீடு ஏற்றது?

?2011-ம் ஆண்டு ஒரு ஃப்ளாட் புக் செய்தேன். இதில் கட்டடம் கட்டும்போது சில மாற்றங்களைச் செய்யச் சொன்னேன். இதற்கான பணத்தை மிகவும் குறைந்த அளவுக்கு மட்டுமே கழித்தார்கள். அதேநேரத்தில், விலையுயர்ந்த டைல்ஸ் பதிக்கச் சொன்னால் பில்டர் அதிகமான தொகை கேட்கிறார். அதற்கு விவரத்தையும் தர மறுக்கிறார். இதற்கு சட்டப்படி ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா?

@ தீபாராணி, கோவை. என்.ரமேஷ், வழக்கறிஞர்.

''கட்டடம் கட்டும்போது, தாங்கள் கூறிய மாற்றங்களால், கட்டாமல் தவிர்க்கப்பட்ட கட்டுமானத்துக்குப் பணம் கழிக்கப்பட்டது. ஆனால், குறைவாகக் கழிக்கப்பட்டதாகச் சொல்கிறீர்கள். விலையுயர்ந்த டைல்ஸ் பதிக்க அதிகத் தொகை கேட்பதாகவும் சொல்கிறீர்கள். அவ்வாறு தொகை கேட்பதற்கான விவரத்தை (Detailed statement of account) தெரிவிக்கவேண்டிய கடமை பில்டருக்கு உள்ளது. அதைத் தெரிவிக்க மறுக்கும்பட்சத்தில், ஓர் அங்கீகரிக்கப்பட்ட கட்டுமானப் பொறியாளர் மூலமாகப் பார்வையிட்டு, கட்டுமானத்துக்கான உண்மையான செலவை மதிப்பீடு செய்யுங்கள். அதன்படிதான் பணம் செலுத்த இயலும் என வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம்.''

பேத்திகளுக்குத் திருமணப் பரிசு:  எந்த முதலீடு ஏற்றது?

?அண்ணன், தங்கை சேர்ந்து வங்கியில் வீட்டுக் கடன் வாங்க முடியுமா?.

வெங்கடேஷன், சென்னை.எஸ்.சுப்புராமன், முதன்மை மேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை.

''அண்ணன், தங்கை சேர்ந்து வீடு வாங்கி, அதை இருவரின் பெயரிலும் பதிவு செய்ய வேண்டும். இப்படி செய்யும்போது வீட்டுக் கடன் எளிதாகக் கிடைக்கும்.''

?கடந்த மாதம் முதல் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபோகஸ்டு புளூசிப் ஃபண்ட் மற்றும் ரிலையன்ஸ் குரோத் ஃபண்ட் ஆகியவற்றில் தலா 1000 ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீட்டை அடுத்த ஐந்து வருடத்துக்குத் தொடர விருப்பம். என் தேர்வு சரியானதா?

 கு.தமிழ்வாணன், நாகப்பட்டினம்.வி.டி. அரசு, நிதி ஆலோசகர்.

''நீங்கள் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஃபோகஸ்டு புளூசிப் ஃபண்டில் தொடர்ந்து முதலீடு செய்யலாம். ரிலையன்ஸ் குரோத் ஃபண்டின் முதலீட்டை தவிர்ப்பது நல்லது. ஏனெனில், கடந்த 4, 5 வருடங்களாகவே இந்த ஃபண்டின் செயல்பாடு சரியாக இல்லை. இதற்குப் பதில், ஹெச்.டி.எஃப்.சி மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.''

பேத்திகளுக்குத் திருமணப் பரிசு:  எந்த முதலீடு ஏற்றது?

?என் தந்தையும், அண்ணனும் வெளிநாட்டில் கட்டட வேலை செய்கிறார்கள். மாதம் 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இன்னும் 3 வருடம் கழித்து 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் வாங்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான முதலீட்டுத் திட்டங்களைக் கூறவும்.

@ சக்தி ராயப்பன், சேலம். ரவிக்குமார், நிதி ஆலோசகர்.

''மூன்று வருடத்தில் 25 லட்சம் ரூபாய் கிடைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். இந்தத் தொகை கிடைப்பது சற்றுக் கடினம். மேலும், 3 வருடம் என்பது மிகவும் குறுகிய காலம் என்பதால் அதிக ரிஸ்க்கும் எடுக்க முடியாது. எனவே, நீங்கள் ஆர்.டி., ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யலாம். மாதம் 50 ஆயிரம் ரூபாய் வீதம் ஒரு வருடத்துக்கு 6 லட்சம் ரூபாய் முதலீடு செய்வீர்கள். இப்படி மொத்தம் மூன்று வருடத்தில் 18 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். இதில் 8 சதவிகிதம் வட்டி கிடைத்தால்கூட சுமார் 2.38 லட்சம் ரூபாய்தான் வட்டி கிடைக்கும். ஆக, மொத்தமாக 20.38 லட்சம் ரூபாய்தான் கிடைக்கும்.''

பேத்திகளுக்குத் திருமணப் பரிசு:  எந்த முதலீடு ஏற்றது?

?எனக்கு 44 வயது ஆகிறது. என்னிடம் 5 லட்சம் ரூபாய் உள்ளது. இதைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய நினைக்கிறேன். இந்தப் பணம் ஐந்து வருடம் கழித்துதான் தேவை. எனவே, எனக்கேற்ற பங்குகளைக் கூறவும்.

ரவி, கடலூர். வெங்கடேஸ்வரன், இயக்குநர், மெக்கனோசி அண்ட் கோ.

''பொருளாதார ஏற்ற இறக்கத்தைத் தாண்டி, எப்போதும் தேவையுள்ள பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம். அதாவது, ஐ.டி.சி., டி.சி.எஸ்., டெக் மஹிந்திரா, மைண்ட்ட்ரீ, லூபின், டாடா மோட்டார்ஸ், தெர்மேக்ஸ் போன்ற பங்குகளில் முதலீடு செய்யலாம்.''

படம்: ப.சரவணக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு