விளம்பர துறை சார்ந்த தொழில் வாய்ப்பு இது. ரொம்பச் சாதாரணமாகத் தோன்றினாலும், இதற்குப் பின்னால் உள்ள வர்த்தக வாய்ப்புகள் அதிகம். விளம்பரங்களைப் பொறுத்தவரை, மக்கள் கண்ணில் நேரடியாகப் படும் விளம்பரங்களே உடனடி விளைவுகளைத் தரும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் இந்தத் தொழில்.
வெற்றி வாய்ப்புகள்!
மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் குறிப்பாக, பேருந்து நிலையம், ரயில் நிலையத் தூண்களில், மின்கம்பங்களில் கட்டி தொங்கவிடும் முறையிலான சிறிய பிளாஸ்டிக் பேனர்களைப் பார்த்திருப்பீர்கள். அவை ஃப்ளூட் போர்டு (Flute board) பிரின்டிங் மெஷின்களால் அச்சிடப்பட்டவை. ஆரம்பத்தில் வண்ணக் காகிதத்தில் விளம்பர வாசகங்களை பிரின்ட் செய்துகொண்டு, அதை சதுர அட்டைகளில் ஒட்டி தொங்கவிட்டு வந்த நிலை மாறி, இன்று ஃப்ளூட் போர்டு அட்டைகளில் பிரின்ட் செய்து தொங்கவிடுகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும், இந்தச் சிறிய விளம்பர முறையைப் பின்பற்றி வருவது ஆச்சர்யம். குறிப்பாக, இப்போது வளர்ந்துள்ள ஃப்ளூட் போர்டு பிரின்டிங், மழை, வெயில் என தாக்குப்பிடித்து நீண்ட காலத்துக்கு உழைக்கும் என்பது முக்கியம். தடிமனாக இருக்கும் அதேவேளையில் எடை குறைவாகவும், கையாள்வதற்கு எளிதாகவும் இருப்பதால், இந்தத் தொழில் குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

தயாரிப்பு முறை!
ஸ்கிரீன் பிரின்டிங் முறையில்தான் இந்த ஃப்ளூட் போர்டு விளம்பரங்கள் தயாரிக்கப்படுகிறது. வாடிக்கையாளருக்குத் தேவையான டிசைன்களை கணினியில் வடிவமைத்துக் கொண்டு அதை டிரேஸிங் பேப்பரில் பிரின்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஸ்கிரீன் பிரின்டிங் இயந்திரத்துக்கேற்ப ஃபிலிம் தயார் செய்து, இயந்திரத்தில் பொருத்திக்கொள்ள வேண்டும். பிறகு, ஃப்ளூட் போர்டு அட்டைகளை இயந்திரத்தில் அடுக்கி, பிரின்ட் செய்ய வேண்டும். அச்சு உலர்ந்த பின்பு பேக்கிங் செய்து வாடிக்கையாளருக்குத் தரவேண்டியதுதான்.
திட்ட அறிக்கை!
தேவையான உபகரணங்கள் மற்றும் எக்ஸ்போஸர் யூனிட், டிக்ஸிங் யூனிட், பிரின்டிங் யூனிட், கணினி மற்றும் பிரின்டர்.
முதலீடு!
இடம்: வாடகை இயந்திரங்கள், உபகரணங்கள்: ரூ.14 லட்சம்.
'நீட்ஸ்’ திட்டம் அல்லது பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இதற்கு மானியம் மற்றும் வங்கிக் கடன் கிடைக்கும்.
நமது மூலதனம் (5%): ரூ.70,000
மானியம் (25%): ரூ.3.50 லட்சம்
வங்கிக் கடன் (70%): ரூ.9.80 லட்சம்

உற்பத்தித் திறன்!
தினசரி எட்டு மணி நேர வேலை என கொண்டால், 3ஜ்2 என்கிற அளவில் 1,500 அட்டைகளைத் தயார் செய்ய முடியும். அதாவது, தினசரி 9,000 சதுர அடி ஸ்கிரீன் பிரின்டிங் செய்யலாம் (3ஜ்2ஜ்1,500=9,000).
மாதம் 25 வேலைநாட்கள் என கணக்கிட்டால், ஒரு மாதத்துக்கு 2,25,000 சதுர அடி (9000ஜ்25=2,25,000) தயார் செய்யலாம். இதில் சராசரியாக 80 சதவிகித வேலை என வைத்துக்கொண்டாலும், 1,80,000 சதுர அடி தயார் செய்ய முடியும். இதற்கு மட்டும் 10 நபர்கள் தேவைப்படுவார்கள்.
மூலப்பொருள்!

இந்தத் தொழிலுக்கான மிக முக்கிய மூலப்பொருள், ஃப்ளூட் போர்டு மற்றும் அச்சு மை. ஃப்ளூட் போர்டு சதுர அடி ரூ5.50. ஃப்ளூட் போர்டை வாங்கி, வாடிக்கையாளர் விரும்பும் அளவுகளில் வெட்டிக்கொள்ளலாம்.
அச்சு மை விலை ஒரு கிலோ ரூ.650 - 900 வரை. நாம் சராசரியாக ரூ.750 என வைத்துக்கொள்ளலாம். ஒரு கிலோ அச்சு மை கொண்டு 250 சதுர அடி வரை பயன்படுத்தலாம். நாம் 200 சதுர அடி என சராசரி கணக்கு வைத்துக் கொள்வோம். இதன்படி கணக்கிட்டால், ஒரு சதுர அடிக்கு ரூ.3.75-க்கு அச்சு மை செலவாகும்.
ஃப்ளூட் போர்டு மற்றும் அச்சு மை சேர்த்து ஒரு சதுர அடிக்கு ரூ.9.25 உற்பத்தி செலவாகும். மாதம் 1,80,000 சதுர அடி உற்பத்தி செய்ய மூலப்பொருள் செலவு ரூ.16.65 லட்சம் ஆகும்.
பணியாளர்கள் (ரூ)
மேற்பார்வையாளர் 1 : 10,000
எக்ஸ்போஸர் 2 X 8,000 : 16,000
பணியாளர்கள் 8 X 6,000 : 48,000
உதவியாளர்கள் 2 X 5,000 : 10,000
மார்க்கெட்டிங் 2 X8,000 : 16000
மொத்தம் : 1,00,000
நிர்வாகச் செலவுகள் (ரூ)
மின்சாரம் : 10,000
வாடகை : 20,000
இயந்திர பராமரிப்பு : 10,000
மேலாண்மை செலவு : 10,000
தேய்மானம் : 10,000
ஃபிலிம் வொர்க் : 10,000
விற்பனை செலவு : 10,000
ஏற்று இறக்கு கூலி : 10,000
மொத்தம் : 90,000

நடைமுறை மூலதன செலவுகள் (ரூ)
மூலப்பொருட்கள் : 16,65,000
சம்பளம் : 1,00,000
நிர்வாகச் செலவுகள் : 90,000
மொத்தம் : 18,55,000
கடன் மற்றும் வட்டி திருப்பம் (ரூ)
மூலதனக் கடன்
திருப்பம் (60 மாதங்கள்) : 16,500
மூலதனக் கடன் வட்டி
நீண்ட காலம் (12.5%) : 10,200
நடைமுறை மூலதனக்
கடன் வட்டி குறுகிய காலம் : 19,500
மொத்தம் : 46200

விற்பனை வரவு (ரூ)
அச்சுத்தன்மைக்கேற்ப ஒரு சதுர அடிக்கு ரூ.12 - 14 வரை வசூலிக்கலாம். நாம் சராசரியாக ரூ.11 என்கிற அளவில் கட்டணம் பெற முடியும். இதன்படி, மாதம் 1.80 லட்சம் சதுர அடி தயாரிப்புக்கு ரூ.19,80,000 லட்சம் விற்பனை வருமானம் கிடைக்கும். (1,80,000ஜ்11=19,80,000)
விற்பனை வரவு:
மொத்த வரவு : 19,80,000
மொத்த செலவு : 18,55,000
கடன் திருப்பம் மற்றும்
வட்டி செலவு : 46,200
லாபம் : 78,800
(திட்ட விவரங்கள் உதவி: டான்ஸ்டியா - எஃப்என்எஃப் சர்வீஸ் சென்டர், சென்னை)
படங்கள்: பா.காளிமுத்து.