ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பொருட்களின் பயன்பாடு இல்லாத வீடுகளே கிடையாது. சமையல் பாத்திரம் தொடங்கி மருத்துவக் கருவிகள் வரை எவர்சில்வர் பொருட்களின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது. எடை குறைவானது, நீடித்து உழைக்கும், துருப்பிடிக்காது மற்றும் விலை குறைவானது போன்ற பல காரணங்களால் எவர்சில்வர் பொருட்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

எவர்சில்வர் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவில் எந்த ரசாயன மாற்றமும் ஏற்படுவதில்லை. அதனால்தான் மருத்துவ உபகரணங்கள்கூட எவர்சில்வர் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. எவர்சில்வர் பொருட்களில் ஒட்டும் தன்மை இல்லை என்பதால் கையாளுவதும் எளிது. இன்டக்ஷன் அடுப்புகளிலும் எவர்சில்வர் பாத்திரங்களைப் பயன்படுத்த முடியும்.

தயாரிப்பு முறை!

எவர்சில்வர் பாத்திரங்களைத் தயாரிக்க அடிப்படை மூலப்பொருள் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடுகள். இவை தேவையான தடிமன்களில் கிடைக்கின்றன. தேவை மற்றும் விலைக்கு ஏற்ப தகடுகளைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும். இந்தத் தகடுகளைக் கொண்டு எந்த வகையான பாத்திரங்களையும் செய்யலாம்.

அதாவது, நமது பாத்திர அச்சுக்குத் தேவையான அளவில் இந்தத் தகடுகளை வெட்டிக்கொண்டு, வெட்டிய தகட்டை அச்சில் வைத்து, ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும். இதன்மூலம் நாம் செய்ய விரும்பும் பாத்திரத்தின் ஒரு பகுதியோ அல்லது முழுப் பகுதியுமோ கிடைக்கும். தாம்பூலத் தட்டை ஒரே அச்சிலிருந்து எடுக்கலாம். ஆனால், குடம், கேன்கள் போன்றவை ஒரே அச்சிலிருந்து எடுக்க முடியாது.

இரண்டு, மூன்று பகுதிகளாக எடுக்க வேண்டிய பாத்திரங்களைத் தயாரித்து, தேவைக்கு ஏற்ப அதை இணைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, குடம் தயாரிக்க வேண்டும் என்றால், முதலில் அதன் அடிப்பாகத்தையும், பிறகு அதன் மேல்பகுதியையும் தயார் செய்துகொண்டு இரண்டையும் காஸ் வெல்டிங் மூலம் இணைக்க வேண்டும். இதற்குப்பின் அந்தப் பாத்திரத்தை அதற்கான உருளையில் இட்டு வெல்டிங் மறையும் வண்ணம் சமமாக்கி பாலிஷ் செய்ய வேண்டும்.

சாதாரணமாக அனைத்து எவர்சில்வர் தகடுகளுமே ஒருவித பழுப்பு நிறத்தில் பளபளப்பு இல்லாமல் இருக்கும். இதன்காரணமாக அச்சில் இருந்து எடுக்கப்பட்ட பாத்திரங்களும் பழுப்பு நிறமாகவே இருக்கும். இதனால் பாத்திரங்களை முழுமையாகத் தயாரித்து முடித்தபின் மெருகூட்டும் இயந்திரம் மூலம் பாலிஷ் செய்ய வேண்டும். இந்த இயந்திரத்தின் மூலம் எவர்சில்வர் பாத்திரங்களைக் கண்ணாடிபோல பளபளப்புக் கூட்டலாம். இந்தப் பளபளப்பு எளிதில் மங்காது. இதற்குப்பின் விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். 10 - 20% வரை கழிவு ஒதுங்கும்.

தேவையான இயந்திரங்கள்!

350 டன் டீப் டிராயிங் பிரஸ், ஸ்பின்னிங் இயந்திரம், கட்டிங் பிரஸ், இன்டக்ஷன் ஹீட்டிங் இயந்திரம், பற்ற வைப்பு இயந்திரம், ரன்னர், பாலிஷ் இயந்திரம், தேவையான அச்சுகள். இந்த இயந்திரங்கள் அனைத்தும் மொத்தமாக ரூ.38 லட்சம் ஆகும். தவிர, இதர உபகரணங்கள் மற்றும் மின் இணைப்பு வேலைகளுக்கு ரூ.2 லட்சம் வரை செலவாகும். எவர்சில்வர் தட்டு, தாம்பூலத் தட்டு தவிர, குடம், தவளை, பானை போன்ற பாத்திரங்களும் இதன்மூலம் தயாரிக்க முடியும்.

முதலீடு (ரூ)

நிலம் / கட்டடம் : வாடகை
இயந்திரங்கள் : 40 லட்சம்

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் வங்கிக் கடன் கிடைக்கும்.

நமது பங்கு (5%) : 2 லட்சம்
மானியம் (25%) : 10 லட்சம்
வங்கிக் கடன் : 28 லட்சம்

உற்பத்தித் திறன்!

நமது திட்டத்தில் குடம் தயாரிப்பது மட்டுமே உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. தரமான ஒரு குடம் சராசரியாக ஒரு கிலோ எடை கொண்டதாக இருக்கும். நமது உற்பத்தி இலக்கு வாரத்துக்கு 1,000 குடங்கள். அதாவது, மாதத்துக்கு சுமார் 4,000 குடங்கள் தயாரிக்கலாம். என்றாலும், 3,000 குடங்கள் என்று கணக்கில் எடுத்துக்கொள்வோம்.

மூலப்பொருள் செலவு!

ஒரு கிலோ ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் தகடு ரூ.200 என மொத்த விலையில் வாங்கலாம். மாதம் 3,000 கிலோ விற்பனை இலக்கை எட்ட 3,600 கிலோ தகடுகள் தேவை. உற்பத்தியிலிருந்து 20% கழிவு ஒதுங்குகிறது என்றால், 600 கிலோ போகும். இதை கிலோ ஒன்றுக்கு ரூ.40 என்கிற வகையில் விற்பனை செய்யலாம். நமது உற்பத்தி இலக்குக்கு ஏற்ப மாதத்துக்குத் தேவையான மூலப்பொருள் செலவு: 7,20,000. இதர துணைப் பொருட்கள் ரூ.50,000. மொத்தம்: ரூ.7,70,000

தேவையான பணியாளர்கள் (ரூ.)

மேற்பார்வையாளர் 1 : 12,000
பணியாளர்கள் 10 X 8,000: 80,000
விற்பனையாளர்கள் 2 X 10,000: 20,000
மொத்தம் : 1,12,000

நிர்வாகச் செலவுகள் (ரூ.)

வாடகை : 10,000
மின்சாரம் : 20,000
ஏற்று இறக்கு கூலி : 20,000
அலுவலக நிர்வாகம் : 10,000
இயந்திரப் பராமரிப்பு : 20,000
விற்பனை செலவு : 10,000
மேலாண்மை செலவு : 20,000
மொத்தம் : 1,10,000

நடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ.)

மூலப்பொருட்கள் : 7,70,000
சம்பளம் : 1,12,000
நிர்வாகச் செலவுகள் : 1,10,000

மொத்த செலவுகள்: 9,92,000. (இதற்குத் தனியாக நடைமுறை மூலதனக் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.)

விற்பனை வரவு:

உற்பத்திக்குப்பின் ஒரு கிலோ எவர்சில்வர் பாத்திரம் 450 வரை விற்பனை செய்யலாம் என்றாலும், நாம் சராசரியாக ரூ.400 என்று வைத்துக்கொள்வோம். இதன் அடிப்படையில் நமது விற்பனை வரவு: 3,000 ஜ் 400: 12,00,000.

கழிவு மூலமான வரவு : 600X40: 24,000.
மொத்த வரவு : 12,24,000

கடன் திருப்பம் மற்றும் வட்டி (ரூ)

மூலதன கடன் திருப்பம் (60 மாதங்கள்) : 46,700
மூலதனக் கடன் வட்டி (12.5%) : 29,200
நடைமுறை மூலதனக் கடனுக்கான
வட்டி (குறுகிய காலம்) : 10,500
மொத்தம் : 86,400
மொத்த வரவு : 12,24,000
மொத்த செலவு : 9,92,000
கடன் திருப்பம் மற்றும் வட்டி : 86,400
லாபம் : 1,45,600

(திட்ட விவரங்கள் உதவி: ராமசாமி தேசாய், சிஆர் பிசினஸ் சொல்யூஷன்ஸ், திருச்சி.)
படங்கள்: என்.ஜி.மணிகண்டன்.

''மொத்த ஆர்டர் வாங்கினால் லாபம்!''

ஆறுமுகம், ஆறுமுகம் எவர்சில்வர் பட்டறை, திருச்சி.

''நான் கடந்த 20 வருடங்களாக இந்தத் தொழிலில் இருக்கிறேன். தற்போது மின்சாரம் மற்றும் ஆள்பற்றாக்குறைக் காரணமாக சிறு உற்பத்தியாளர்களுக்குத் தேக்கம் நிலவுகிறது. வட மாநிலங்களில் பெரிய முதலீடுகளுடன் இதே தொழில் தொடங்கப்படுவதால், இங்கு விலை குறைவாகக் கொடுக்கிறார்கள். இப்போது இயந்திரங்கள் வைத்து உற்பத்தி செய்வது மட்டுமல்லாமல், பாலிஷ் வேலைகளுக்கு வெளியில் கொடுத்து வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சில்லறை தொழில் வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. எங்களைப் போன்ற உற்பத்தியாளர்கள் தவிர, பெரிய நிறுவனங்கள் தங்களுக்கு என்றே சொந்த பட்டறைகளும் வைத்து நடத்தி வருகின்றன. நாம் மொத்த ஆர்டர்களில் கவனம் செலுத்தும்போது தொய்வில்லாமல் வேலை செய்யலாம்.''