பிரீமியம் ஸ்டோரி

ஜீரகம்! (Jeera)

அக்ரி கமாடிட்டி!

முக்கிய ஸ்பாட் சந்தைகளில் ஜீரகத்தின் வரத்து குறைந்து, அதேசமயம் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தேவை அதிகரித்ததன்  காரணமாக கடந்த வாரம் ஜீரகத்தின் விலை உயர்ந்து வர்த்தகமானது.  

சர்வதேச அளவில் மொத்த உற்பத்தியில் 70 சதவிகித பங்களிப்பை இந்தியா செய்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் ஜீரகத்தில்      60 - 70% குஜராத்திலும், மீதம் ராஜஸ்தானிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேலும், ஜீரகம் நுகர்விலும் முக்கிய இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து ஜீரகம் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் சிரியா, ஈரான், துருக்கி போன்ற நாடுகள் உள்ளன. சந்தை அறிக்கையின்படி,     உஞ்ஹா சந்தையில் தினவரத்து 20,000 - 25,000 பைகளாக குறைந்துள்ளது (1 பை- 55 கிலோ). இதுவே கடந்த மாதம் தினவரத்தாக சுமார் 75,000 பைகளாக இருந்தது. சிரியா மற்றும் துருக்கியில் உற்பத்திக் குறைவு காரணமாக, இந்திய ஜீரகத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போதைய லெவலில் ஜீரகம் சற்று விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அவ்வாறு ஏற்றம் அடையும்போது, குறுகிய காலத்தில் ரூ.11,500 - 11,700 வரை செல்ல வாய்ப்பிருக்கிறது. முக்கிய சப்போர்ட் லெவல் ரூ.10,750. இந்த லெவலுக்குக் கீழே செல்லும்போதுதான் விலை மேலும் சரிவடைய வாய்ப்பிருக்கிறது.

அக்ரி கமாடிட்டி!

பரிந்துரை: ஜீரகம் (ஜூன் கான்ட்ராக்ட் ). ரூ.10,950 - 11,000 லெவலில் வாங்கலாம். ஸ்டாப்லாஸ் - ரூ.10,750. இலக்கு விலை - ரூ.11,470 - 11,700.

ஏலக்காய்! (Cardamom)

வரத்து குறையும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக கடந்த வாரம் ஏலக்காய் விலை சற்று அதிகரித்து வர்த்தகமானது. கடந்த புதன்கிழமையன்று ஏலக்காய் ஏலமிடும் சந்தைகளில் மொத்த வரத்து 43 டன்னாக இருந்தது.

அக்ரி கமாடிட்டி!

ஸ்பாட் சந்தைகளில் இதன் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.1,072-க்கும், சராசரி விலை கிலோவுக்கு ரூ.833-க்கும் வர்த்தகமாகியது. அண்மையில் ஸ்பைசஸ் போர்டு ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த மே 5 வரையில் ஏலமிடப்பட்டுள்ள மொத்த ஏலக்காய் அளவு 19,516 டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் சராசரி விலை ரூ.630.59 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

சப்போர்ட் லெவல்: ரூ.973 - 945. ரெசிஸ்டன்ஸ் லெவல்: ரூ.1,011 - 1,033.

வரும் வாரத் தில் வரத்து குறைவு காரணமாக ஏலக்காய் விலை அதிகரிக்கலாம்.

 கொத்துமல்லி! (Coriander)

கொத்துமல்லி உற்பத்தி  செய்யும் மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கடந்த வாரம் கொத்துமல்லி விலை சற்று அதிகரித்தே வர்த்தகமானது. சர்வதேச நாடுகளான பல்கேரியா மற்றும் ருமேனியா போன்ற நாடுகளிலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்குத் தேவை இருப்பதாகவும் தெரிகிறது.

அக்ரி கமாடிட்டி!

சப்போர்ட் லெவல்: ரூ.9,400 - 9,270. ரெசிஸ்டன்ஸ் லெவல்: ரூ.9,610 - 9,780. வரும் வாரத்தில் தேவை காரணமாக கொத்துமல்லி விலை அதிகரிக்கலாம்.

படம்: ப.சரவணக்குமார்

மஞ்சள்!  (Turmeric)

அக்ரி கமாடிட்டி!

புதிய மஞ்சள் அறுவடை காரணமாக வரத்து அதிகரிப்பு மற்றும் தேவை குறைவு காரணமாக மஞ்சள் விலை குறைந்தே வர்த்தகமானது. ஈரோடு சந்தைகளில் மஞ்சள் விலை தரக்குறைவு காரணமாக குறைந்தே வர்த்தகமானது. நடுத்தர மஞ்சள் வரத்து காரணமாக வர்த்தகர்கள் கொள்முதல் செய்வது குறைந்தே காணப்பட்டது.

ஈரோட்டில் மழை காரணமாக மஞ்சள் வரத்து குறையும் என்றும், தரமுள்ள மஞ்சள் அடுத்த வாரத்திலிருந்து வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிஜாமாபாத் சந்தையிலும் வரத்தும், விற்பனையும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பரிலிருந்து இந்திய ரூபாயின் மதிப்பு 13% அதிகரித்து காணப்படுகிறது. இதன் எதிரொலி ஏற்றுமதி கமாடிட்டிகளிலும் காணப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் முடிவு நிலையான ஆட்சிக்கு வழி வகுத்திருப்பதால், ரூபாயின் மதிப்பு வலுவடையும். இது, வரும்நாட்களில் மஞ்சள் விலையிலும் எதிரொலிக்கும்.

அக்ரி கமாடிட்டி!

மஞ்சள் (ஜூன் கான்ட்ராக்ட்) தற்போது ரூ.6,800 லெவலில் வர்த்தகமாகி வருகிறது. அடுத்த முக்கிய சப்போர்ட் ரூ.6,500. ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூ.6,900 - 7,150. சந்தை முடிவில் ரூ.6,500-க்கு கீழ் முடிவடையும் பட்சத்தில் அடுத்த சப்போர்ட் லெவல் ரூ.6,200 - 6,050 வரை இறங்கலாம்.

பரிந்துரை: மஞ்சள் (ஜூன் கான்ட்ராக்ட்). ரூ.6,900 லெவலில் விற்கலாம். ஸ்டாப்லாஸ் - ரூ.7,150க்கு மேல். இலக்கு விலை ரூ.6,500.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு