Published:Updated:

ஷேர்லக் - விற்கும் எஃப்.ஐ.ஐ.கள், வாங்கும் எம்.எஃப்.கள்!

ஷேர்லக் - விற்கும் எஃப்.ஐ.ஐ.கள், வாங்கும் எம்.எஃப்.கள்!

ஷேர்லக் - விற்கும் எஃப்.ஐ.ஐ.கள், வாங்கும் எம்.எஃப்.கள்!

ஷேர்லக் - விற்கும் எஃப்.ஐ.ஐ.கள், வாங்கும் எம்.எஃப்.கள்!

Published:Updated:

வெள்ளிக்கிழமை மாலை... உள்ளே வரலாமா என்று கேட்டபடி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். வந்தவர், சந்தை பற்றிய செய்திகளை முதலில் சொல்ல ஆரம்பித்தார்.

''மோடியின் புதிய அமைச்சரவை ஜரூராக செயல்படத் தொடங்கி இருந்தாலும்,  சந்தையின் ஏற்றம் தற்போதைக்கு ஒரு சிறு முடிவுக்கு வந்தமாதிரிதான் தெரிகிறது. முக்கியமாக, எஃப்.ஐ.ஐ.கள் பங்குகளை விற்று லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். இந்த வாரத்தில் பல நாட்களில் எஃப்.ஐ.ஐ.கள் பங்குகளை விற்கவே செய்திருக்கிறார்கள். ஆனால், நம்மூர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கத் தொடங்கி இருக்கின்றன. எஃப்.ஐ.ஐ.கள் பங்குகளை விற்பது அடுத்த வாரமும் தொடரும்பட்சத்தில் சந்தை கொஞ்சம் இறங்கவே செய்யும்.

என்றாலும், ஆசிய நாடுகளில் எஃப்.ஐ.ஐ.களால் அதிகம் விரும்பும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தத் தகவல் ஹெச்.எஸ்.பி.சி ஆய்வு அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எஃப்.ஐ.ஐ.கள் மே மாதத்தில் இந்தியப் பங்குச் சந்தையில் 230 கோடி டாலர் முதலீடு செய்துள்ளனர். நடப்பு 2014-ம் ஆண்டில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷேர்லக் - விற்கும் எஃப்.ஐ.ஐ.கள், வாங்கும் எம்.எஃப்.கள்!

இதுவரையில் எஃப்.ஐ.ஐ.கள் முதலீடு 780 கோடி டாலருக்கு அதிகமாக உள்ளது. எனவே, நீண்ட காலத்தில் நம் சந்தை உயரவே செய்யும் என்பதால், நல்ல பங்குகளில் நிச்சயம் முதலீடு செய்யலாம்.

மோடியின் அரசு உள்கட்டமைப்புப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது உறுதியாகியிருக்கிறது. இதைப் பயன்படுத்தி லாபம் பார்க்கும் விதமாக பி.எஸ்.சி இந்தியா இன்ஃப்ரா இண்டெக்ஸ்-ஐ புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இண்டெக்ஸ்-ல் எரிசக்தி,

போக்குவரத்து, வங்கிசாரா நிதி அமைப்புகள், டெலிகாம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 30 நிறுவனப் பங்குகள் இடம்பெறுகிறது. ரிஸ்க் எடுக்கத் தயார் என்கிறவர்கள் இந்த இண்டெக்ஸில் முதலீடு செய்யலாம்.

உள்கட்டமைப்புத் துறை வளர்ச்சி அடையும்போது வங்கிக் கடனுக்கான தேவை அதிகரிக்கும். இதனைப் பயன்படுத்திக்கொள்ள யெஸ் பேங்க் அதன் பங்கு விற்பனை மூலம் ரூ.3,000 கோடி திரட்ட இருக்கிறது. குறிப்பாக, கியூஐபி என்கிற தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடம் இந்த நிதி திரட்டப்படுகிறது'' என்றவருக்கு சில்லென்று ரோஸ்மில்க் தந்தோம்.

''பொதுத்துறை வங்கிகளில் மக்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என செபி சொல்கிறதே?'' என்று கேட்டோம்.

''பொதுத்துறை வங்கிகளில் தற்போது பொதுமக்களின் பங்களிப்பு 10 சதவிகிதமாக இருக்கிறது. இதை 25 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என செபி, மத்திய நிதி அமைச்சகத்துக்குக் கோரிக்கை வைத்திருக்கிறது. இது ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வந்தால், பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர் களின் பங்களிப்பு கணிசமாக அதிகரிக்கும்'' என்றார்.

''காலாண்டு ரிசல்ட்களில் முக்கியமாகச் சொல்கிறமாதிரி ஏதும் இருக்கிறதா?'' என்று வினவினோம்.

''சிக்கலில் இருந்த ரான்பாக்ஸி நிறுவனத்தை வாங்கிய சன் பார்மாவின் நிகர லாபம் கணிசமாக அதிகரித் திருக்கிறது. மார்ச் காலாண்டில், இதன் நிகர லாபம் எதிர்பார்ப்புகளை எல்லாம் தாண்டி 57% அதிகரித்து ரூ.1587 கோடியாக உயர்ந்துள்ளது. உள்நாடு மற்றும் அமெரிக்க விற்பனை அதிகரித்ததே இதற்கு காரணம்.

ஆனால், நால்கோவின் நிகர லாபம் 30 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. செலவுகள் கூடி, வருமானம் குறைந்ததே இதற்கு காரணம். ஆயில் இந்தியாவின் நிகர லாபம் 26% குறைந்திருக்கிறது. உற்பத்தி குறைந்ததும், மானியச் சுமை கூடியதும் காரணம் என்கிறார்கள்.

வொக்கார்ட் நிகர லாபம் 78% குறைந்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து சுகாதாரம் தொடர்பான பிரச்னையில் சிக்கி அபராதம் கட்டிய தால் லாபம் குறைந்துள்ளதாம். இந்தப் பங்குகளில் முதலீட்டாளர்கள் கொஞ்சம் உஷாராக இருப்பது நல்லது'' என்றவர், கிளம்பத் தயாரானார்.

''ஆர்பிஐ-ன் நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்டம் ஜூன் 3-ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம் டிரேடர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது'' என எச்சரித்துவிட்டு, வீட்டுக்குக் கிளம்பினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism