Published:Updated:

பிசினஸ் பண்ணலாம்... பின்னி எடுக்கலாம்!

பியூட்டி பார்லர்... ஜுவல்லரி மேக்கிங்... வே.கிருஷ்ணவேணி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

பிசினஸ் பண்ணலாம்... பின்னி எடுக்கலாம்!

பியூட்டி பார்லர்... ஜுவல்லரி மேக்கிங்... வே.கிருஷ்ணவேணி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:

வியம், ஹெர்பல் பியூட்டி பார்லர், ஜுவல்லரி மேக்கிங், கிராஃப்ட் என்று பல துறைகளிலும் பிஸியாக இருக்கிறார், சென்னை, திருவொற்றியூர் 'ஆலயம் ஆர்ட்ஸ் அண்ட் கிராஃப்ட்ஸ்’ உரிமையாளர் வான்மதி.

''அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கு அலங்காரம் பண்ணி அழகு பார்க்கிற என்னோட ஆர்வம், என்னை பியூட்டிஷியனாக்கியது. அதில் ஸ்பெஷலைஸ்டு கோர்ஸா 'காஸ்மெட்டாலஜி’ மற்றும் 'நேச்சுரோபதி’ படிச்சுட்டு, இன்னிக்கு சான்றிதழ் வகுப்புகளும் எடுத்துட்டு இருக்கேன்.

அழகுக்கலைங்கிறது வெறும் வெளித்தோற்றம் மட்டுமில்ல. உடம்புக்குள்ளயும் அது எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாம நன்மை செய்யணும். இன்னிக்கு வெளியில விற்கிற க்ரீம், ஷாம்பு எல்லாமே வெளிப்புறத் தோற்றத்தை அழகாக்கினாலும், பக்கவிளைவுகள் நிறைய. இதற்கு மாற்றா, மூலிகைகளை பவுடராக்கி அழகுக்காக பயன்படுத்தும்போது, பொலிவையும், நோய் எதிர்ப்பாற்றலையும் பெறமுடியும். பருக்கள், பொடுகு போன்ற அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் இயற்கையான வழிமுறையில் தீர்வுகளைக் கொடுத்துட முடியும்ங்கிறதை ஹெர்பல் பியூட்டிஷியனான பிறகு, முழுமையா தெரிஞ்சுக் கிட்டேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷாம்பு தொடங்கி, முக பவுடர் வரை பக்கவிளைவுகள் இல்லாத மூலிகைகள் மூலமா எளிமையா தயாரிக்கிறதோட, வகுப்புகளும் எடுக்கிறேன். அழகுக்கலைங்கறது எவர்கிரீன் பிசினஸ், பெண்களை சுலபமா ஈர்க்கக் கூடியது, குறைந்த முதலீட் டில் நிறைய லாபத்தை தரக்கூடியது.

பிசினஸ் பண்ணலாம்... பின்னி எடுக்கலாம்!

இன்னொரு பக்கம் ஓவியக்கலையிலும் ஆர்வம் இருந்ததால, அக்ரலிக் பெயின்ட்டிங், தஞ்சாவூர் பெயின்ட்டிங், ஃபேப்ரிக் பெயின்ட்டிங், ஆயில் பெயின்ட்டிங், வார்லி பெயின்ட்டிங், மதுபாணி பெயின்ட்டிங்னு முழுமையா கத்துக்கிட்டு, தொழிலா செய்துட்டு இருக்கேன். பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்புகளும் எடுக்கிறேன். டெரகோட்டா, ஃபேஷன் ஜுவல்லரி, பேப்பர் ஜுவல்லரினு எல்லா வகையான ஜுவல்லரிகள்லயும் நான் எக்ஸ்பர்ட்'' என்று சொல்லும் வான்மதி,

''அம்மா யசோதா, அப்பா ரங்கநாதன் ரெண்டு பேரும் வீட்டுல எனக்குனு தனி அறை ஒதுக்கிக் கொடுத்திருக்காங்க. என்னோட கிரியேட்டிவ் உலகம் அதுதான். ரெண்டு அண்ணா, நான், ஒரு தங்கை, ஒரு தம்பினு எல்லாருமா இருக்கிற எங்க பெரிய குடும்பம்தான், சோர்வில்லாத என் சுறுசுறுப்புக்குக் காரணம்.

மாசத்துக்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாய் சம்பாதிக்கிறேன். பெண்களுக்குப் பிடிச்ச, அத்தியாவசியமான துறைகளில் கால் பதிச்சிருக்கிறதால என்கிட்ட எதாவது ஒரு தொழிலுக்குப் பயிற்சி எடுத்துக்க வர்றவங்க, அடுத்தடுத்த தொழிலையும் எளிமையா கத்துக்கிட்டு போறாங்க. ஒவ்வொரு பெண்ணும் ஏதாவது ஒரு கைத்தொழிலை கண்டிப்பா கத்து வெச்சுக்கணும். குறிப்பா, சம்பாத்தியம் கொடுக்கறத கத்துக்கணும்!'' என்று கண்கள் சிமிட்டுகிறார்!

பிசினஸ் பண்ணலாம்... பின்னி எடுக்கலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism