எந்த ஊரிலும் தொடங்குவதற்கு ஏற்ற தொழில் இது. சிறிய முதலீடு, அலட்டல் இல்லாத வருமானம் என்பதுதான் இதன் சிறப்பு. தொழில்நுட்ப அறிவு வேண்டுமே எனப் பயப்படத் தேவையில்லை. அடிப்படை தொழில்நுட்ப அறிவு இருந்தால் போதும்.

தவிர, புதிதாகக் கற்றுக் கொள்வதற்கும் எளிதான தொழில். புதிய டிசைன்களை யோசிக்கும் முயற்சி, ஆர்வம் இருந்தால் எந்த ஊராக இருந்தா லும் ஏற்றம் தரும் தொழில் இது.

வீடு பாதுகாப்பு சார்ந்து மக்கள் அதிகம் நம்புவது கிரில்கேட் என்று சொல்லப்படுகிற இரும்புத் தடுப்புகள் மற்றும் இரும்புக் கதவுகள் வகையறாக் களைத்தான். புதிதாகக் கட்டப்படும் வீடுகளின் ஜன்னல்கள், இதர வகை வெல்டிங் வேலைகள் என முக்கியமான தொழில் இது. தேவை அதிகமாக உள்ள இடத்தை அறிந்துகொண்டு இறங்கினால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கின்றனர். கட்டுமான தொழில் செய்பவர் களோடு நல்ல புரிந்துணர்வு இருக்கும்பட்சத்தில், தொடர்ச்சியான வேலை கிடைக்கும். எந்த வேலையிலும் தனித்த அடையாளம் காட்ட விரும்புபவர்கள், இந்தத் தொழிலிலும் வெற்றிக்கொடி நாட்டலாம்.

தயாரிப்பு முறை!

வாடிக்கையாளர் விரும்புவது போல வடிவமைப்பை வரைந்து கொண்டு, அதற்கேற்ப கம்பிகளை வெட்டிக்கொள்ள வேண்டும். இரும்பு உருக்குக் கம்பிகளை சந்தையில் வாங்கிக் கொள்ளலாம். கம்பிகளை வாங்கி முதலில் நேர்படுத்தி, தேவைகேற்ப வளைத்துக் கொள்ள வேண்டும். வளைத்த கம்பிகளை, ஒன்றோடு ஒன்று ஒட்டவைத்து, பிசிறுகளை இழைத்து வண்ணம் பூசி வாடிக்கையாளருக்கு கொடுக்க வேண்டியதுதான்.

திட்ட அறிக்கை!

உற்பத்தித் திறன் தினசரி 8 மணி நேரம் வேலை எனக் கணக்கிட்டால் மூன்று பணியாளர்கள் சேர்ந்து ஒரு மாதத்துக்கு 6 டன் வரை கையாள முடியும்.

இயந்திரங்கள்!

துளைபோடும் இயந்திரம்: 1
கம்பிகளை வெட்டக்கூடிய இயந்திரம்: 1
தானியங்கி துளைபோடும் இயந்திரம்: 1
தண்டு வளைக்கும் இழைப்பான்: 1
காஸ் வெல்டிங் டார்ச்: 1
பெஞ்ச் வைசஸ் (Bench vises): 1
ஆயில் கூல்டு ஆர்க் வெல்டர் கருவி: 1
ஸ்பிரிங் தராசு மற்றும் எக்ஸாஸ்ட் மின்விசிறி: 1

இந்த இயந்திரங்கள் அனைத் தும் சுமார் 2 லட்சத்துக்குள் வாங்கிவிடலாம். இதற்கு வங்கிக் கடன் கிடைக்கும் இடம் மற்றும் கட்டடம்: வாடகை இந்தத் திட்டத்துக்கு 500 சதுர அடி அளவிலான கட்டடம் மற்றும் பணிபுரியும் இடவசதி வேண்டும்.

மின்திறன்: 10 ஹெச்பி

மூலப்பொருட்கள்!

இரும்புக் கதவுகள் மற்றும் தடுப்புக்குத் தேவையான மூலப்பொருட்களாக பயன்படுவது உருக்கு இரும்புதான். தேவைக்கேற்ப தட்டையானது மற்றும் உருளையான உருக்கு இரும்பை வாங்கிக்கொள்ளலாம். இரும்பு உருக்கானது வியாபாரிகளிடம் தாராளமாகக் கிடைக்கும். இதர தேவையான பொருட்கள் மற்றும் வண்ணப் பூச்சுகள் சந்தையில் எளிதாகக் கிடைக்கிறது.

ஒரு டன் உருக்கு ரூ.50,000 என்கிற பட்சத்தில் மாதத்துக்கு 6 டன் என்கிறபோது 3 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதுதவிர, பற்ற வைக்கும் பொருட்கள் ரூ.10 ஆயிரம் என மொத்தம் 3.10 லட்சம் ரூபாய் தேவைப்படும். இதற்குத் தனியாக வங்கிக் கடன் பெற்றுக்கொள்ளலாம்.

பணியாளர்கள்! (ரூ)

மேற்பார்வையாளர் 1 : 12,000

வெல்டர் 3 X 12,000 : 36,000

உதவியாளர் 2 X 6,000 : 12,000

மொத்தம் : 60,000

நிர்வாகச் செலவுகள் (ரூ)

மின்சாரம்: 10,000
வாடகை : 10,000
அலுவலக நிர்வாகம் : 10,000
பராமரிப்பு : 5,000
தேய்மானம் : 5,000

ஏற்று இறக்கு கூலி
போக்குவரத்து: 10,000
இதர பொருட்கள் : 20,000
மொத்தம் : 70,000

நடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ)

மூலப்பொருட்கள் : 3,10,000

சம்பளம் : 60,000

நிர்வாகச் செலவுகள் : 70,000

மொத்தம்: 4,40,000 (இதற்குத் தனியாக வங்கியில் நடைமுறை மூலதனக் கடன் பெற்றுக் கொள்ளலாம்)

நடைமுறை மூலதன வட்டி (ரூ)

நடைமுறை மூலதன வட்டி 13.5%. குறுகிய காலம்: 5,000

விற்பனை வரவு:

ஒரு டன் கம்பிகளை இப்படி வடிவமைக்க ரூ.80,000 வரை வாங்கலாம். இதன் அடிப்படையில் மாதம் 6 டன் உருக்கு கையாளுவதன் மூலம் ரூ.4,80,000 வருமானம் கிடைக்கும்.

மொத்த வரவு : 4,80,000

மொத்த செலவு : 4,40,000

வட்டி செலவு : 5,000

லாபம் : 35,000

படங்கள்: வீ.சிவக்குமார்."
(திட்ட விவரங்கள் உதவி: டான்ஸ்டியா எஃப்என்எஃப் சர்வீஸ் சென்டர், சென்னை.)

''தரம் இருந்தால் தாக்குப்பிடிக்கலாம்!''

வினோத் கண்ணன்,
ஷாலினி இன்ஜினீயரிங் வொர்க், திண்டுக்கல்.

''இந்தத் தொழிலை பொறுத்தவரை, தனித்துவம் மற்றும் பழக்கவழக்கம் முக்கியமானது. குறிப்பிட்ட நேரத்துக்குள் தரமாகச் செய்துகொடுத்தால், ஒருவர் மூலம் மற்றொருவர் என நமக்கு நல்ல ஆதரவு கிடைத்துவிடும். கட்டுமானத் துறையினரோடு தொடர்பில் இருக்கவேண்டும். புதிதாகக் கட்டடம் கட்ட ஒப்பந்தம் ஆனாலோ அல்லது தனியாக வீடு கட்டத் திட்டமிடுபவர்களையோ சந்தித்து நமக்கான ஆர்டர் பிடிக்க வேண்டும். மின்சாரத் தட்டுப்பாடுதான் இந்தத் தொழிலைப் பாதிக்கும்.

தவிர, குறைவான முதலீடு என்பதால், பணியாளர்கள் தொழிலை கற்றுக்கொண்டு தனியாகத் தொழில் ஆரம்பிக்கத் திட்டமிடுவார்கள். இதைத் தவிர்க்க முடியாது. போட்டிகள் அதிகரிக்கும் வேளையில் சொன்ன நேரத்துக்குக் கொடுத்துவிட்டால் தாக்குப்பிடிக்க முடியும்.''