Published:Updated:

ஹோம் பட்ஜெட் : மளிகைப் பொருட்கள் சீட்டு போடலாமா?

இரா.ரூபாவதி படங்கள்: தே.தீட்ஷித்.

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

தீபாவளி என்றதும் பட்டாசு, புது டிரெஸ்ஸுக்கு அடுத்தபடியாக நினைவுக்கு வருவது தீபாவளி ஃபண்டுதான். இந்த ஃபண்ட் மூலம் புடைவை, இனிப்பு என பல பொருட்களை வழங்கும் வழக்கம் இன்றும்கூட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தாலும் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களை வாங்குகிற வழக்கமும் இருக்கவே செய்கிறது.

இந்த மளிகை பண்டின் மூலம் என்னென்ன பொருட்கள் தருவார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுவார்கள். அதாவது, 25 கிலோ அரிசி, 5 கிலோ உளுந்து, 5 கிலோ துவரம் பருப்பு, 2 கிலோ புளி, 1 கிலோ கடலைப் பருப்பு, 5 கிலோ சர்க்கரை, 15 கிலோ சமையல் எண்ணெய் என வசூலிக்கும் பணத்துக்கேற்ப பொருளின் அளவை நிர்ணயித்துக் கொள்வார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இப்படி செய்வதன் மூலம் ஒருவர் கட்டுகிற பணத்தைவிட கூடுதலான மதிப்பில் பல பொருட்கள் கிடைக்கும். அதாவது, ஒருவர் 3,600 ரூபாய் கட்டினால், சுமார் 4,000த்திலிருந்து 4,500 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கிடைக்கும்.

இந்தச் சீட்டு நடத்துபவர்கள் ஒவ்வொரு பொருளையும் மொத்த சந்தைக்குச் சென்று வாங்குவார்கள். அதாவது, அரிசி வாங்க வேண்டும் எனில் ஆந்திராவுக்குச் சென்று மொத்தமாக வாங்குவார்கள். பருப்பு வாங்க வேண்டுமெனில் விருதுநகருக்கு செல்வார்கள். இப்படி ஒவ்வொரு பொருளையும் மொத்த சந்தைக்கு சென்று வாங்குவதால், ஓரளவுக்கு குறைந்த விலையில் ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்குத் தருவார்கள்.

ஹோம் பட்ஜெட் : மளிகைப் பொருட்கள்  சீட்டு போடலாமா?

அட, நல்ல விஷயமா இருக்கே என்று நினைக்கிறீர்களா? இது நாணயத்தின் ஒருபக்கம்தான். இந்த ஃபண்ட் திட்டத்தில் பல அசெளகரியங்களும் உண்டு.

முதலாவது அசெளகரியம், இந்த ஃபண்ட் திட்டத்தில் உள்ள ரிஸ்க். இந்தச் சீட்டு நடத்துபவர்கள் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் பணத்தை வசூல் செய்து அந்தப் பணத்தைப் பிறருக்கு கடனாகத் தருவார்கள்.  

கடன் வாங்குபவர்களிடம் 36 முதல் 60% வரை வட்டி வசூல் செய்வார்கள். இவ்வளவு அதிக வட்டிக்கு கடன் வாங்குகிறவர்கள், அசல் பணத்தை திரும்பத் தராமல் போவதற்கு வாய்ப்புண்டு.  

இரண்டாவது விஷயம், உங்களுக்குத் தரப்படும் பொருளின் விலை எம்ஆர்பியுடன் ஒப்பிட்டுதான் லாபத்தை கூறுவார்கள். நீங்கள் சாதாரணமாக உங்களின் வீட்டுக்கு அருகில் மொத்த விலை கடையில் பொருட்கள் வாங்கினாலே லாபம் கிடைக்கும்.

ஹோம் பட்ஜெட் : மளிகைப் பொருட்கள்  சீட்டு போடலாமா?

மூன்றாவது விஷயம், அதிக அளவில் சில பொருட்கள் கிடைக்கும்போது அதைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படும். அப்படி பாதுகாக்கப்படும் பொருட்களில் சில தானிய பொருட்கள் கெட்டுப் போவதற் கான வாய்ப்புகள் அதிகம். எனவே   சிறிய குடும்பத்துக்கு அளவுக்கதிகமாகத் தரப்படும் பொருள் தேவையில்லாத ஒன்றாக இருக்கும். தேவையில்லாதப் பொருட்களை தேவைக்கும் அதிகமாக வாங்க வேண்டிய கட்டாயம் இந்தத் திட்டத்தில் ஏற்படும்.  

இந்த ஃபண்ட் திட்டத்தில் சேர்ந்து பொருட்கள் வாங்குவதைவிட, ஒவ்வொரு மாதமும் ஃபண்டில் கட்டும் பணத்தை ஆர்டியில் சேமித்து, அதனை வைத்து மொத்த விலைக் கடையில் நமக்குத் தேவையான பொருட்களை வாங்கினாலே நல்ல லாபம் பார்க்க முடியும்.

ஹோம் பட்ஜெட் : மளிகைப் பொருட்கள்  சீட்டு போடலாமா?