Published:Updated:

SME கைடுலைன்

ஜெயிக்க வைக்கும் மொத்த தர மேலாண்மை!ச.ஸ்ரீராம்

SME கைடுலைன்

ஜெயிக்க வைக்கும் மொத்த தர மேலாண்மை!ச.ஸ்ரீராம்

Published:Updated:

ஸ்எம்இ-களுக்கு நன்கு தெரிந்த, அதேநேரத்தில் எப்போதும் சவாலாக இருப்பது உற்பத்திதான். பொருட்களைத் தரமாகச் செய்ய முடியாமல் போவதால், போட்டி மிகுந்த இந்த உலகில் அவர்களால் நிலைத்து நிற்க முடிவதில்லை. இதனால் ஏற்கெனவே கிடைத்த வேலை ஆர்டர்களைக்கூட இழக்க வேண்டிய கட்டாயம் எஸ்எம்இ-களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.

இந்தப் பிரச்னைக்கு எப்படி தீர்வு காண்பது என சுந்தரம் கிளைட்டன் நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் மோகன கிருஷ்ணனிடம் கேட்டோம்.

‘‘தரமான உற்பத்தி என்பது பொருட்களைத் தயாரிப்பதில் தொடங்கி, அது தயாரிக்கப்பட்ட பொருளாக வெளியேறுவது வரையில் இருப்பதாகத்தான் எஸ்எம்இகள் நினைக்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் இந்த விஷயத்தை வேறுமாதிரி அணுகுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

SME கைடுலைன்

சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் சிறப்பான தரத்தைத் தருகின்றன என்றால், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருளை தரமாகத் தயாரிப்பது என மட்டும் அணுகுவதில்லை. தொழிலா ளர்கள் பணிக்கு வரும் நேரம் தொடங்கி பொருட்கள் வாடிக்கை யாளரையோ நிறுவனத்தையோ சென்றடையும் வரை தொடர் கண்காணிப்பு என்பது தொடங்கி அவர்களுக்கு வழங்கும் சேவை வரை அனைத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

அவர்களும் இங்குள்ள எஸ்எம்இ்-களைப்போலத் தான் தங்கள் தொழிலை செய்கிறார்கள். ஆனால், அதனைச் செய்ய என்ன வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள் என்பதைத்தான் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும்.

இங்குள்ள எஸ்எம்இ-கள் தங்கள் உற்பத்தியில் சில வழிமுறைகளைக் கையாள வேண்டும். சில சிறப்பு உத்திகளைப் பயன்படுத்தி எஸ்எம்இ-கள் தங்கள் பொருளை தயாரிக்கும் பட்சத்தில் அவர்களால் சர்வதேசத் தரத்திலும், போட்டியைச் சமாளிக்கும் விதத்திலும் தரமாக பொருட்களைத் தரமுடியும்.

SME கைடுலைன்

இதற்கு முதலாவதாக, அவர்கள் பிடிசிஏ (PDCA) எனும் சுழற்சிமுறையைத் தங்கள் தயாரிப்பில் புகுத்த வேண்டும். இதில் திட்டம் (Plan), செயல் (Do), சோதனை (Check), அமலாக்கம் (Action) என நான்கு நிலைகளில் தயாரிப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.

இந்த முறையை எப்படி பின்பற்ற வேண்டும் எனில், எஸ்எம்இ-கள் ஆரம்பத்தில் ஆர்டர் வாங்கும்போதே, முதலில் அவர்களால் இந்த ஆர்டரை குறித்த நேரத்தில் செய்துதர முடியுமா என்பதை நன்கு யோசித்து, முடியும் என்று தெரிந்தால் மட்டுமே அந்த ஆர்டரை எடுக்க வேண்டும்.

வேலைக்கான ஆர்டரை எடுத்தவுடன் மூலப்பொருட்களை வாங்குவது, அதன் தரம், அளவு ஆகியவற்றுக்கும், இந்தத் தயாரிப்பைத் தயாரிக்க எடுத்துக்கொள்ளும் காலம், தொழிலாளர்களின் திறன் என அனைத்து விஷயங்களிலும் இதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

SME கைடுலைன்

அதேபோல், தயாரிக்கப்படும் பொருள், அதன் தரம், அதற்காக நிறுவனம் வழங்கும் சேவை என அனைத்திலும் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் ஏதாவது ஓர் இடத்தில் தவறு ஏற்பட்டால், அங்கு மட்டும் திருத்திக்கொண்டால், தொடர் வேலைகள் பாதிக்கப்படாமல் இருக்கும்.

இந்த வழிமுறைகள் எஸ்எம்இகளால் நடைமுறைப்படுத்த முடியாத ராக்கெட் அறிவியல் தத்துவமல்ல. இவை மிகவும் சாதாரணமாக அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் அளவில் உள்ள விஷயங்கள்தான். இதில் எஸ்எம்இ-கள் கவனிக்க வேண்டிய ஏழு விஷயங்கள் உள்ளன. அவைதான் ஒரு நிறுவனத்தில் மொத்த தர மேலாண்மையைக் குறிக்கின்றன. தயாரிக்கும் பொருள், அதன் தரம், அதற்கானத் தயாரிப்பு விலை, தயாரித்த பொருளை டெலிவரி செய்வது, தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பொருட்களின் பாதுகாப்பு, பணியாளர்களின் நிர்வாகம் மீதான அக்கறை ஆகிய ஏழும்தான் எஸ்எம்இ-கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய விஷயங்களாக உள்ளன.

இதனைத்தான் மொத்த தர மேலாண்மையில் (PQCDMS) என்று சொல்வார்கள். இதனை எஸ்எம்இ-கள் தங்கள் பணியில் புகுத்திக்கொண்டு தயாரிப்பைத் தொடங்கும்போது அவர்கள் தயாரிப்பில் ஏற்படும் மாற்றம் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இதனைத் தொடர்வதால் அவரது வேலை, குறித்த நேரத்தில் முடிவடையும்; அதனால் அவரால் எடுத்த ஆர்டர் களைக் குறித்த நேரத்தில் டெலிவரி கொடுக்க முடியும்.

எஸ்எம்இ-கள் மொத்த தர மேலாண்மையைக் கையாண்டால், அவர்கள் தயாரிப்பில் மேலாண்மை தத்துவங்களில் உள்ளதுபோல் 3S அதிகரிக்கும். அதாவது, ‘ஸ்கில், ஸ்கேல், ஸ்பீடு’ எனப்படும் மூன்று எஸ் அதிகரித்தால். நான்காவதாக சக்சஸ் என்னும் ‘எஸ்’ அவர்களுக்குக் கிடைக்கும். பெரிய நிறுவனங்கள்தான் இதுபோன்ற உத்திகளைக் கையாள வேண்டும் என்று இல்லாமல், சிறு தொழில்முனைவோர்கள்கூட இதனைத் தொடர்ந்தால் வெற்றி கிடைக்கும்’’ என்றார்.

SME கைடுலைன்

மும்பையில் டப்பா வாலாக்கள் தங்கள் தொழிலை மொத்த தர மேலாண்மையின் அடிப்படையில் செய்வதால், தவறுகள் நிகழாதபடிக்கு அவர்கள் தங்கள் தொழிலை செய்ய முடிகிறது. தமிழகம் முழுக்க உள்ள எஸ்எம்இ-கள் இந்த முறையில் பொருட்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தால், தரத்தில் உயர்ந்து நிற்கலாமே!

 படங்கள்: தே.தீட்ஷித், க.பாலாஜி.

SME கைடுலைன்

திருச்சி எஸ்எம்இ-களுக்கு பயிற்சி தரும் ஆர்.கே. டிரஸ்ட்!

SME கைடுலைன்

கடந்த பத்து வருடங்களாக திருச்சியில் உள்ள எஸ்எம்இ

‘‘திருச்சியில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கு பயிற்சியளித்திருக்கிறோம். உற்பத்தித் திறன் மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்பான அனைத்து பயிற்சிகளையும் எஸ்எம்இ

மாவட்ட தொழில் மையம் மற்றும் எம்எஸ்எம்இ மையத்தோடு இணைந்து இந்தப் பயிற்சியை அளிக்கிறோம். அதுமட்டுமின்றி, தொழில்வாரியாகவும் பயிற்சியளித்து வருகிறோம்.

திருச்சியில் முக்கியமாக இருப்பது இன்ஜினீயரிங் வொர்க்ஸ் மற்றும் நகை தயாரிப்பு தொழில்கள்தான். இவற்றுக்கு நாங்கள் தனியாக அவர்களது தேவைக்கேற்றவாறு பயிற்சியளிக்கிறோம். இதுபோன்ற பயிற்சிகளால் அவர்களது செயல்திறன் அதிகரித்து தொழில் வளர்ச்சியடைய உதவிபுரிகிறோம்.

மேலும், கிளஸ்டர் எனப்படும் கூட்டுத் தொழில் முறையை இங்கு அறிமுகப்படுத்த உள்ளோம். இங்கு ஏற்கெனவே இன்ஜினீயரிங் கிளஸ்டர் இயங்கி வருகிறது. அதுதவிர, இப்போது தங்க நகை தயாரிப்பு கிளஸ்டர் ஒன்றை ரூ.3.76 கோடி செலவில் அறிமுகப்படுத்த உள்ளோம். இதற்கான அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்.

இங்கு 9 காரட் தங்க நகை தயாரிப்பு சிறுதொழிலாக நல்ல முறையில் நடைபெற்று வருவதால் இதனைக் கூட்டுத் தொழிலாக ஆரம்பிக்க முடிவு செய்துள்ளோம். பயிற்சிகள் மட்டுமின்றி தொழில்முனைவோர்களுக்கு அரசு திட்டங்களைப் பெற்று தருவது போன்ற செயல்களையும் செய்து வருகிறோம்’’ என்றார்.

திருச்சியில் உள்ள எஸ்எம்இகள் இதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாமே!

&
களுக்கு பயிற்சியளித்து வருகிறது ஆர்.கே டிரஸ்ட். இந்த அமைப்பின் நிறுவனர் கனக சபாபதியுடன் பேசினோம்.
&
களுக்கு அளித்து வருகிறோம்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism