மர இழைப்புத் தொழில் என்பது நமக்கு நன்கு தெரிந்த தொழில்தான். ஆனால், இதில் என்ன வருமானம் கிடைத்துவிடப் போகிறது என நினைத்து, இந்தத் தொழிலை ஒரு பிசினஸ் வாய்ப்பாக நாம் கருதுவதில்லை. தவிர, இந்தத் தொழிலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதால் நல்ல வருமானம் பார்க்க வாய்ப்புள்ளது!

இந்தத் தொழிலை பலரும் குடும்பத் தொழிலாகச் செய்கிறார்கள். என்றாலும், இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டும் செய்யலாம். பூ வேலை சார்ந்த கடைசல் வேலைகளுக்குத்தான் அனுபவமும் கற்பனைத்திறனும் தேவை. இழைப்பு வேலைகளுக்கு முறையான பயிற்சி இருந்தாலே போதும்.

இந்தத் தொழிலில் உள்ள இன்னொரு சாதகமான விஷயம், இதற்கான மரச்சட்டங்களை வாங்க நாம் முதலீடு செய்யத் தேவையில்லை. மரச் சட்டங்களை வாடிக்கையாளர்களே வாங்கித் தந்துவிடுவார்கள் என்பதால் இதற்கென நாம் எந்த முதலீடும் செய்யத் தேவையில்லை.

தயாரிப்பு முறை!

வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப செய்து தருவதுதான் இந்தத் தொழில் செய்பவர்களின் முக்கிய நோக்கம். சதுர வடிவிலான பலகை எனில், கதவு, ஜன்னல் போன்றவற்றுக்கு ஏற்ப வடிவமைத்துத் தரவேண்டும். நீள்செவ்வக பலகைகள் எனில், நிலைகள் மற்றும் ஜன்னல் சட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். கட்டுமான தேவைகளுக்கு ஏற்ப அளவுகளைத் தந்துவிட்டால் அதற்கு ஏற்பவும் செய்து தரலாம். மர அறுவை மில்களில் இருந்துவரும் பலகைகளை இழைத்து, தேவைகளுக்கு ஏற்ப வடிவமைத்துத் தருவது மட்டுமே நம் வேலையாக இருக்கும். கடைசல் வேலை எதுவும் நாம் செய்யத் தேவையில்லை.

திட்ட அறிக்கை!

தேவையான இயந்திரங்கள்

ஐந்து பணியாளர்களைக் கொண்ட சிறிய யூனிட்டுக்கு ஓர் இழைப்பு இயந்திரம், தடிமன் இழைப்பு இயந்திரம், சாணை பிடிக்கும் இயந்திரம், மின் மோட்டார் மற்றும் இதர உபகரணங்கள் தேவை. மின் மோட்டாரைக் கொண்டுதான் நாம் அனைத்து இயந்திர வேலைகளையும் செய்யவேண்டியிருக்கும் என்பதால்

15 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் அவசியம் தேவை.

முதலீடு!

இடம்: வாடகை அல்லது சொந்தமாக.

இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்: ரூ.3 லட்சம்.

இந்தத் தொழிலுக்கு பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் அல்லது நீட்ஸ் திட்டத்தின் மூலம் வங்கிக் கடன் மற்றும் மானியம் கிடைக்கும்.

நமது மூலதனம் (5%) : ரூ.15,000

மானியம் (25%) : ரூ.75,000

வங்கிக் கடன் (70%) : ரூ.2,10,000

உற்பத்தித் திறன்!

ஒரு மணி நேரத்தில் 20 கன அடிவரை வேலை செய்யலாம். என்றாலும், நமது ஒருநாள் வேலை திட்டத்துக்கு சராசரியாக 80 கன அடி என்று கணக்கு வைத்துக்கொள்வோம். இதன்படி மாதம் 25 வேலைநாட்கள் எனக் கொண்டால், ஏறக்குறைய 2,000 சதுர அடி இழைப்பு வேலைகள் செய்வோம். ஒரு கன அடி இழைப்பு வேலை செய்துகொடுக்க ரூ.60 வரை கட்டணம் பெறலாம்.

மூலப்பொருள்!

இந்தத் தொழிலுக்கு மிக முக்கிய மூலப்பொருள் மரப்பலகைகளே. வாடிக்கையாளர்கள் மரத்தை பட்டறையிலிருந்து இழைத்துக் கொண்டுவந்துவிடுவதால், நமக்குச் சிரமம் எதுவும் இருக்காது.

பணியாளர்கள்! (ரூ)

மேற்பார்வையாளர் (1) : 10,000
திறன் தொழிலாளர்கள் (5X8,000) : 40,000
விற்பனையாளர் (1) : 10,000
மொத்தம் : 60,000

நிர்வாகச் செலவுகள் (ரூ)

மின்சாரம் : 5,000
வாடகை : 5,000
மேலாண்மை செலவு : 5,000
இயந்திரப் பராமரிப்பு : 5,000
தேய்மானம் : 5,000
மொத்தம் : 25,000

நடைமுறை மூலதன செலவுகள் (ரூ)

சம்பளம் :  60,000
நிர்வாகச் செலவுகள் : 25,000
மொத்தம் : 85,000

கடன் மற்றும் வட்டி திருப்பம் (ரூ)

மூலதனக் கடன் திருப்பம் (60 மாதங்கள்) : 3,500

மூலதனக் கடன் வட்டி

(நீண்ட காலம் 12.5%) : 2,200
நடைமுறை மூலதனக்
கடன் (வட்டி குறுகிய காலம்) : 1,000
மொத்தம் : 6,700

விற்பனை வரவு (ரூ)

ஒரு கன அடி தயார் செய்துகொடுக்க ரூ.60 வரை கட்டணம் வாங்கலாம். இதன் அடிப்படையில் மாதம் 2,000 கன அடி இழைப்பு வேலைகளைச் செய்வதன் மூலம் ரூ.1,20,000 கிடைக்கும்.

தவிர, மர இழைப்பின்போது கணிசமான கழிவுகள் வரும். ஒரு மாதத்துக்கு சுமாராக 150 மூட்டைகள் வரை கிடைக்கும். ஒரு மூட்டை 50 ரூபாய் என வைத்துக்கொண்டாலும், இதன் மூலம் ரூ.7,500 கிடைக்கும். மொத்த விற்பனை வரவு ரூ.1,27,500.

விற்பனை வரவு: (ரூ)

மொத்த வரவு : 1,27,500
மொத்த செலவு : 85,000
கடன் திருப்பம்
மற்றும் வட்டி செலவு : 6,700
லாபம் : 35,800

(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், சி.ஆர்.பிசினஸ் சொல்யூஷன்ஸ், திருச்சி.)
படங்கள்: தே.தீட்ஷித்