Published:Updated:

பணம் கொட்டும் தொழில்கள் 31

ஊறுகாய் தயாரிப்பு! நீரை.மகேந்திரன்

உணவு பதப்படுத்தும் துறையில் எப்போதும் லாபகரமான தொழில் வாய்ப்பு ஊறுகாய் தயாரிப்பு. மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய், பூண்டு, தக்காளி, நெல்லி என சீஸனுக்கு ஏற்ப கிடைக்கும் பொருட்களைக் கொண்டு குறைந்த விலையில் லாபகரமாகச் செய்ய உகந்த தொழில் இது.

சீஸனுக்கு ஏற்ப கிடைக்கும் காய்களை வாங்கி, உப்பு சேர்த்து பதப்படுத்தி பேரல்களில் அடைத்து வைத்துக்கொண்டால், ஒரு வருடம் வரை பயன்படுத்த முடியும். நமது உற்பத்திக்கு ஏற்ப இதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான இயந்திங்கள் மற்றும் உபகரணங்கள்:

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

காய்கள் பதப்படுத்தும் பேரல்கள் (250 லிட்டர் கொள்ளளவு): 200

கட்டிங் இயந்திரம், அரவை இயந்திரம், கலவை இயந்திரம், சீலிங் இயந்திரம், லேபிள் ஒட்டும் இயந்திரம்.

இந்த இயந்திரங்கள் அனைத்தும் ரூ.6 லட்சத்துக்குள் வாங்கிவிட முடியும்.

பணம் கொட்டும் தொழில்கள் 31

திட்ட அறிக்கை முதலீடு (ரூ)

இடம்: சொந்த கட்டடம் அல்லது வாடகை
இயந்திரங்கள்    : 6 லட்சம்
இதர உபகரணங்கள்    : 1 லட்சம்
மொத்த முதலீடு    : 7 லட்சம்

பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இதற்கு மானியம் மற்றும் வங்கிக் கடன் கிடைக்கும்.

நமது பங்கு (5%)        : ரூ.35 ஆயிரம்
மானியம் (25%)        : ரூ.1.75 லட்சம்
வங்கிக் கடன் (70%)      : ரூ.4.90 லட்சம்

பணம் கொட்டும் தொழில்கள் 31

தயாரிப்பு முறை!

நமது இந்தத் திட்ட அறிக்கையில் மாங்காய் ஊறுகாய் தயாரிப்பதைப் பற்றிப் பார்க்கலாம். மாங்காய் அதிகமாக வரத்து உள்ள பருவத்தில் வாங்கி அதை வெட்டி, கொட்டை நீக்கி ஊறுகாய் போட ஏதுவாகத் துண்டுகளாக்குவது வரை செய்துகொள்ள ஒரு கிலோவுக்கு ரூ.10 வரை செலவாகும். இந்த வேலைகளை துணைத் தொழிலாக வெளியில் தந்து  வாங்கிக்கொள்ளலாம்.

தவிர, மிளகாய் தூள், தரமான நல்லெண்ணெய், பெருங்காயம் போன்ற பொருட்கள் சேர்க்க ரூ.20 செலவாகும். அதாவது, ஒரு கிலோ மாங்காய் ஊறுகாய் தயாரிக்க ரூ.30 வரை செலவாகும். இதை 300 கிராம் பவுச் வீதம் அல்லது பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்ய ரூ.10 வரை செலவாகும்.

தினசரி நாம் 500 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். என்றாலும் நாம் 300 கிலோ உற்பத்தி இலக்கு வைத்துக் கொள்வோம்.

மூலப்பொருள் செலவுகள் (ரூ)

தினசரி 300 கிலோ உற்பத்திக்கு 250 கிலோ மாங்காய் தேவை. இதர பொருட்கள் 50 கிலோ தேவை. மாதம் 25 வேலை நாட்களுக்கு 6,250 கிலோ மாங்காய் துண்டுகள் தேவை. இதர பொருட்கள் 1,250 கிலோ தேவை.

ஒரு கிலோ மாங்காய் ரூ.10 எனில் 6,250 கிலோவுக்கு ரூ.62,500 தேவை. இதர பொருட்கள் சராசரியாக கிலோ 200 வீதம் எனில் மாதம் 2.50 லட்சம் தேவை. மூலப்பொருள் மொத்த செலவு ரூ.3,12,500.

பணம் கொட்டும் தொழில்கள் 31

பேக்கிங்!

உற்பத்திக்குப்பின் ஒரு கிலோ ஊறுகாய் பவுச்சுகளில் பேக்கிங் செய்ய ரூ.10 வரை செலவாகும். நமது மாத உற்பத்தி 7,500 கிலோ என்கிறபோது ரூ.75,000 தேவைப்படும்.

  பணியாளர்கள்!

மேற்பார்வையாளர் 1             : 10,000
திறன் பணியாளர்கள்10ஙீ6,000    : 60,000
விற்பனையாளர்கள் 2ஙீ10         : 20,000
மொத்தம்     : 90,000

நிர்வாகச் செலவுகள் (ரூ)

வாடகை     : 10,000
மின்சாரம்     : 10,000
இயந்திர பராமரிப்பு                 : 5,000
மேலாண்மைச் செலவுகள்            : 5,000
ஏற்று இறக்கு கூலி                : 20,000
விற்பனைச் செலவுகள்              : 10,000
மொத்த செலவுகள்                   : 60,000

பணம் கொட்டும் தொழில்கள் 31

நடைமுறை மூலதனச் செலவுகள் (ரூ)

மூலப்பொருள் செலவு    : 3,12,500
பேக்கிங்                          : 75,000
பணியாளர்கள்       : 90,000
நிர்வாகச் செலவுகள்      : 60,000

மொத்தம்   : 5,37,500

இதற்குத் தனியாக நடைமுறை மூலதனக் கடன் கிடைக்கும்.

கடன் மற்றும் வட்டி திருப்பம் (ரூ)
மூலதனக் கடன் திருப்பம்
(60 மாதங்கள்)        : 8,200
மூலதனக் கடன் வட்டி (12.5%)     : 5,100
நடைமுறை மூலதனக் கடன் வட்டி  : 5,600
மொத்தம்     : 18,900

பணம் கொட்டும் தொழில்கள் 31

விற்பனை வரவு (ரூ)

உற்பத்திக்குப்பின் கிலோ 80 வரை விற்கலாம். மாதம் 7500 கிலோ உற்பத்தி எனில் மொத்த விற்பனை வரவு ரூ.6 லட்சம்.

மொத்த வரவு : ரூ.6,00,000
மொத்த செலவு : ரூ.5,37,500
கடன் மற்றும் வட்டி திருப்பம்   : ரூ.18,900
லாபம்   : ரூ.43,600

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்.
(திட்ட விவரங்கள் உதவி ராமசமி தேசாய், சி.ஆர். பிசினஸ் சொல்யூஷன்ஸ், திருச்சி.)