கட்டுமானத் துறையில் செங்கற்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தும் கற்கள்தான் சிஎல்சி (Cellular Lightweight Concrete) எனப்படும் இந்த எடை குறைந்த கற்கள். செங்கற்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக, கட்டுமானத் துறையில் ஒரு மாற்றுத் தொழில்நுட்பமாக நிலக்கரிச் சாம்பலைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த வகைக் கற்கள்தான் இப்போது பரவலாகக் கட்டடம் கட்ட பயன்படுத்தப்படுகின்றன.

ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் என்கிற வகைக் கற்களும் மாற்றுத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதுதான். ஆனால், ஃப்ளை ஆஷ் கற்கள் நிலக்கரிச் சாம்பல், சுண்ணாம்பு, ஜிப்சம், மலை மாவு போன்றவற்றைக் கலந்து தயாரிக்கப்படுவதால், அதன் எடை அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகக் கட்டுமானத் துறையில் குறிப்பிட்ட சதவிகிதம் அளவுக்கு மட்டுமே இதைப் பயன்படுத்துவார்கள். ஆனால், சிஎல்சி கற்கள் நிலக்கரிச் சாம்பல் மற்றும் சிமென்ட் கொண்டு தயாரிக்கப்படுவதால் எடை குறைவாகவே இருக்கும். இதைக் கையாளுவதும் எளிதானது. மேலும், செங்கற்களைவிட அளவில் பெரியதாகவும் இருக்கும்.

தேவைக்கு ஏற்ற அளவு, ஃபினிஷிங், வேலை நேரம் குறைவு, பூச்சுக்கான சிமென்ட் செலவு குறைவு, சுவர்களில் விரிசல் விழாது என்பது போன்ற காரணங்களால் பெரிய, பெரிய கட்டுமான நிறுவனங்கள் இப்போது இந்தக் கற்களைத்தான் பயன்படுத்துகின்றன. எனவே, இதற்கான தொழில்வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தக் கற்களைக்கொண்டு எடை தாங்கும் சுவர்கள் அமைக்க முடியாது. ஆனால், அனைத்து வகைச் சுவர்களையும் அமைத்துக்கொள்ள முடியும். மேலும், எடை குறைவு என்பதால் ஏற்று இறக்கு சிரமங்களும் குறைவானது.

இதற்கான மூலப்பொருள் நிலக்கரிச் சாம்பல். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அனல்மின் உற்பத்தி நிலையங்களிலும் கிடைக்கும். முறையான அரசு அனுமதி கிடைத்தால் இலவசமாகவே இந்தச் சாம்பலை பெற்றுக்கொள்ளலாம். அல்லது அனுமதி வாங்கியுள்ள முகவர்களிடமிருந்தும் வாங்கிக்கொள்ளலாம். தொழிலை புதிதாகத் தொடங்குபவர்கள் தவிர, ஏற்கெனவே ஃப்ளை ஆஷ் கற்கள் தயாரித்து வருபவர்களும் தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் எண்ணமிருந்தால் இந்தத் தொழிலை மேற்கொள்ளலாம்.

இயந்திரங்கள்!

கலவை கலக்கும் இயந்திரம், கன்வேயர், கம்ப்ரஸர், கன்ட்ரோல் பேனல், தள்ளுவண்டிகள், அச்சுகள். இந்த இயந்திரங்கள் தவிர உற்பத்தி செய்வதற்கு ஏற்ப குறைந்தபட்சம் பத்தாயிரம் சதுர அடி இடம் தேவை. தண்ணீர் உள்ள இடமாக இருப்பது நல்லது.

மூலப்பொருட்கள்!

நிலக்கரிச் சாம்பல், சிமென்ட், புரோட்டின் ஃபோம், தண்ணீர், அச்சு ரிலீஸ்.

தயாரிப்பு முறை தொட்டியில் தேவையான தண்ணீரை நிரப்பி, அதில் கன்வேயர் மூலம் 700 கிலோ நிலக்கரிச் சாம்பல் மற்றும் 200 கிலோ சிமென்ட் கொட்ட வேண்டும். 1.2 கிலோ புரோட்டின் ஃபோம் 30 லிட்டர் தண்ணீர் என்கிற அளவில் 3 கிலோ ஃபோம் கலந்து, அதை இந்தக் கலவையில் சேர்க்க வேண்டும். இவைகள் நன்றாகக் கலக்கப்பட்டபிறகு இதிலிருந்து ஒரு லிட்டர் கலவையை எடுத்து அடர்த்திச் சோதிக்க வேண்டும். தேவையான அடர்த்தி இருந்தால் அவற்றைத் தள்ளுவண்டிகளில் எடுத்து வந்து அச்சுகளில் சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் கழித்து அச்சு பலகைகளை நீக்க வேண்டும். 48 மணி நேரம் கழித்து இந்தக் கற்களை வேறு இடத்துக்கு மாற்றலாம். இப்படி தயாரான கற்களை 28 நாட்கள்வரை பதப்படுத்தி விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான்.

ஒரு நாளைக்கு ஒரு ஷிப்டுக்கு 30 கியூபிக் மீட்டர் வரை உற்பத்தி செய்யலாம். தயாரிக்கப்படும் பிளாக்குகளைப் பெரிய அளவாக இல்லாமல், சிறு சிறு அளவாகவும் கட் செய்து கொள்ள முடியும். நாம் தினசரி 10 கியூபிக் உற்பத்தி என்று கணக்கு வைத்துக்கொள்வோம்.

திட்ட அறிக்கை (ரூ)!

முதலீடு:

நிலம், கட்டடம் : 8 லட்சம்
இயந்திரங்கள் மற்றும்
தளவாடங்கள்: 12 லட்சம்
மொத்தம்: 20 லட்சம்

இந்தத் திட்டத்துக்கு பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கட்டடம் மற்றும் இயந்திரத்துக்கு மானியம் மற்றும் வங்கிக் கடன் கிடைக்கும்.

நமது பங்கு 5% : 1 லட்சம்
மானியம் 25% : 5 லட்சம்
வங்கிக் கடன் : 14 லட்சம்

தேவையான மூலப்பொருட்கள் (ரூ)

1 கியூபிக் மீட்டர் கற்கள் தயாரிக்க ஆகும் செலவு

நிலக்கரிச் சாம்பல்: 700 கிலோ: 1,000
சிமென்ட் 4 மூட்டை (50 கிலோ): 1,200
ஃபோம் மிக்ஸ் 3 லிட்டர் : 700
மோல்ட் ரிலீஸ் : 100
மொத்தம் : 3,000

உற்பத்தித் திறன்!

தினசரி 30 கியூபிக் வரை உற்பத்தி செய்யலாம் என்றாலும், நாம் சராசரியாக தினசரி 10 கியூபிக் மீட்டர் உற்பத்தி செய்கிறோம் என்று கணக்கிடுவோம். ஒரு கியூபிக் மீட்டர் உற்பத்திக்கு ரூ.3,000 செலவு என்கிறபோது தினசரி 10 கியூபிக் உற்பத்திக்கு 30 ஆயிரம் ரூபாய். மாதம் 25 வேலைநாட்கள் எனக் கொண்டால், 250 கியூபிக் மீட்டர் உற்பத்தி செய்வோம். இதற்கான மூலப்பொருட்கள் செலவு: ரூ.7.50 லட்சம்.

பணியாளர்கள் (ரூ)

மேற்பார்வையாளர் (1) : 12,000
இயந்திரப் பணியாளர் (1) : 12,000
இதர பணியாளர்கள்: 8X8,000 = 64,000
உதவியாளர்கள் : 6X6,000 = 36,000
மொத்தம் : 1,24,000

நிர்வாகச் செலவு (ரூ)

வாடகை : 10,000
மின்சாரம் : 10,000
மேலாண்மை செலவு : 10,000
இயந்திர பராமரிப்பு : 10,000
விற்பனை செலவு : 10,000
போக்குவரத்து : 1,00,000
மொத்தம் : 1,50,000

நடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ)

மூலப்பொருட்கள் : 7,50,000
சம்பளம் : 1,24,000
நிர்வாகச் செலவுகள் : 1,50,000
மொத்தம் : 10,24,000

நடைமுறை மூலதனத்துக்கு வங்கிக் கடன் கிடைக்கும். ரூ.10 லட்சம் என்று கணக்கு வைத்துக்கொள்வோம்.

கடன் திருப்பம் மற்றும் வட்டி (ரூ)

மூலதனக் கடன் திருப்பம் 60 மாதங்கள் : 24,000
மூலதனக் கடன் வட்டி 12.5% (நீண்ட காலம்) : 14,600
நடைமுறை மூலதனக் கடன் வட்டி 12.5%
(குறுகிய காலம்) : 10,500
மொத்தம் : 49,100

விற்பனை வரவு (ரூ)

ஒரு கியூபிக் மீட்டர் கற்களின் விலை 4,800. நமது ஒரு மாத உற்பத்தி 250 கியூபிக் என்கிறபோது மொத்த உற்பத்தி வரவு 12 லட்சம்.

விற்பனை வரவு

மொத்த வரவு : 12,00,000
மொத்த செலவு : 10,24,000
கடன் திருப்பம் மற்றும்
வட்டி செலவு : 49,100
லாபம் : 1,26,900

( திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், சி.ஆர். பிசினஸ் சொல்யூஷன்ஸ், திருச்சி.)படங்கள்: தே.தீட்ஷித்.