Published:Updated:

ஷேர்லக் - ரயில் கட்டணத்தை உயர்த்திய மோடி!

ஷேர்லக் - ரயில் கட்டணத்தை உயர்த்திய மோடி!

ஷேர்லக் - ரயில் கட்டணத்தை உயர்த்திய மோடி!

ஷேர்லக் - ரயில் கட்டணத்தை உயர்த்திய மோடி!

Published:Updated:

ந்ததும் வராததுமாக ''கொஞ்சம் தண்ணீர் தரமுடியுமா?'' என்று கேட்டு வாங்கிக் குடித்தார் ஷேர்லக். ''என்ன, கசப்பு மருந்து ஏதும் சாப்பிட்டீர்களா?'' என்று கேட்டோம். ''நீர் கற்பூரம், சரியாகப் புரிந்துகொண்டுவிட்டீர். கசப்பு மருந்து குடிக்கத் தயாராக இருங்கள் என்று மோடி சொன்னாலும் சொன்னார், ரயில் டிக்கெட்

கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் அவர் தந்த கசப்பு மருந்து, தாங்க முடியாத கசப்பு. இன்னும் அவர் என்னென்ன கசப்பு மருந்தெல்லாம் தரப் போகிறாரோ?'' என்றபடி செய்திகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

''பங்குச் சந்தையில் முதலீட்டை அதிகரிப்பதற்கான பல வழிகளை செபி செய்திருக்கிறதே?'' என்றோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சிறுமுதலீட்டாளர்களுக்குச் சாதகமான பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது செபி.  பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்களின் பங்களிப்புத் தற்போதுள்ள 10-லிருந்து 25%ஆக  அடுத்த மூன்று ஆண்டுகளில் உயர்த்த வேண்டும். ஐபிஓ-வில் பொதுமக்களுக்குக் குறைந்தபட்சம் 25% பங்குகள் அல்லது ரூ.400 கோடி மதிப்புள்ள பங்குகளை வழங்க வேண்டும். ரூ.10 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் ஆங்கர் இன்வெஸ்டருக்கு, ஐபிஓ-வில் நிறுவனங்கள் பிரிவில் 30 சதவிகிதமாக இருக்கும் ஒதுக்கீட்டை 60 சதவிகிதமாக உயர்த்த செபி உத்தரவிட்டுள்ளது. ஆஃபர் ஃபார் சேல் (ஓஎஃப்எஸ்) முறையில் பங்குச் சந்தைகள் மூலம் பங்குகளை விற்கும்போது, அதில் 2 லட்சம் ரூபாய்க்குள் முதலீடு செய்யும் சிறுமுதலீட்டாளர்களுக்கு 10% ஒதுக்க வேண்டும் எனவும் செபி சொல்லியிருக்கிறது. இவற்றின் மூலம் பொதுமக்களும் தனிநபர்களும் அதிக எண்ணிக்கையில் சந்தைக்கு வருவார்கள் என செபி எதிர்பார்க்கிறது.

ஷேர்லக் - ரயில் கட்டணத்தை உயர்த்திய மோடி!

மேலும்,  அரசின் நிதித் தேவையை ஈடுகட்டும் விதமாக கோல் இந்தியா, செயில், எம்எம்டிசி, என்எம்டிசி, என்ஹெச்பிசி, நால்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளில் அரசின் பங்கு மூலதனத்தைக் கணிசமாகக் குறைக்க இருக்கிறது மத்திய நிதி அமைச்சகம்.

செபியின் இந்த அதிரடி நடவடிக்கைகள் நடைமுறைக்கு வரும்போது பெரும்பாலான பொதுத்துறை நிறுவனப் பங்குகள் மல்டிபேக்கர்களாக மாறிவிடும். இதை முன்பே எதிர்பார்த்துதான்   'பொதுத்துறை பங்குகளுக்கு இனி பொற்காலம்’ என்கிற தலைப்பில் ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டீரா? நீர் பரிந்துரை செய்த பங்குகளை வாங்கி யவர்களுக்கு இனி ஜாக்பாட்தான்'' என்று சிரித்தார்.

''ரயில் ஸ்டாக்குகள் எல்லாம் வேகமாக விலை ஏறி இருக்கிறதே?'' என்று விசாரித்தோம்.

''இந்திய ரயில்வே துறையில் 100% அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) அனுமதிப்பது குறித்து மத்திய தொழில் வணிகத்துறை ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியானதால், ரயில்வே சார்ந்த பங்குகளின் விலை உயரத் தொடங்கியிருக்கிறது. கலந்தே ரயில் நிர்மான், ஸ்டோன் இந்தியா, கெர்னெக்ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்கு களின் விலை உயர்ந்துள்ளது'' என்று விளக்கம் தந்தார்.

''விமானத் துறை பங்குகளின் செயல்பாடு மோசமாக இருக்கிறதே?'' என்றோம்.

''ஏறக்குறைய எல்லாத் துறைகளும் ஓரளவு வளர்ச்சி கண்டுவரும்போது விமானத் துறை மட்டும் தொடர்ந்து சரிவிலேயே இருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலானது முதல்  ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸ் 47 சதவிகிதமும், ஜெட் ஏர்வேஸ் 54 சதவிகிதமும் பங்கு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது. ஏற்கெனவே துறை சரியில்லை; இதனோடு கைநிறைய வாங்கிய கடனும் கழுத்தை நெரிக்க கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸின் பங்கு விலை 64% குறைந்திருக்கிறது. குறைந்த விலையில் இந்தப் பங்குகள் கிடைத்தாலும், வாங்கித்தான் ஆகவேண்டுமா என  யோசித்து முடிவெடுக்கலாம்'' என்றார்.

ஷேர்லக் - ரயில் கட்டணத்தை உயர்த்திய மோடி!

''உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி நெகட்டிவ்-ஆகச் சொல்லியிருக்கிறதே?'' என்று சந்தேகத்துடன் வினவினோம்.

''2014-ல் உலக ஜிடிபி வளர்ச்சி 0.5% குறையும் என்றும், அதேசமயம் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.5 சதவிகிதமாக இருக்கும் எனவும் மதிப்பிட்டுள்ளது. அடுத்துவரும் ஆண்டுகளில் இந்த வளர்ச்சி 6.3-6.6 சதவிகிதமாக அதிகரிக்கும் என பாசிட்டிவ்-ஆகச் சொல்லியிருக்கிறது. வளர்ந்த நாடுகளில் வளர்ச்சி மேம்படும் எனவும் சொல்லியிருக்கிறது'' என்றார்.

''சந்தையின் அடுத்தகட்டம் எப்படி இருக்கும்?'' என்று கேட்டோம்.

''ஈராக் - அமெரிக்கா பிரச்னையால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இதனால் சந்தை சரிவை சந்தித்து வருகிறது. அடுத்து, பருவமழை எந்த அளவுக்குப் பெய்கிறது, மத்திய பட்ஜெட்டில் என்னென்ன சலுகைகள் அறிவிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து சந்தையின் அடுத்தகட்ட போக்கு இருக்கும் என்கிறார்கள், அனலிஸ்ட்கள். அதேநேரம், சந்தையில் ஏற்படும் இறக்கத்தை முதலீட்டுக்கான வாய்ப்பாகவே கருதலாம். காரணம், முதலீட்டாளர்களிடம் பாசிட்டிவ் சென்டிமென்ட் அதிகம் காணப்படுகிறது. கடந்த மூன்று மாத காலத்தில், சந்தை மூன்று முறை இறக்கம் கண்டது. அப்போதெல்லாம் அதிக எண்ணிக்கையில் பங்குகள் வாங்கிக் குவித்திருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.

மேலும், சந்தையில் எஃப்ஐஐ-களின் முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் இதுவரைக்கும் சுமார் 1000 கோடி டாலரை (சுமார் ரூ.60,000 கோடி) எஃப்ஐஐ-கள் முதலீடு செய்திருக்கிறார்கள்'' என சுருக்கமாக பேசிவிட்டு புறப்படத் தயாரானவரிடம், ''பங்கு பரிந்துரை ஏதாவது?'' என்று இழுத்தோம்.

''குறுகிய காலத்தில் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனி பங்குகளைத் தவிர்ப்பது நல்லது. ஜேகே டயர், எல்ஐசி ஹெச்எஃப்எல், அல்ட்ரா டெக் சிமென்ட், ஆசியன் பெயின்ட்ஸ், கெய்ர்ன் இந்தியா, டிசிஎஸ், ஜேபி கெமிக்கல்ஸ் அண்ட் பார்மா. ஆகிய பங்குகள் மீது கவனம் வைக்கலாம். ஒரு அவசர மீட்டிங். அடுத்த வாரம் பார்ப்போம்'' என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism