Published:Updated:

ஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?

ஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?

 கேள்வி - பதில்

?  மெடிக்கல் ஸ்கேன் சென்டர் வைத்திருக்கிறேன். இங்குள்ள ஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

- பாலசூரியன், மயிலாடுதுறை.  ஜெ.ஜெயந்தி, மண்டல மேலாளர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி, சென்னை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நீங்கள் வைத்திருக்கும் ஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். தீ விபத்து பாலிசி அல்லது எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட் பாலிசியை (Electronics Equipment Policy) எடுத்துக்கொள்ளலாம். தீ விபத்து பாலிசியில் ஓர் இடத்தில் உள்ள அனைத்து மெஷின்களுக்கும் சேர்த்துதான் பாலிசி எடுக்க முடியும். எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட் பாலிசியில் தனிப்பட்ட மெஷின்களுக்கு கவரேஜ் பெற முடியும்.

எலெக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட் பாலிசியில் மெஷின் பயன்பாடு, பராமரிப்பு, வைத்திருக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரீமியம் நிர்ணயிக்கப்படும். எப்போது வாங்கிய மெஷினாக இருந்தாலும், தற்போதைய சந்தை மதிப்புக்கு கவரேஜ் பெறமுடியும்.

ஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?

தீ விபத்து பாலிசியில் இந்த வசதி பெற முடியாது. தோராயமாக தீ விபத்து பாலிசியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கவரேஜ் பெறுவதற்கு 50 ரூபாய் பிரீமியமாக இருக்கும். அதேபோல, எலெக்ட்ரானிக் அண்ட் எக்யூப்மென்ட் பாலிசியில் ஒரு லட்சம் கவரேஜ் பெறுவதற்கு 700 ரூபாய் பிரீமியமாக இருக்கும்.''

? நான் அரசு ஊழியர். வயது 30. மாதம் 2 ஆயிரம் ரூபாய் சேமிக்கத் திட்டமிட்டுள்ளேன். இந்தப் பணம் எனக்கு 60 வயதில்தான் தேவை. எனக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைக் கூறவும்.

 - எம்.பரணிதரன், ஈரோடு. என்.ஸ்ரீகாந்த், நிதி ஆலோசகர்.

''நீங்கள் நீண்ட காலத் தேவைக்காக முதலீடு செய்வதால் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட் லைன் ஈக்விட்டி ஃபண்ட், ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகியவற்றில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். இந்த இரண்டு ஃபண்டுகளிலும் லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் கூடுதல் அம்சமாகக் கிடைக்கிறது.''

? வங்கியில் 25 லட்சம் ரூபாய் ஓ.டி (Overdraft)  எடுத்து பிசினஸ் செய்து வருகிறேன். என் வீடு விற்பனை செய்த பணம் 25 லட்சம் ரூபாய் வரவேண்டியுள்ளது. இந்தப் பணத்தில் வங்கிக் கடனை திரும்பச் செலுத்தலாமா அல்லது வேறு ஏதாவது முதலீடு செய்யலாமா?

- கே.சிவா, சென்னை. ஆர்.செந்தில், நிதி ஆலோசகர்.

''வீடு விற்பனையின் மூலமாகக் கிடைக்கும் பணத்தில் வங்கிக் கடனை திரும்பச் செலுத்துவது நல்லது. ஓ.டி கணக்கில் வரும் தொகைக்கு சுமார் 12.5-லிருந்து 16 சதவிகிதம் வரை வட்டி இருக்கும். இந்த வட்டி விகிதம் அதிகம் என்பதால் முதலில் அந்தக் கடனை அடைத்துவிடுவது சரியான முடிவாக இருக்கும்.''

ஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?

? ஃபர்ஸ்ட் லீஸிங் (First Leasing)  பங்கு கடந்த 30 நாட்களாக என்எஸ்இ-ல் வர்த்தகம் ஆகவில்லை. இந்தப் பங்கை என்ன செய்வது?

- உமா, சிவகங்கை. எம்.எஸ்.ஓ.அண்ணாமலை, ஷேர் புரோக்கர், சேலம்.

''ஃபர்ஸ்ட் லீஸிங் கம்பெனியின் நடவடிக்கைகள் கடந்த இரண்டு வருடமாக திருப்திகரமாக இல்லை. மேலும், இந்த நிறுவனம் நிர்வாகத்தில் பல மாற்றங்களை அடிக்கடி செய்து வந்தது. அதாவது, இயக்குநர்களைப் பலமுறை மாற்றியமைத்துள்ளது. மேலும், 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிசர்வ் வங்கி இந்த நிறுவனத்தின் மீது சில தடைகளை விதித்தது. அதாவது, நிறுவனத்தின் சொத்துகளை விற்பனை செய்வது, டிவிடெண்ட் அறிவிப்பு, புதியதாகக் கடன் வாங்கக்கூடாது என தடை விதித்தது. இவை இந்த நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு நல்லதல்ல. இந்தப் பங்கு பிஎஸ்இ-ன்டி குரூப்பில் வர்த்தமாகி வருகிறது. இந்தப் பங்கை விற்றுவிடுவது நல்லது''

ஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?

? கடந்த 2012-ல் ஃப்ளாட் வாங்குவதற்காக தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியிருந்தேன். அதிலிருந்து இ.எம்.ஐ செலுத்தி வருகிறேன். ஆனால், அக்டோபர் 2013-ம் வருடம் வீடு என் பெயரில் பதிவு செய்யப்பட்டு, 2014 மே மாதம்தான் வீடு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் நான் செலுத்திய இ.எம்.ஐ தொகைக்கு வரிச் சலுகை பெற முடியுமா? (நான் வாங்கிய கடன்22 லட்சம் ரூபாய்; கடன் தொகை பகுதி பகுதியாகத்தான் கிடைத்தது)

@-  தீபா ஜெகன்நாதன், சென்னை. என்.எம்.இளங்குமரன், ஆடிட்டர்.

''கட்டுமானம் நடைபெறும் காலத்தில் செலுத்தப்படும் வட்டி தொகைக்கு வரி விலக்குப் பெறமுடியும். அதாவது, வீடு கட்டி முடித்த ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீங்கள் செலுத்திய வட்டி தொகையை ஐந்தாகப் பிரித்து வரிச் சலுகை பெறலாம். வீடு கட்டி முடித்தபிறகு திரும்பச் செலுத்தும் வட்டி மற்றும் அசல் தொகைக்கு வரிவிலக்கு பெற முடியும்.

வருமான வரிப் பிரிவு 24-ன் கீழ் வட்டி தொகைக்கு அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் பெறமுடியும்.  ப்ரீ இஎம்.ஐ.-ல் செலுத்தும் வட்டித் தொகையும் 1.5 லட்சத்தில் அடங்கும். அதாவது, ஐந்தாக பிரித்த ப்ரீ இ.எம்.ஐ-ல் ஒரு வருடத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என வைத்துக் கொள்வோம். வீடு கட்டி முடித்த பிறகு செலுத்தும் வட்டி தொகை 1.5 லட்சம் என வைத்துக்கொள்வோம். இவை இரண்டையும்  சேர்த்து அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய்க்குதான் வரி விலக்குப் பெறமுடியும்.  80சி பிரிவின் கீழ் அசல் தொகையில் அதிகபட்சம் 1  லட்சம் ரூபாய் வரையும் வரிவிலக்கு பெறமுடியும்.''

ஸ்கேன் மெஷின்களுக்கு இன்ஷூரன்ஸ் கிடைக்குமா?

? கடந்த மூன்று வருடமாக ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் ஈக்விட்டி குரோத் ஃபண்டில் வாரம் 1,000 ரூபாய் முதலீடு செய்து வருகிறேன். இதைத் தொடரலாமா?

- செந்தில், வேலூர். டி.ராஜன், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

''ரிலையன்ஸ் ரெகுலர் சேவிங்ஸ் ஈக்விட்டி ஃபண்ட், மல்டி கேப் வகையைச் சார்ந்த ஃபண்டாகும். இந்த ஃபண்ட் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாகப் பெஞ்ச்மார்க் வருமானத்தைவிட குறைவான வருமானத்தையே தந்துள்ளது. சந்தை ஏற்றத்தில் மட்டுமே நல்ல வருமானம் தந்துள்ளது. எனவே, முதலீடு செய்துள்ள தொகையை அப்படியே வைத்திருக்கவும். புதிதாக முதலீடு செய்யும் தொகையை ஹெச்.டி.எஃப்.சி. மிட் கேப் ஆப்பர்ச்சூனிட்டீஸ் குரோத் ஃபண்டில் முதலீடு செய்யவும்.''