Published:Updated:

ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்... என்னென்ன முதலீட்டுத் திட்டங்கள்?

ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்... என்னென்ன முதலீட்டுத் திட்டங்கள்?

கேள்வி - பதில்

?40 வயதான நான்,  ஓய்வுக் காலத்துக்காக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அடுத்த 20 ஆண்டுகளுக்குச் சேமிக்க விரும்புகிறேன். ஓய்வுக்காலத்தில் எனக்கு ரூ.1 கோடி தேவை. இதற்கேற்ற முதலீடுகள் எவை?

@- சதிஷ், என்.ஸ்ரீகாந்த், நிதி ஆலோசகர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''உங்கள் முதலீடு நீண்ட காலத்துக்கு என்பதால் பங்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யலாம். மாதம் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்தால், உங்களின் இலக்கை அடுத்த 15 ஆண்டுகளிலே அடைய முடியும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்யலாம்.  பிர்லா ஃபிரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி டாப் 200, ரிலையன்ஸ் ஈக்விட்டி ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட், ஐசிஐசிஐ டிஸ்கவரி ஃபண்ட் ஆகியவற்றில் பிரித்து முதலீடு செய்யலாம்.''

ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்... என்னென்ன முதலீட்டுத் திட்டங்கள்?

?எனக்கு தற்போது 62 வயதாகிறது. கடந்த இரண்டு வருடமாக பின்வரும் ஃபண்ட்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறேன். ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஃபண்ட் (குரோத்), ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி பிளான்-ஏ குரோத், எஸ்பிஐ மேக்னம் செக்டார் ஃபண்ட் அம்பர்லா எமர்ஜிங் பிசினஸ் ஃபண்ட் (குரோத்), ஹெச்டிஎஃப்சி டாப் 200 ஃபண்ட் (குரோத்), ஹெச்டிஎஃப்சி மன்த்லி இன்கம் பிளான் லாங் டேர்ம் (காலாண்டு டிவிடெண்ட்), ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட் (குரோத்) ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்து வருகிறேன். இவற்றைத் தொடரலாமா?

@- ஸ்ரீதரன். சுவாமிநாதன், இயக்குநர், ஓம் ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் சர்வீசஸ்.

''நீங்கள் வைத்திருக்கும் ஃபண்டுகளில் ஹெச்டிஎஃப்சி டாப் 200, ஃப்ராங்க்ளின் இந்தியா புளூசிப் ஆகிய ஃபண்டுகள் லார்ஜ் கேப் ஃபண்டுகளாகும். ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி, எஸ்பிஐ மேக்னம் செக்டார் ஃபண்ட் அம்பர்லா எமர்ஜிங் பிசினஸ் ஃபண்டு  ஆகியவை மிட் கேப் ஃபண்டுகளாகும். ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி லார்ஜ் அண்ட் மிட் கேப் ஃபண்ட் ஆகும். ஹெச்டிஎஃப்சி மன்த்லி இன்கம் ஃபண்ட் குறைந்த ரிஸ்க் உடைய கடன் சார்ந்த திட்டமாகும்.ஹெச்டிஎஃப்சி மன்த்லி இன்கம் பிளான் லாங் டேர்ம் காலாண்டு டிவிடெண்ட் திட்டத்திலிருந்து குரோத் ஆஃப்ஷனுக்கு மாறிக்கொள்ளுங்கள். மற்றபடி உங்களது அனைத்து முதலீடுகளையும் அப்படியே தொடரலாம். வருடத்துக்கு ஒருமுறை நீங்கள் முதலீடு செய்த ஃபண்டுகளின் செயல்பாட்டை ஆராய்வது நல்லது.''

?நான் ஓய்வுபெற்ற அரசு ஊழியர். பென்ஷன் மற்றும் எஃப்டி வட்டி வருமானம் சேர்த்து மாதம் ரூ.30 ஆயிரம்  கிடைக்கிறது. இதில் ரூ.10 ஆயிரத்தை வீட்டு வாடகையாகத் தருகிறேன். இதற்கு வரிவிலக்குப் பெற முடியுமா?

- வேலன், ஈரோடு. ஸ்ரீகாந்த், ஆடிட்டர்.

''உங்களுக்குக் கிடைக்கும் பென்ஷன் மற்றும் எஃப்டி-யின் மூலம் வரும் வட்டி வருமானத்தில் வீட்டு வாடகை செலுத்துகிறீர்கள். ஒருவருக்கு அவர் பணிபுரியும் நிறுவனம், வீட்டு வாடகை படி தந்தால்தான், அவரது வீட்டு வாடகையை வரிச் சலுகைக்காகக் கழித்துக்கொள்ள முடியும். அந்தவகையில் நீங்கள் செலுத்தும் வீட்டு வாடகையை வரிச் சலுகைக்காகக் கழித்துக்கொள்ள முடியாது.''

ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்... என்னென்ன முதலீட்டுத் திட்டங்கள்?

?பஜாஜ் அலையன்ஸ் ஐ-செக்யூர் இன்ஷூரன்ஸ் பிளானை 30 ஆண்டுகளுக்கு பிரீமியம் செலுத்தும் வகையில் ரூ.7 லட்சம் கவரேஜுக்கு எடுத்துள்ளேன். இதைத் தொடரலாமா?

- ஜெயமூர்த்தி, போரூர். எஸ்.ஸ்ரீதரன், தலைமை இன்ஷூரன்ஸ் ஆலோசகர், ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம்.

''நீங்கள் கூறியுள்ள திட்டம் ஆன்லைன் டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி. இதை அப்படியே தொடரலாம். இந்த பாலிசியில், பாலிசிதாரருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் மட்டுமே நாமினிக்கு இழப்பீடு கிடைக்கும்.''

?ஐடிஎஃப்சி பிரீமியர் ஈக்விட்டி ஃபண்ட் பிளான்-ஏ குரோத் திட்டத்தில் ரூ.2 ஆயிரமும், டிஎஸ்பி பிளாக்ராக் ஸ்மால் அண்ட் மிட் கேப் ஃபண்ட் ரெகுலர் பிளான் குரோத் திட்டத்தில் ரூ.1,000-மும் கடந்த 2012 ஜனவரி முதல் முதலீடு செய்து வருகிறேன். என் வயது 29. இந்த யூனிட்களை விற்றுவிடலாமா அல்லது தொடர்ந்து முதலீடு செய்யலாமா?

@- மோகன். கே.ராமலிங்கம், இயக்குநர், ஹோலிஸ்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளானர்ஸ்.

''நீங்கள் முதலீடு செய்த தொகை அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தேவை இல்லை எனில், இரண்டு திட்டங் களையும் அப்படியே தொடரலாம். இந்தத் திட்டங்கள் நல்ல வருமானம் தரக்கூடியவை. இவை ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகள்.

குறுகிய காலத்தில், முதலீடு செய்த தொகை தேவைப்படும் எனில், உங்கள் முதலீட்டை டெம்பிள்டன் இந்தியா அல்ட்ரா ஷார்ட் பாண்ட் ஃபண்ட் - சூப்பர் பிளான் குரோத் ஆப்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் 8-9% வருமானம் கிடைக்கும்.''

ஓய்வுக்காலத்தில் ஒரு கோடி ரூபாய்... என்னென்ன முதலீட்டுத் திட்டங்கள்?

?நான் துபாயில் வேலை பார்த்து வருகிறேன். என் எல்லா செலவுகளும் போக மாதம் ரூ.30 ஆயிரம் முதலீடு செய்ய முடியும். எனக்கேற்ற திட்டங்களைச் சொல்லுங்கள்.

 @- பிரகாஷ்.  வி.டி. அரசு, நிதி ஆலோசகர்.

''உங்கள் முதலீட்டுக் காலம் பத்து ஆண்டுகளுக்கு மேல் எனில், பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி ஈக்விட்டி ஃபண்ட், ஃப்ராங்க்ளின் புளூசிப் ஃபண்ட் ஆகிய ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஐந்திலிருந்து பத்து ஆண்டுகள் எனில் ஹெச்டிஎஃப்சி பேலன்ஸ்டு ஃபண்ட், ஐசிஐசிஐ பேலன்ஸ்டு ஃபண்ட், டாடா பேலன்ஸ்டு ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். ஐந்தாண்டுகளுக்குக் கீழ் எனில், ஹெச்டிஎஃப்சி, ஐடிஎஃப்சி நிறுவனங்களின் மன்த்லி இன்கம் திட்டங்களில் முதலீடு செய்யலாம். அல்லது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி, கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்யலாம்.''