Published:Updated:

சந்தை ஏற்றம்: சிறுமுதலீட்டாளர்கள் தவறவிடாமல் லாபம் பார்ப்பது எப்படி?

சி.சரவணன்.

சந்தை ஏற்றம்: சிறுமுதலீட்டாளர்கள் தவறவிடாமல் லாபம் பார்ப்பது எப்படி?

சி.சரவணன்.

Published:Updated:

பொதுவாக, சந்தை இறக்கத்தில் இருக்கும்போது சிறுமுதலீட்டாளர்கள் அதில் முதலீடு செய்ய நினைப்பதே இல்லை. ஆனால், சந்தை ஏறத் தொடங்கியதும் பல பங்குகள் விலை கணிசமாக உயர்ந்துவிடுகிறது. இதன்பிறகே முதலீடு செய்ய வருகிறார்கள். இதனால் முழுமையான பலன் அவர்களுக்குக் கிடைக்காமலே போகிறது. இந்த நிலையில் சந்தை ஏற்றத்தை சிறுமுதலீட்டாளர்கள் எப்படி தவறவிடாமல் நல்ல லாபம் பார்க்கலாம் என்பதற்கான வழிமுறைகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார், சென்னையைச் சேர்ந்த பங்குச் சந்தை நிபுணர் கோபால கிருஷ்ணன்.

''2013 ஆகஸ்ட் இறுதியில் 5200 நிலையில் இருந்த நிஃப்டி, ஒன்பது மாதங்களில் 7300 புள்ளிகளை எட்டிப் பிடித்தது. ஆனால், பெருவாரியான சிறுமுதலீட்டாளர்கள் இந்தச் சந்தை ஏற்றத்தில் பங்கேற்கவில்லை என்பதுதான் நிதர்சன உண்மை. அதற்கான காரணங்களை ஆராயும்முன், சந்தையில் முதலீடு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து உலகின் சிறந்த முதலீட்டாளர் வாரன் பஃபெட் கூறியிருப்பதை நினைவுபடுத்திக்கொள்வது நல்லது. முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையை எப்படி அணுகவேண்டும் என்பதை அவர் இரண்டே வரிகளில் கூறுகிறார்.

சந்தை ஏற்றம்: சிறுமுதலீட்டாளர்கள் தவறவிடாமல் லாபம் பார்ப்பது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அடுத்தவர்கள் அஞ்சும்போது, நீங்கள் பேராசைப்பட வேண்டும். அடுத்தவர்கள் பேராசைப்படும்போது நீங்கள் அஞ்ச வேண்டும். பங்குச் சந்தை என்பது பணம் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல, மனமும் சம்பந்தப்பட்ட விஷயம். பங்குச் சந்தையின் அடிப்படையான விதி, விழும்போது வாங்க வேண்டும்; உயரும்போது விற்க வேண்டும் (ஙிuஹ் றீஷீஷ், ஷிமீறீறீ லீவீரீலீ).  

ஆனால், சிறுமுதலீட்டாளர்களுக்கு உள்ள முக்கிய சவால், சந்தையின் உயர்வும் வீழ்ச்சியும் எந்த அளவு இருக்கும் என்பதை அறிவதுதான்.

சென்ற ஆண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ந்தது. அரசின் மெத்தனம், பணவீக்க உயர்வு, வட்டி விகித உயர்வு, தொழிற்துறை வீழ்ச்சி போன்ற விஷயங்கள் முதலீட்டாளர்களை நம்பிக்கை இழக்கச் செய்தன. நிஃப்டி ஆகஸ்ட் முடிவில் 5200-5300 லெவலை தொட்டது. அதன்பிறகு புதிய ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனின் நடவடிக்கைகள் ரூபாய்க்கு தெம்பு ஊட்டியது.

நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும்  படிப்படியாக சந்தை உயர்ந்துகொண்டே இருந்தும் சிறுமுதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. சிறு முதலீட்டாளர்களில் பலர் இன்னும் தயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்றவர், இந்த நிலையை மாற்றி, சந்தையின் போக்கில் எப்படி சிறுமுதலீட்டாளர்கள் லாபம் பார்க்க முடியும் என்பதை விளக்கிச் சொன்னார் கோபாலகிருஷ்ணன்.

''சில பங்குகளின் விலை மாற்றத்தை (பார்க்க அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணை)ஆராயும்போது சிறுமுதலீட்டாளர்கள் எவ்வாறு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இருக்கலாம் என்பதைக் காணலாம்.  அண்மைக்காலத்தில் ரூபாய் மதிப்பு வளர்ச்சி ஏற்பட்டதைத் தவிர்த்து, பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. இருந்தும் இந்தியப் பங்குச் சந்தை சரிவிலிருந்து, மீண்டு உயர்ந்து கொண்டே இருந்ததற்கு காரணம் பாசிட்டிவ் சென்டிமென்ட் மட்டும்தான். மாற்றம் நிகழும் என்ற மனோநிலையில், பல தரமான பங்குகள் இந்தக் காலகட்டத்தில் 100% லாபம் தந்திருக்கிறது.

சந்தை ஏற்றம்: சிறுமுதலீட்டாளர்கள் தவறவிடாமல் லாபம் பார்ப்பது எப்படி?

எல்லாம் சரிதான். ஆனால், எப்படி இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவது என்பது சிறுமுதலீட்டாளர்களின் கேள்வி, நியாயமான கேள்விதான். உதாரணத்துக்கு, பி.ஹெச்.இ.எல் ஒரு தரமான பொதுத்துறை பங்கு. பொருளாதாரத் தேக்கத்தால் பாதிக்கப்பட்ட நிறுவனம். பங்கு விலை ரூ.111 நிலையை எட்டியபோது, அதன் புக் வேல்யூ, பி/இ விகிதம் போன்றவற்றை ஆராய்ந்தால், ரூ.111 என்பது ஒரு நல்ல விலை என்பதை உணரலாம். டெக்னிக்கல் லெவலில் பார்க்கும்போது, ஓவர் சோல்டு நிலையில் இருந்தது. பங்கின் விலை மீண்டும் உயரும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.

சிறுமுதலீட்டாளர்களுக்கு ஃபண்டமென்டல் மற்றும் டெக்னிக்கல் ஆராய்ச்சி அறிமுகம் இல்லாவிட்டாலும், பி.ஹெச்.இ.எல் ஒரு முன்னணி நிறுவனம் என்றும், அதன் உண்மையான விலையைக் காட்டிலும் சந்தை விலை (மார்க்கெட் விலை) கடுமையாக வீழ்ந்துள்ளது என்பதை உணர்ந்தாலே போதும், முதலீட்டை ஆரம்பித்துவிடலாம். ஒருவர் பி.ஹெச்.இ.எல் 100 பங்குகள் வாங்குவது என்று முடிவு செய்தால், சராசரி முறை (ஆவரேஜிங்) என்பது ஒரு சரியான வழி.

சந்தை ஏற்றம்: சிறுமுதலீட்டாளர்கள் தவறவிடாமல் லாபம் பார்ப்பது எப்படி?

அதைப் பின்வரும் உதாரணத்தின் வாயிலாகப் பார்க்கலாம். மார்க்கெட் டேர்னிங் (சந்தையின் போக்கை கணித்தல்) என்பது சிறு முதலீட்டாளர்களுக்கு எப்போதும் எந்த சந்தையிலும் ஒரு சவாலான விஷயம்தான். 'குறைந்த விலையில் வாங்கு, அதிக விலையில் விற்றுவிடு’ என்பது மார்க்கெட் டேர்னிங்கைக் குறிக்கும். சிறுமுதலீட்டாளர்களுக்கு அது ஒரு சவால் என்றாலும், அவர்கள் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

வாங்கும்போதும், விற்கும்போதும் நடுத்தர கால முதலீட்டில் ஆவரேஜிங் முறையைப் பின்பற்றலாம். இதை பி.ஹெச்.சி.எல் உதாரணத்தின் மூலம் பார்த்தோம். நீண்ட கால சிறுமுதலீட்டாளர்கள் தரமான பங்குகளை எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து வாங்கி வரும்போது மார்க்கெட் டேர்னிங் சிக்கலைத் தவிர்த்து, நீண்ட கால அடிப்படையில் லாபம் சம்பாதிக்க முடியும்.

சிறுமுதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், மார்க்கெட் சென்டிமென்டைதான். வாரன் பஃபெட் கூறுவதுபோல், மனோநிலை வீக்காக இருக்கும்போது வாங்கத் துவங்க வேண்டும். சென்டிமென்ட் பாசிட்டிவாக இருக்கும் போது விற்கத் துவங்க வேண்டும்.

பி.ஹெச்.இ.எல் பங்குகளை எப்படி சராசரி செய்து வாங்கி, விற்றிருந்தால் லாபம் பார்த்திருக்கலாம் என்பதைப் பார்ப்போம்.

சந்தை ஏற்றம்: சிறுமுதலீட்டாளர்கள் தவறவிடாமல் லாபம் பார்ப்பது எப்படி?

பி.ஹெச்.இ.எல் பங்கின் வலிமையான ஆதரவு விலை ரூ.200-ஆக உள்ளது. இருமுறை இந்த விலையைத் தாண்டி இருக்கிறது. அதன்பிறகு அதனைவிட இறங்கி இருக்கிறது. அந்த வகையில் 200 ரூபாய்க்கு கீழே அதனை சராசரி செய்வது லாபகரமாக இருக்கும்.

முதலீடு

(மாதத்தின் முதல் வர்த்தகத் தினத்தில் முதலீடு)

சந்தை ஏற்றம்: சிறுமுதலீட்டாளர்கள் தவறவிடாமல் லாபம் பார்ப்பது எப்படி?

சராசரி விலை  ரூ.149.60  மொத்தம் 125 பங்குகள்

மொத்த முதலீடு 149.60* 125 = 18,700

விற்பனை

(மாதத்தின் முதல் வர்த்தக தினத்தில் பங்கு விற்பனை)

விற்பனை தேதி   விலை பங்கு எண்ணிக்கை

சந்தை ஏற்றம்: சிறுமுதலீட்டாளர்கள் தவறவிடாமல் லாபம் பார்ப்பது எப்படி?

இங்கே பி.ஹெச்.இ.எல் நிறுவனப் பங்குகள் 125 சராசரி விலை ரூ.149.60-ல் வாங்கப்பட்டிருக்கிறது. இதுவே, சராசரியாக ரூ.176-க்கு விற்கப்பட்டிருக்கிறது. அதாவது, ரூ.3300 லாபம் கிடைத்திருக்கும். இது 17.65% வருமானமாகும்.

இந்த முதலீட்டுக் காலத்தில் பி.ஹெச்.இ.எல் பங்கின் விலை குறைந்தபட்சம் 101 ரூபாய்க்கும், அதிகபட்சம் ரூ.278-க்கும் சென்றிருக் கிறது. இதில் சராசரியாக வாங்கி, சராசரியாக விற்றதில் மட்டுமே 17.65% லாபம் கிடைத்திருக்கிறது. இதுவே, நின்று நிதானித்து மிகக் குறைந்த விலையில் வாங்கி, மிக அதிக விலையில் விற்றிருந்தால் இன்னும் அதிக லாபம் பார்த்திருக்க முடியும்.

வாங்கும்போதும், விற்கும்போதும் ஆவரேஜிங் முறையைப் பின்பற்றினால் நிச்சய பலன் உண்டு. இந்த யுக்தி குறைந்தபட்சம்/அதிகபட்சம் லெவலை தெரியாமல் இருக்கும் சிறுமுதலீட்டாளர்களுக்கு ஓர் எளிய ஃபார்முலா என்று சொல்லலாம்.

எஸ்.ஐ.பி. முறை!

பி.ஹெச்.இ.எல் பங்கை எஸ்.ஐ.பி. முறையில் ஓராண்டில் வாங்கி இருந்தால் எப்படி லாபம் சம்பாதித்து இருக்க முடியும் என்பதைப் பார்க்கலாம்.

பி.ஹெச்.இ.எல் ஓராண்டு எஸ்.ஐ.பி. (ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, தலா 10 பங்குகள் வாங்கியதாக கணக்கு )

சந்தை ஏற்றம்: சிறுமுதலீட்டாளர்கள் தவறவிடாமல் லாபம் பார்ப்பது எப்படி?

இந்தப் பங்குகளை மே 27-ம் தேதி ரூ.245-க்கு விற்றால் 245 X 120 = ரூ. 29,400

இங்கே முதலீட்டு மீதான வருமானம் ரூ.49.4%

இனி வரக்கூடிய காலங்களில் பங்குச் சந்தையின் போக்கை கணிக்க முடியாமல் தவிக்கும் முதலீட்டாளர்கள், தரமான பங்குகளை ஆவரேஜிங் முறையில் வாங்க, விற்க பழகிக்கொண்டால், நல்ல லாபம் ஈட்டலாம்.

இப்படி முதலீட்டுக்கு பங்குகளைத் தேர்வு செய்யும்போது, ப்ளூசிப் பங்குகளை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், பொருளாதார நிலைமைகளை தொடர்ந்து கவனித்து வந்தால் கூடுதல் லாபம் பார்க்க முடியும்.  ஓரளவு ஃபண்டமென்டல் ரிசர்ச் பழகிக்கொண்டால், வாங்குவது இன்னும் சிறப்பாக அமையும். நீண்ட கால முதலீட்டாளர்கள் எல்லா காலகட்டத்திலும் பங்குகளை வாங்கும்போதும் கணிசமான லாபத்தை ஈட்டலாம்'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism