தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...

ஒரு எஸ்.எம்.இ என்பவர் என்னதான் அதிநவீன தொழில்நுட்பத்தில், சிறப்பான உற்பத்தித் திறன்கொண்ட தொழிற்சாலை மூலம் தரமாக பொருட்களைத் தயாரித்தாலும், அதனால் அந்தப் பொருள் மக்கள் மனத்தில் இடம்பெற்றுவிடாது. எஸ்.எம்.இ.கள் தயாரிக்கும் பொருள் எந்தமாதிரியாக பேக்கிங் செய்யப்பட்டு வாடிக்கையாளரைச் சென்றடைகிறது என்பதே முக்கியம். சிறு மற்றும் குறுந் தொழில்முனைவோர்கள் தங்கள் தயாரிப்புகளை சிறப்பாக பேக்கேஜிங் செய்வது எப்படி என்பது குறித்து சென்னை டான்ஸ்டியா அமைப்பின் பொதுச்செயலாளர் சி.கே.மோகனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

''ஒரு பொருளை என்னதான் தரமாகத் தயாரித்தாலும், அது மக்கள் மனத்தில் நிற்க வேண்டுமெனில் கவர்ச்சிகரமான முறையில் அந்தப் பொருளை பேக்கேஜ் செய்வது அவசியம். அதன்பிறகுதான் அதன் தரம், விலை போன்ற விஷயங்களை வாடிக்கையாளர்கள் பார்ப்பார்கள். பேக்கேஜிங்குக்கு அதிகத் தொகை செலவாகுமே, குறைந்த செலவில் பேக்கேஜிங் செய்தால் மக்கள் வேண்டாம் என்றா சொல்லிவிடப் போகிறார்கள் என்றெல்லாம் நாமே நினைத்துக்கொள்வது உண்டு. ஆனால், ஒரு பொருளை எடைபோட முதல் அம்சமாக இருப்பது பேக்கேஜிங்தான். எனவே, இதற்கு செலவு செய்யும் பணத்தை ஒரு முதலீடாகவே பார்க்க வேண்டும். தரமான பொருளை சிறப்பாக பேக்கேஜிங் செய்தால், அதன் மதிப்பு சந்தையில் வெகுவாக உயரும்.

சிறப்பாக பேக்கேஜிங் செய்வதற்கு சில எளிய வழிகள் உள்ளன. முதலில் ஒரு நல்ல டிசைனிங்

ஆலோசகரை அணுகி, நீங்கள் தயாரிக்கும் பொருளுக்கு ஏற்ப டிசைனைத் தேர்வு செய்து தரச்சொல்வது அவசியம். ஸ்டீவ் ஜாப்ஸ் தனது ஆப்பிள் கம்ப்யூட்டரை பேக்கேஜ் செய்ய பல டிசைன்களை தயார் செய்தார். கடைசியில் அதிலிருந்து சிறப்பான ஒன்றையே தேர்வு செய்தார். இன்று ஆப்பிள் கம்ப்யூட்டர் உலகம் முழுக்க பேசப்பட இதுவும் ஒரு காரணம்.

எல்லாப் பொருட்களுக்கும் ஒரே மாதிரியான பேக்கேஜ் செய்வது கூடாது. பொருட்களின் தன்மைக்கேற்ப பேக்கேஜ் செய்ய வேண்டும். உதாரணமாக, நுகர்பொருட்களை பேக்கேஜ் செய்யும்போது அதன் வடிவமைப்பு மக்களின் கவனத்தை ஈர்க்கிற மாதிரியும், அதன் தரத்தைக் காட்டுகிறமாதிரியும் இருக்க வேண்டும். நுகர்பொருட்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பிற நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களுடன் வேறுபடுத்திக்காட்ட வித்தியாசமான பேக்கேஜிங் அவசியம். பெரிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் தரத்தில் காட்டும் அதே அக்கறையை பேக்கேஜ் செய்வதிலும் காட்டி மக்களை எளிதாக ஈர்க்கிறது.

முக்கியமாக, உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் சிறுதொழில்முனைவோர்கள் பேக்கேஜ் என்ற விஷயத்தில் தங்கள் தரத்தை நிரூபிக்கத் தவறினால் அவர்கள் தயாரிக்கும் பொருள் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பைப் பெறமுடியாமல் போகும்.

எந்தப் பொருளாக இருந்தாலும் மக்களின் கவனத்தைக் கவரக்கூடிய அதேவேளையில், பாதுகாப்பான முறையில் பேக்கேஜ் செய்வது அவசியம். சில விலை மதிப்புள்ள பொருட்கள் நீண்ட தூரத்தில் இருக்கும் ஊர்களுக்கு அனுப்பும்போது அது பாதிப்படையாமல் இருக்கிறமாதிரி பேக்கேஜ் செய்யவேண்டும். கீழே விழுந்தால் உடைந்துபோகிறமாதிரி இருக்கும் பொருட்களைப் பாதுகாப்பாக பேக்கேஜ் செய்ய வேண்டும்.

ஆக, பேக்கேஜிங்தான் ஒரு பொருளின் விற்பனையை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாக விளங்குகிறது. தரம், உற்பத்தி, மார்க்கெட்டிங் எனப் பல துறைகளில் சிறப்பாகச் செயல்படும் ஒருவர் பேக்கேஜிங்கிலும் கவனம் செலுத்தினால் சிறுதொழில்முனை வோரும் பெரிய நிறுவனங்களோடு மார்க்கெட்டில் போட்டியிட முடியும்'' என்றார் சி.கே.மோகன்.

ஆள் பாதி; ஆடை பாதி என்பதுபோல, பேக்கேஜிங்கிலும் கவனம் செலுத்தினால் நிச்சயம் வெற்றிதான்!

படங்கள்: பா.காளிமுத்து.