கேள்வி - பதில்

?2009-ம் ஆண்டு டிசம்பரில் என் மகனின் படிப்பு செலவுக்காக 2.4 லட்சம் ரூபாய் பொதுத்துறை வங்கியில் கடன் வாங்கியிருந்தேன். இந்தக் கடனுக்கு வட்டி செலுத்துமாறு கூறுகிறார்கள். இது சரியா?

- ஜானகிராமன், கீழ்ப்பாக்கம். ஜி.கந்தசுப்ரமணியன், உதவி பொது மேலாளர், எஸ்.பி.ஐ. வங்கி, சென்னை.

''எஸ்.பி.ஐ.யை பொறுத்தவரை, 2009 டிசம்பர் வரை வழங்கப்பட்ட கல்விக் கடனுக்கு, வருடத்துக்கு 4.5 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ளவர்கள் படிக்கும் காலத்தில் வட்டி செலுத்த தேவையில்லை. படித்து முடித்தபின் கடன் தொகையோடு வட்டியும் செலுத்த வேண்டும். அதுவே, 4.5 லட்சத்துக்கு அதிகமாக வருட வருமானம் உள்ளவர்கள் படிக்கும் காலத்துக்கும் சேர்த்தே கல்விக் கடனுக்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.''

? ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் நிறுவனத்தின் ஒவ்வொரு காலாண்டுக்கும் லாபம் குறைந்துகொண்டே வருகிறது. இந்தப் பங்கை என்ன செய்வது?

- முத்து வள்ளியப்பன், கடலூர். ஆர்.சுபாஷ், நிர்வாக இயக்குநர், டி.ராம் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்.

''இந்தப் பங்கின் தற்போதைய விலை ரூ.300. இதன் பி/இ விகிதம் 21-ஆக உள்ளது. உலகப் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உலக அளவில் எஃகு மற்றும் இரும்பின் விலை குறைந்ததும், நீதிமன்ற உத்தரவால் பல சுரங்கங்கள் மூடப்பட்டதும் ஜிண்டால் ஸ்டீல் பங்கின் விலை குறைந்ததற்கு முக்கிய காரணங்கள்.

கடந்த இரண்டு காலாண்டுகளாக இந்த நிறுவனத்தின் லாபம் மற்றும் செயல்பாட்டில் சிறிய முன்னேற்றம் காணப்படுகிறது.

ஆனால், இந்தப் பங்கைவிட டாடா ஸ்டீல் மற்றும் என்.எம்.டி.சி பங்குகள் அடுத்த மூன்று ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே, டாடா ஸ்டீல், என்.எம்.டி.சி பங்குகளில் முதலீடு செய்யலாம்.''

?என் குழந்தைக்கு பிறக்கும்போதே மஞ்சள் காமாலை தாக்கி இருந்தது. இந்தச் சிகிச்சைக்கு ஃப்ளோட்டர் பாலிசியில் க்ளைம் கிடைக்குமா? நான் ஏற்கெனவே வைத்திருக்கும் ஃப்ளோட்டர் பாலிசியில் என் பெயரும், என் மனைவியின் பெயரும் மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

- கதிரவன், சென்னை. ரவிக்குமார், உதவி மேலாளர், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனி.

''நீங்கள் எடுத்திருக்கும் ஃப்ளோட்டர் பாலிசியில் குழந்தையின் சிகிச்சைக்கு க்ளைம் கிடைப்பதற்கான வாய்ப்பில்லை. ஏனெனில், நீங்கள் எடுத்திருக்கும் பாலிசி உங்களுக்கும், உங்களின் மனைவிக்கும் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தை பிறந்த 90 நாட்களுக்குப் பிறகுதான் கூடுதல் பிரீமியம் செலுத்தி குழந்தையின் பெயரை பாலிசியில் சேர்க்க முடியும்.''

?என் அப்பாவின் பூர்வீகச் சொத்து 300 சதுர அடி காலிமனை உள்ளது. இதில் வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்குமா?

- எட்வின், ஆலந்தூர். இந்திரா பத்மினி, பொதுமேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மத்திய அலுவலகம், சென்னை.

''300 சதுர அடி இடத்தில் வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்காது. ஏனெனில், வீடு கட்டுவதற்கு குறைந்தபட்சம் 550 சதுர அடி இருக்க வேண்டும். இதற்கு குறைவாக இருப்பதால் கடன் கிடைக்காது.''

? ஹெச்.டி.எஃப்.சி. டாப் 200 திட்டத்தில் இரண்டு வருடத்துக்குமுன் நீண்ட கால நோக்கத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்தேன். இந்த ஃபண்ட் தற்போது நல்ல லாபத்தில் உள்ளது. இந்த யூனிட்களை விற்றுவிடலாமா அல்லது தொடர்ந்து வைத்திருக்கலாமா?

- கவிதா, மதுரை. வி.டி.அரசு, நிதி ஆலோசகர்.

''இந்த ஃபண்டை தொடர்ந்து வைத்திருப்பது நல்லது. ஏனெனில், இந்த ஃபண்ட் கடந்த 18 ஆண்டு காலத்தில் 16 ஆண்டுகள் சந்தையைவிட அதிக வருமானம் தந்துள்ளது.

நீண்ட காலமாக திறமையான ஃபண்ட் மேனேஜர் பிரஷாந்த் ஜெயினால் இந்த ஃபண்ட் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.''