Published:Updated:

தாமதமாகும் கம்பெனி டெபாசிட்: திரும்பப் பெற என்ன வழி?

தாமதமாகும் கம்பெனி டெபாசிட்: திரும்பப் பெற என்ன வழி?

தாமதமாகும் கம்பெனி டெபாசிட்: திரும்பப் பெற என்ன வழி?

தாமதமாகும் கம்பெனி டெபாசிட்: திரும்பப் பெற என்ன வழி?

Published:Updated:

கேள்வி - பதில்

 ?    பிர்லா பவர் சொல்யூஷன் நிறுவனத்தில் கடந்த 2010-ம் ஆண்டு ரூ.45,000 டெபாசிட் செய்திருந்தேன். டெபாசிட் முதிர்வானதால் டெபாசிட் சான்றிதழில் கையெழுத்திட்டு நிறுவனத்துக்கு அனுப்பியிருந்தேன். ஆனால்,  8 மாதங்கள் ஆகியும் எந்தத் தகவலும் வரவில்லை. பணத்தைப் பெறும் வழி என்ன?

 -பாலகிருஷ்ணன், மதுரை.
சுவாமிநாதன், இயக்குநர், ஓம் ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் கன்சல்டன்சி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''டெபாசிட் செய்த தொகையைத் திரும்பப் பெற்றுத் தருமாறு கம்பெனி சட்ட குழுவுக்குக் கடிதம் எழுதலாம். இந்தக் கடிதத்துடன் டெபாசிட் செய்ததற்கான ஆதாரத்தை இணைத்து அனுப்ப வேண்டும்.

அதன் சென்னை கிளை முகவரி:
கம்பெனி சட்ட குழு, (சென்னை கிளை) கார்ப்பரேட் பவன்
(யூடிஐ பில்டிங்), 3-வது மாடி, 29,ராஜாஜி பவன், சென்னை-600 001.''

தாமதமாகும் கம்பெனி டெபாசிட்: திரும்பப் பெற என்ன வழி?

? எஸ்பிஐ லைஃப் இன்ஷூரன்ஸில் யூனிட் பிளஸ் சைல்டு பிளான் ஆர்பி திட்டத்தில் 2009-ம் ஆண்டு முதல், வருடத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் பிரீமியமாகச் செலுத்தி வருகிறேன். இந்த ஜூன் மாதம் ஆறாவது பிரீமியம் செலுத்தப்போகிறேன். இதைத் தொடரலாமா?

@- டி.செந்தில் குமார், திருச்சி.
பி.மேத்யூஸ் பிரபாகரன்,  இயக்குநர், ஃபர்ஸ்ட் இன்ஷூரன்ஸ் வேர்ல்டு புரோக்கிங் சர்வீசஸ்.

''இந்த பாலிசி யூனிட் லிங்க்டு திட்டம் என்பதால் இதன் என்ஏவி-ஐ கவனிக்கவும். மொத்த மதிப்பு ஆறு ஆண்டுகள் செலுத்திய பிரீமியத்தைவிடக் குறைவாக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளாக நீங்கள் செலுத்திய பிரீமியம் தொகையும், பெய்டு-அப் மதிப்பும் இணையாக இருந்தால் தொடர்ந்து பிரீமியம் செலுத்தலாம்.

மேலும், உங்களைத் தவிர்த்து, குழந்தைக்கு மட்டும் லைஃப் கவரேஜ் கிடைக்கும் வகையில் இருந்து மதிப்பு குறைந்திருந்தால் பாலிசியை ரத்து செய்துவிடுவது நல்லது. அதற்குமுன், இதைவிட அதிகத் தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது அவசியம். தவிர, இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம் உங்களுக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் கவரேஜ் மாற்றித் தருமாறு கேட்கலாம். இனிவரும் காலத்தில் பங்குச் சந்தை நல்ல வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது உங்களின் முதலீடு வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் பாலிசியை ரத்து செய்துவிட்டு கணிசமான தொகையோடு வெளியேறிவிடலாம்.''

? என் நண்பர் இங்கிலாந்தில், அந்த நாட்டின் குடியுரிமை பெற்று வசிக்கிறார். அதேசமயத்தில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் ஓசிஐ (Overseas Citizenship of India)  அட்டையும் வைத்திருக்கிறார்.  60 வயதுக்குப்பின் இந்தியாவில் குடியேற திட்டமிட்டுள்ளார். அவர் இப்போது இந்தியாவில் முதலீடு செய்ய முடியுமா?

@- ஹரிஷ் மோகன் பாபு, என்.எஸ்.ஸ்ரீனிவாசன், ஆடிட்டர்.

''உங்கள் நண்பர் ஓய்வுக்காலத்துக்காக இந்தியாவில் முதலீடு செய்ய நினைக்கிறார். இந்தியாவில் முதலீடு செய்வதில் எந்தவிதமான சிக்கலும் இருக்காது. முதலில் அவர் இந்திய வருமான வரி அலுவலகத்திடமிருந்து நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு நம்பர்) பெற வேண்டும். இந்திய அரசிடமிருந்து ஓசிஐ அட்டையைப் பெற்றுள்ளதால், இது சுலபமாகக் கிடைக்கும். என்ஆர்இ அல்லது என்ஆர்ஓ கணக்கைத் துவங்கி முதலீடு செய்யலாம். இதில் என்ஆர்இ டெபாசிட்டில் கிடைக்கும் வட்டி வருமானம் சற்று குறைவாக இருக்கும். ஆனால், அதில் முதலீடு செய்யும் தொகை மூலமாகக் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி விலக்குப் பெறமுடியும். மேலும், முதலீடு மற்றும் வட்டியையும் எப்போது வேண்டுமானாலும் வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

தாமதமாகும் கம்பெனி டெபாசிட்: திரும்பப் பெற என்ன வழி?

என்ஆர்ஓ கணக்கில் டெபாசிட் செய்யும்போது வட்டி சற்றுக் கூடுதலாகக் கிடைக்கும். ஆனால், இந்தியாவில் விதிக்கப்படும் வரியை செலுத்தவேண்டியிருக்கும். மேலும், அவர் வெளிநாட்டில் வாழும் இந்தியர் என்பதால், வட்டி வருமானத்துக்கு 30% வரை, வங்கியானது வருமான வரிப் பிடித்தம் செய்யும். ஆனால் இங்கிலாந்து குடியுரிமையைக் காட்டி,  இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான இரட்டை வரி விதிப்பு ஒப்பந்தப்படி வரிப் பிடித்தம் செய்யுமாறு வங்கியிடம் கோரலாம். அதன்பிறகு இரு நாட்டுக்கும் இடையே உள்ள இரட்டை வரி விதிப்பு உடன்படிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, குறைந்த விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.

இதைத் தவிர்த்து, இந்தியாவில் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். முன்னணி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களான  ஹெச்டிஎஃப்சி, பிர்லா சன் லைஃப், யூடிஐ ஆகியவற்றின் திடங்களில் எஸ்ஐபி முறையில் முதலீட்டைத் துவக்கலாம்.

இதன் மூலமாக 60 வயதில் தேவைப்படும் ஓய்வுக்காலத் தேவைகளுக்குக் கணிசமான தொகையைப் பெறமுடியும். மேலும், மேற்கூறிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் மூலம் வரும் டிவிடெண்ட் மற்றும் மூலதன ஆதாயம் இரண்டுக்கும் வரி இருக்காது.''

தாமதமாகும் கம்பெனி டெபாசிட்: திரும்பப் பெற என்ன வழி?

?1.5 கோடி ரூபாய் மணிபேக் பாலிசி வைத்திருக்கிறேன். இதற்கு என் மனைவியின் பெயரை நாமினியாகக் குறிப்பிட்டுள்ளேன். இப்போது புதிதாக டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கலாம் என திட்டமிட்டிருக்கிறேன். இந்த பாலிசியில் என் அம்மா, தங்கை, தம்பியின் பெயர்களை நாமினியாகக் குறிப்பிட முடியுமா?

- சிவசங்கரன், சென்னை.
வி.விஜயராகவன், வாடிக்கையாளர் சேவை பிரிவு, மண்டல மேலாளர், எல்ஐசி.

''இன்ஷூரன்ஸ் பாலிசியில் ரத்த உறவுகளை நாமினியாக நியமிக்கலாம். உங்களுக்கு அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்தால் இழப்பீடு தொகையை நாமினியிடம் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒப்படைக்கும். நாமினியாகப் போட்டதால் மட்டும் அந்தத் தொகைக்கு நாமினிகள் உரிமை கொண்டாட முடியாது. சட்டப்பூர்வ வாரிசுகளுக்குதான் அந்தத் தொகை சேரும்.''

? கடந்த மாதத்திலிருந்து லார்ஜ் கேப் ஈக்விட்டி ஃபண்ட் திட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வருகிறேன். இதற்கு வருமான வரி விலக்கு உண்டா?

 - கு.தமிழ்வாணன், நாகப்பட்டினம். மனோஜ்குமார், ஆடிட்டர்.

''நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் லார்ஜ் கேப் ஈக்விட்டி ஃபண்ட் இஎல்எல்எஸ் ஃபண்ட் ஆக இருந்தால், முதலீடு செய்யும் தொகைக்கு  நிபந்தனைக்கு உட்பட்டு, வருமான வரிப் பிரிவு 80சி-ன் கீழ் அதிகபட்சம் ஓர் ஆண்டுக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை வரி விலக்குப் பெறமுடியும்.

மீதமுள்ள தொகைக்கு ராஜீவ்காந்தி ஈக்விட்டி சேவிங்க் ஸ்கீம் (80சிசிஜி-ன் கீழ்) முதல்முறை முதலீட்டாளராக இருந்தால் 50% சதவிகிதத்துக்கு வரி விலக்குப் பெறலாம்.''

தாமதமாகும் கம்பெனி டெபாசிட்: திரும்பப் பெற என்ன வழி?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism