Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

சே.புகழரசி

கொத்துமல்லி! (Coriander)

அக்ரி கமாடிட்டி!

''தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக கொத்துமல்லி உற்பத்தி குறைவு காரணமாகக் கடந்த ஏப்ரல் மாதத்தில் விலை ஆறு வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. இந்தியாவில் கொத்துமல்லி முக்கிய உற்பத்தி மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் பருவம் அல்லாத மழை காரணமாக உற்பத்தி குறைந்துள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த இரண்டு மாதங்களாக கொத்துமல்லியின் விலை குவிண்டாலுக்கு ரூ.9,400 லெவலில் வர்த்தகமாகி வருகிறது. கொத்துமல்லி ராபி பருவத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. அக்டோபர் - நவம்பர் மாதத்தில் விதைப்பு தொடங்கி, மார்ச் - ஏப்ரலில் அறுவடை ஆரம்பமாகிறது.

கொத்துமல்லி உற்பத்தி தொடர்ந்து கடந்த சில வருடங்களாக அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகக் காணப்படுகிறது. சராசரியாக 5 லட்சம் டன்களுக்குக் கீழாகவே காணப்படுகிறது. கொத்துமல்லி உற்பத்தி மற்றும் நுகர்வு, ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த நான்கு வருடங்களாகவே கொத்துமல்லி ஏற்றுமதி குறைந்துள்ளது. குறிப்பாக, நடப்பு ஆண்டில் முந்தைய ஆண்டைவிடக் குறைந்துள்ளது.

அக்ரி கமாடிட்டி!

உள்நாட்டுச் சந்தைகளில் கடந்த சில ஆண்டுகளாக சப்ளை குறைவு காரணமாக கொத்துமல்லி விலை அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் ஏற்றுமதியும் சற்று குறைந்துள்ளது. இதேபோல, நடப்பு ஆண்டில் உற்பத்தி குறைந்தாலும், கொத்துமல்லி வரத்துக் காலத்தில் விலை அதிகளவு குறையாது. நீண்ட கால நோக்கில் கொத்துமல்லி உற்பத்தி குறைவு காரணமாக விலை அதிகரிக்கலாம்.

அதேசமயம், ஏற்றுமதி வாய்ப்புகள் குறையும்பட்சத்தில் அதிக விலையேற்றம் தடுக்கப்படும். ஏற்றுமதி கமாடிட்டியான கொத்துமல்லி, ரூபாய் மதிப்பு வலுவடைந்து வருவதன் காரணமாக அதிக லாபம் தடுக்கப்படும். மேலும், அடுத்து சில வாரங்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு கொத்துமல்லி விலையில் எதிரொலிக்கலாம்.

கொத்துமல்லி (ஜூன் கான்ட்ராக்ட்) சப்போர்ட் லெவல்: ரூ. 9,000 - 8,850. ரெசிஸ்டன்ஸ் லெவல்: ரூ.9,550 - 9,800.பரிந்துரை: ரூ.9,480 - 9,550 லெவலில் விற்கலாம். கட்டாய ஸ்டாப்லாஸ்: ரூ.9,800. இலக்குவிலை: ரூ.9,000 - 8,850.''

கொண்டைக்கடலை!  (Chana )

கோடைகாலப் பருப்பு வகைகள் உற்பத்தி அதிகரிப்புக் காரணமாக, கொண்டைக்கடலை வரத்து அதிகரிப்பு, அதேசமயம் தேவை குறைவு காரணமாகக் கடந்த வாரம் விலை சற்று குறைந்தே வர்த்தகமானது.

எனினும், தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு கொள்முதலை அதிகரிக்கலாம் என்ற அறிக்கைகள் காரணமாக மஹாராஷ்ட்ரா ஸ்பாட் சந்தைகளில் அதிக விலையிறக்கம் தடுக்கப்பட்டது. மூன்றாவது முறையாக வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2013-14ம் ஆண்டில் பயறுவகைகள் உற்பத்தி 19.8 மில்லியன் டன்னிலிருந்து 19.6 மில்லியன் டன்னாகக் குறையலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

அக்ரி கமாடிட்டி!

மேலும், ராஜஸ்தான் மாநிலத்தில் புதிய பயறு வரத்து அதிகரித்துள்ளது. அதேசமயம், மத்தியப்பிரதேச மாநிலத்தில் வரத்துக் குறையலாம் என்று தெரிகிறது. மேலும், ராஜஸ்தானில் தரம் குறைந்த கொண்டைக்கடலை  வரத்துக் காரணமாக கொள்முதல் தாமதமாகியுள்ளது. எனினும், மத்தியப்பிரதேச மாநில விற்பனை கூட்டுறவு கூட்டமைப்பு 15,091 டன்கள் கொள்முதல் செய்துள்ளது. மேலும், இந்தக் கொள்முதல் சந்தை தலையீடு திட்டத்தின் கீழ் ஏப்ரல் 1 - மே 25 வரை தொடரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியப்பிரதேசத்தில் பருவம் அல்லாத மழை காரணமாக பயிர் சேதம் ஏற்பட்டது. இதனால் தற்போது அறுவடையும் தாமதமாகியுள்ளது. மேலும், ராஜஸ்தான், மஹாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வரும் வாரத்தில் கொண்டைக்கடலை கோடைகால உற்பத்தி அதிகரிப்புக் காரணமாக, அதிக வரத்து இருக்கும் என்று தெரிகிறது. இதனால் கொண்டைக்கடலை வரும் வாரத்தில் விலை குறைய வாய்ப்புகள் அதிகம். அதேசமயம், மஹாராஷ்ட்ராவில் தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு கொள்முதலை அதிகரிக்கும்பட்சத்தில் தேவை அதிகரிக்கலாம். மேலும், 2014-15ம் ஆண்டில் பருவநிலை மாற்றங்கள் இருக்கலாம் என்பதால் அதிக விலை யிறக்கம் தடுக்கப்படலாம்.

சோயாபீன்! (Soybean )

தேவை குறைவு காரணமாக கடந்த வாரம் சோயாபீன் விலை குறைந்தே வர்த்தகமானது. வேளாண்துறை அமைச்சகம் 3-வதாக வெளியிட்ட அறிக்கையின்படி, 2013-14ல் உற்பத்தி 11.9 மில்லியன் டன்னாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவே, 2012-13ல் 14.67 மில்லியன் டன்னாக இருந்தது.

சோயாமீல் ஏற்றுமதி ஏப்ரல் 14-வுடன் ஒப்பிடும்போது, 89,883 டன்னாகக் குறைந்துள்ளது. இது கடந்த மாதத்தோடு ஒப்பிடும்போது 59.73 சதவிகிதமும்,  கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 9.62% குறைவாகும். இதற்குக் காரணம், குறைவான தேவை மற்றும் குறைவான இருப்புக் காரணமாக வெளிநாட்டில் வாங்குவோரின் எண்ணிக்கையும் குறைந்ததே. மேலும், நடப்பு ஆண்டில் எல்நினோ புயல் காரணமாக உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், வரும் வாரத்தில் குறைவான தேவை மற்றும் சோயாமீல் ஏற்றுமதி குறைவு காரணமாக விலை குறையலாம். எனினும், உற்பத்தி பாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பினால் அதிக விலையிறக்கம் தடுக்கப்படலாம்.

அக்ரி கமாடிட்டி!

கடுகு! (Mustard seed)

வரத்து அதிகரிப்பால் கடந்த வாரம் கடுகின் விலை குறைந்தே வர்த்தகமானது. எனினும், கடுகு சக்கை ஏற்றுமதி மற்றும் உற்பத்தி குறையலாம் என்ற மதிப்பீடு காரணமாக அதிகளவு விலையிறக்கம் தடுக்கப்பட்டது.

கடுகு சக்கை ஏற்றுமதி ஏப்ரல் 2014ல், 132% அதிகரித்து 1,25,872 டன்களாக இருந்தது. இதுவே, ஏப்ரல் 2013ல் 54,077 டன்களாக இருந்தது. 2013-14ல் கடுகு பயிரிடப்பட்ட பரப்பளவு 7.13 மில்லியன் ஹெக்டேராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வேளாண்துறை வெளியிட் டுள்ள 3-வது மதிப்பீட்டின்படி, கடுகு உற்பத்தி 7.8 மில்லியன் டன்களாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 2.9% குறைவு. வரும் வாரத்தில் கடுகின் விலை குறைய வாய்ப்புகள் அதிகம்!