Published:Updated:

பென்ஷன், பி.எஃப் ஃபண்ட் முதலீடு...சந்தைக்கு சாதகமா?

சி.சரவணன்

பென்ஷன், பி.எஃப் ஃபண்ட் முதலீடு...சந்தைக்கு சாதகமா?

சி.சரவணன்

Published:Updated:

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி, நாட்டில் தொழில், பொருளாதாரம், பங்குச் சந்தை வளர்ச்சியை மேம்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாகப் பங்குச் சந்தைக்குப் புதிய முதலீட்டை கொண்டுவரும் முயற்சியில் களமிறங்கி இருக்கிறது. அதாவது, பென்ஷன் ஃபண்டுகள், பிராவிடென்ட் ஃபண்ட் போன்றவற்றில் நிர்வகிக்கப்படும் தொகையில் குறிப்பிட்ட தொகையைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தை யிலும் முதலீடு செய்யலாம் என கடந்த 2005-ம் ஆண்டு மத்திய அரசு முதன் முதலாக அறிவித்தது. அப்போது, பென்ஷன் ஃபண்டில்

5 சதவிகிதத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டது. இது 2008-ம் ஆண்டு 15 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டது. இது இப்போது 30 சதவிகிதமாக அதிகரிக்கப்பட உள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அரசின் இந்த நடவடிக்கை பங்குச் சந்தைக்கு சாதகமாக இருக்குமா என ஈக்வினாமிக்ஸ் ரிசர்ச் அண்ட் அட்வைஸரி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

பென்ஷன், பி.எஃப் ஃபண்ட் முதலீடு...சந்தைக்கு சாதகமா?

''இந்தியாவில் ரூ.10 லட்சம் கோடி பென்ஷன் தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் இந்தப் பரிசீலனை நடைமுறைக்கு வந்தால், பங்குச் சந்தைக்குப் புதிதாக ரூ.1.5 லட்சம் கோடி, முதலீடாக வர வாய்ப்புள்ளது. இந்த முதலீடு நீண்ட காலத்துக்கானது என்பதால், இந்த ஓய்வூதிய நிதி லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். அந்தவகையில் ரிஸ்க் என்பது குறைக்கப்படும்'' என்றவர், ரிஸ்க் எப்படி குறையும் என்பதையும் விளக்கிச் சொன்னார்.

''பென்ஷன் ஃபண்டில் 30%தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் என்பதால், மீதமுள்ள 70% தொகையிலிருந்து சுமார் 10% வருமானம் தரும் ரிஸ்க் இல்லாத கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும். பங்கு முதலீட்டில் எதிர்பாராத வகையில் ஓராண்டில் 20% இழப்பு ஏற்பட்டாலும் மூலதனத்தில் இழப்பு இருக்காது.

அதாவது, பங்குச் சந்தையில் முதலீடு செய்த 30%-ல் 20% இழப்பு ஏற்படுமெனில், மூலதனம் 24%-ஆகக் குறையும். ஆனால், கடன் பத்திர முதலீட்டின் மீதான தொகை 70%-லிருந்து 77%-ஆக அதிகரித்திருக்கும். அதாவது, மூலதனம் 100% என்பது 101%-ஆக இருக்கும். இது எப்போதாவது ஓரிரு ஆண்டுகளில் ஏற்படும் பாதிப்புதான். மற்றபடி 15-20 ஆண்டுகளில் பங்குச் சந்தை கணிசமான வருமானத்தையே தரும்'' என்றார்.

பென்ஷன், பி.எஃப் ஃபண்ட் முதலீடு...சந்தைக்கு சாதகமா?

ரூ.5 லட்சம் கோடியை நிர்வகித்து வரும் பிஎஃப் அமைப்பு, ஆரம்பம் முதலே பிஎஃப் பணத்தைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் பென்ஷன் பணம் எதுவும் இதுவரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படவில்லை. அது மத்திய அரசிடம் குறைந்தபட்ச உத்தரவாத வருமானம் கேட்கிறது.

பென்ஷன் ஃபண்டுகள், பங்குச் சந்தையில் எப்படி முதலீடு செய்யப்பட வேண்டும் என்பதை மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துவைத்திருப்பதாகத் தகவல். அதன்படி, பென்ஷன் ஃபண்டில் பங்குச் சந்தை முதலீட்டுக்கு என ஒதுக்கப்படும் நிதியில் பாதி, எஃப் அண்ட் ஓ பிரிவில் வர்த்தகமாகும் பங்குகள், வரிச் சலுகை அளிக்கும் இஎல்எஸ்எஸ் என்கிற பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களின் யூனிட்கள் என பிரித்து முதலீடு செய்யப்பட இருக்கிறது. மீதியுள்ள தொகை இடிஎஃப்கள், பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ இண்டெக்ஸ் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

பங்குச் சந்தை நிபுணர் வி.நாகப்பன் கூறும்போது, ''இந்த நிதி, பணி ஓய்வு பெற்றவர்களுடையது என்பதால் மிகவும் எச்சரிக்கையாக முதலீடு செய்ய வேண்டும்.

தனிநபர்களை வற்புறுத்தி முதலீடு செய்யவைக்கக் கூடாது. ரிஸ்க்கை குறைக்க 25 சதவிகித தொகையை இண்டெக்ஸ் சார்ந்த இடிஎஃப்கள், பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். அதிக ரிஸ்க் கொண்ட செக்டோரல் ஃபண்டுகளில் முதலீட்டை முற்றிலும் தவிர்ப்பது நல்லது'' என்றார்.

இந்த முதலீடு எல்லாம் அரசு சார்ந்த நிறுவனப் பங்குகளில் செய்யப் படுவதால், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திக்கொள்ள அரசுக்கு நீண்ட காலத்தில் கணிசமான தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism