Published:Updated:

SME கைடுலைன்!

தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு... மார்க்கெட்டிங் மந்திரத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்! ச.ஸ்ரீராம் படங்கள்: பா.காளிமுத்து, ச.இரா.ஸ்ரீதர்.

SME கைடுலைன்!

தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு... மார்க்கெட்டிங் மந்திரத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்! ச.ஸ்ரீராம் படங்கள்: பா.காளிமுத்து, ச.இரா.ஸ்ரீதர்.

Published:Updated:

'சின்ன குண்டூசியாக இருந்தாலும் சரி, பெரிய இன்ஜினீயரிங் உபகரணமாக இருந்தாலும் சரி, அதைத் தரமாகத் தயார் செய்வதில் எஸ்.எம்.இ.களான நாங்கள் சிறப்பாகவே செயல்படு கிறோம். ஆனால், நாங்கள் தயார் செய்த பொருளை எங்களால் சரியான முறையில் சந்தைப்படுத்த முடியவில்லை. இதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' எனப் பல சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர்கள் நமக்கு மின் அஞ்சல் அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள்.

எஸ்.எம்.இ.கள் தங்கள் பொருளை எவ்வாறு சந்தைப்படுத்தலாம் என்று எம்.எஸ்.எம்.இ வளர்ச்சி மையத்தின் உதவி இயக்குநர் புனிதவதியிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

'சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் தங்கள் பொருட்களைத் தரமான முறையிலும், நல்ல தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் தயாரித்து வருகின்றனர் ஆனால், அவர்களுக்கு அதனை எப்படி சந்தைப்படுத்துவது, அதாவது எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்பது பற்றிய விழிப்பு உணர்வு சற்று குறைவாகவே உள்ளது. இந்த விஷயத்தில் இரண்டுவிதமான பிரச்னைகளை தொழில்முனைவோர்கள் எதிர்கொள்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

SME கைடுலைன்!

முதலாவதாக, புதிய தொழில்முனைவோர்கள் எங்கு தொழில் தொடங்குகிறார்கள்? என்ன பொருளை தயாரிக்கிறார்கள்? அதற்கான மார்க்கெட் அவர்கள் தொழில் செய்யும் பகுதியில் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். அடுத்து, யாருக்கு அந்தப் பொருள் அதிகம் தேவைப்படுகிறது என்று பார்க்க வேண்டும். அதற்கேற்றவாறு தங்கள் தொழிலை மார்க்கெட் செய்ய வேண்டும்.

தொழிலை தொடங்கும்முன் சிலர் சரியான திட்ட அறிக்கை இல்லாமல் ஆரம்பித்துவிடு கின்றனர். ஒழுங்காக மார்க்கெட்டை ஆராய்ந்து அதற்கு ஏற்றவாறு பொருட்களைத் தயாரித்து சந்தைப்படுத்த வேண்டும். மார்க்கெட் ஆராய்ச்சி செய்யாமல் தொழிலில் இறங்குபவர்கள் ஆரம்பத்தில் மார்க்கெட்டை தவறவிட்டால் அவர்களுக்கு சந்தைப்படுத்துதல் என்பது சவாலாக மாறிவிடுகிறது.

SME கைடுலைன்!

இரண்டாவதாக, ஏற்கெனவே தொழில்முனைவோராக இருப்பவர்கள் அவர்கள் செய்யும் பொருட்களை நல்ல முறையிலும், அதிகத் தரத்தோடும் தயாரித்துவிட்டு, அதனை விற்பனை செய்ய சரியான வழி தெரியாமல் தவிக்கின்றனர். பொருட்களை விற்பதற்கான வாய்ப்பு எங்கு இருக்கிறது என்பது பற்றிய விழிப்பு உணர்வு இல்லாமல் இருப்பதே அவர்களால் சந்தையில் பிரகாசிக்க முடியாமல் போகக் காரணம். சந்தைப்படுத்துதல் குறையும்போது அவர்களால் தங்கள் உற்பத்தி விற்பனை விகிதத்தை சரிவரப் பராமரிக்க முடியாது. அதனைக் கட்டுப்படுத்த சரியான மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்த வேண்டும்.

இவர்கள் செய்யவேண்டிய தெல்லாம், தாங்கள் தயாரிக்கும் பொருட்கள் எங்கு விற்பனை யாகும், யாருக்கு விற்கலாம் என்பது போன்ற தகவல்களின் அடிப்படையில் உத்திகளைப்  பின்பற்றினால் அவர்களால் மார்க்கெட்டில் தங்கள் பொருட்களை விற்க முடியும்.

உதாரணமாக, ஒருவர் வாகன உதிரிபாகம் தயாரிக்கிறார் எனில், அதற்கான வாய்ப்புகள் எங்கு உள்ளது, அதனை வாங்கும் பெரிய நிறுவனங்கள் எவை, தொழில் செய்யும் இடத்திலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது என்பது போன்ற தகவல்கள் தெரிந்தால் மட்டுமே மார்க்கெட்டில் தங்கள் பொருளை சந்தைப்படுத்த முடியும்.

SME கைடுலைன்!

இதுதவிர, அவர்கள் தயாரிக் கும் பொருளை பொறுத்தும் சந்தைப்படுத்துதலுக்கான உத்திகளை பின்பற்ற  வேண்டும். அவர்கள் தயாரிக்கும் பொருள் நுகர்வோர் பயன்பாட்டு பொருளா அல்லது தொழிற்சாலைகளில் பயன் படுத்தும் பொருளா என்பதைப் பொறுத்து உத்திகளை வகுக்க வேண்டும்.

ஒருவேளை, தயார் செய் யப்படும் பொருட்கள், நுகர்வோர் பொருளாக இருந்தால் பி2சி (பிசினஸ் 2 கஸ்டமர்) என்ற முறையில் சந்தைப்படுத்துதல் அவசியம். அதாவது, நாம் தயாரிக்கும் பொருளை நேரடியாக வாடிக்கையாளர்களிடம் விற்கும் முறை. இப்படி செய்யும்போது வாடிக்கையாளர்களிடம் தங்கள் தரம், பொருட்களது சிறப்புத் தன்மை வைத்து பிரபலப்படுத்த வேண்டும்.

SME கைடுலைன்!

அடுத்து, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் பொருட்களாக இருந்தால், அதற்கு பி2பி (பிசினஸ்2பிசினஸ்) என்ற முறையில் சந்தைப்படுத்துதல் அவசியம். அதாவது, நாம் தயாரிக்கும் பொருள் நிறுவனங்களுக்கு நேரடியாக கொண்டு போய் சேர்ப்பது.  இதற்கு சரியான நேரத்தில் சரியான இடத்தில் உள்ள நிறுவனங்களுக்கு கொண்டு போய்ச் சேர்க்குமாறு பொருட்களை சந்தைப்படுத்த

SME கைடுலைன்!

வேண்டும். காலம் தவறாமல்  பொருட்களை சப்ளை செய்வதன் மூலமே   தொடர்ந்து ஆர்டர் பெற முடியும்.

மேலும், பெரிய அளவில் உற்பத்தி செய்யும் பொதுத் துறை நிறுவனங்கள் எஸ்.எம்.இ.களிடமிருந்து கட்டாயம் 20 சதவிகித தயாரிப்புகளை வாங்க வேண்டும் என்பது நடைமுறை விதி. இதற்கு ஒவ்வொரு எஸ்.எம்.இ.யும் அரசிடம் தங்கள் நிறுவனம் பற்றிய தகவல்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். (பார்க்க எதிர்பக்கமுள்ள பெட்டிச் செய்தி!)

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தொழில் துறை மையம் உள்ளது. அதில், எஸ்.எம்.இ.களை மேம்படுத்த மற்றும் அவர்கள் பயன்பெற உதவும் அனைத்துத் திட்டங்களுக்கும் விளக்க மளிக்கப்பட்டு உதவிகளும் வழங்கப்படுகிறது. இதனை எஸ்.எம்.இ.கள் அவசியம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார் புனிதவதி.

தொழிலில் ஜெயிக்க  மார்க்கெட்டிங் மந்திரத்தை கற்றுக்கொள்வது அவசியம் என்பதை எஸ்.எம்.இ.கள் உணரவேண்டும்!

SME கைடுலைன்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism