Published:Updated:

அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

அக்ரி கமாடிட்டி!

செ.கார்த்திகேயன்

Published:Updated:

மஞ்சள் (TURMERIC)

கடந்த வாரத்தில் மஞ்சள் விலையானது வர்த்தக ஆரம்பத்தில் குறைந்தும், முடியும்போது அதிகரித்தும் வர்த்தகமானது. ஆனால், ஈரோடு சந்தையில் தரம் குறைந்த மஞ்சள் வரத்து காரணமாக விலை குறைந்தே வர்த்தகமானது. அதனால் சந்தைக்கு வந்த 4,000 பைகளில் (ஒரு பை என்பது 75 கிலோ) 25 பைகளே விற்றன.

ஆந்திர மாநிலத்தின் தோட்டக்கலை துறை சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில் ஆந்திர மாநிலத்தின் மஞ்சள் உற்பத்தி 11% குறைந்து, 1.02 மில்லியன் டன்னாக இருப்பதைக் குறிப்பிட்டிருக்கிறது. மஞ்சள் அதிகமாக உற்பத்தியாகும் தமிழ்நாட்டின் சில பகுதிகள், கர்நாடகாவின் தெற்குப் பகுதி, ஆந்திரப்பிரதேசம், கேரளா மற்றும் புதுச்சேரி போன்ற இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளதால் இனி தரமுள்ள மஞ்சள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அக்ரி கமாடிட்டி!

 ஜீரகம் (JEERA)

கடந்த வாரத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச தேவை குறைந்ததன் காரணமாகவும், வரத்து அதிகரித்ததாலும் ஜீரகத்தின் விலை குறைந்தது.  ஜீரகம் உற்பத்தி அதிகரித்ததுதான் கடந்த வாரத்தில் அதன் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தியிருக்கிறது. நடப்பு 2013-14-ம் ஆண்டில் குஜராத்தில் ஜீரகம் உற்பத்தியானது 36% அதிகரித்து, 3,19,000 டன் களாக உள்ளது என ஆந்திர விவசாயத் துறையானது தெரிவித்துள்ளது. ஜீரக உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சிரியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் ஜீரக உற்பத்தி குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அடுத்துவரும் வாரத்தில் ஜீரகத்தின் விலை அதிகரித்து வர்த்தகமாகும்.

அக்ரி கமாடிட்டி!

 ஏலக்காய் (CARDAMOM)

கடந்த வாரத்தில் ஏலக்காய் விலை குறைந்ததற்குக் காரணம், அதற்கான தேவை குறைந்ததுதான். 2013-14-ம் ஆண்டின் ஏற்றுமதியானது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டால், வருமானத்தின் அடிப்படையில் அதிகமாகவே இருக்கிறது. இந்தியாவின் அனைத்து ஏல மையங்களில் இருந்து இருப்பு ஏலக்காய்கள் விற்கப்பட்டுவிட்டதாகவும் சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. மே 15, 2014 வாக்கில் 19,893.40 டன்கள் (சராசரி விலை ரூ.633.70/ கிலோ) விற்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தில் 12,171.30 டன்கள் (சராசரி விலை 747.23/கிலோ) விற்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வியாழக்கிழமையில் மொத்த வரத்து 36 டன்கள் (ஒரு கிலோ ஏலக்காயின் சராசரி விலை ரூ.718-1,037).

அக்ரி கமாடிட்டி!

கொத்துமல்லி (CORIANDER)

கடந்த வாரத்தில் கொத்துமல்லி விலை அதிகரித்து வர்த்தகமானது. இதற்கு முக்கியக் காரணம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேசத்தில் நடப்புப் பருவத்தின் கடைசி அறுவடையே. ஆந்திர மாநிலத்தின் தோட்டக்கலைத் துறை சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொத்துமல்லி அறுவடையானது சென்ற ஆண்டைவிட 14% குறைந்து 12,379 டன்னாக இருக்கும் எனச் சொல்லியிருக்கிறது. பல்கேரியா மற்றும் ருமேனியாவில் உற்பத்தி குறைந்ததாலும், தரமான கொத்துமல்லி வரத்து குறைந்ததாலும் ஏற்றுமதி தேவை அதிகரித்தது. கடந்த வாரம் புதன்கிழமையன்று முக்கிய கொத்துமல்லி சந்தையான ராஜஸ்தானில் வரத்து 8,000 பைகளாக இருந்தது (ஒரு பை என்பது 40 கிலோ). இது அதற்கு முந்தைய தினத்தைவிடக் குறைவாகும்.

அக்ரி கமாடிட்டி!
அக்ரி கமாடிட்டி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism