தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் தங்கள் நிதித் தேவைக்கு முதலில் அணுகுவது வங்கிகளையே. என்றாலும், தொழில் ஓரளவுக்கு வளர்ந்தபிறகு மேற்கொண்டு அதிக நிதித் தேவைப்படும்போது, வங்கிகளையே நம்பியிருக்காமல், பங்குச் சந்தையில் பட்டியலிடுவதன் மூலம் இன்னும் அதிக நிதியைத் திரட்ட முடியும். இதன்மூலம் தங்கள் தொழிலை இன்னும் பெரிதாகச் செய்ய முடியும்.

இத்தனை ஆண்டுகளாக 100 கோடி ரூபாய்க்கும் அதிக டேர்னோவர் கொண்ட நிறுவனங்களே பங்குச் சந்தையில் பட்டியலிடக்கூடிய நிலைமை இருந்தது. இதற்குக் கீழே டேர்னோவர் கொண்ட நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாததால், மேற்கொண்டு தங்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய முடியாமல் தவித்தன. இதனால் தொழில் விரிவாக்கத்துக்கு வங்கிகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டாய சிறு தொழில்முனைவோர்களுக்கு இத்தனை நாளும் இருந்து வந்தது.

ஆனால், எஸ்எம்இகளும் பங்குச் சந்தையில் பட்டியலிட்டு, தங்கள் தொழிலை சிறப்பாக விரிவாக்கம் செய்துகொள்வதற்காக எஸ்எம்இ எக்ஸ்சேஞ்ச் என்கிற பெயரில் புதிய எக்ஸ்சேஞ்ச் ஒன்று 2010 மே மாதம் தொடங்கப்பட்டது.

செபியின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த எக்ஸ்சேஞ்சை மேலும் பிரபலப்படுத்தவும், எஸ்எம்இகளை நிதித் தொடர்பாக தரம் உயர்த்தவும் தேசிய பங்குச் சந்தையும், மும்பை பங்குச் சந்தையும் சிறுதொழில் வளர்ச்சி வங்கியுடன் (SIDBI) இணைந்து கோயம்புத்தூரில் இதற்கான முதல் கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர்கள், எஸ்எம்இகள் ஏன் இந்த எக்ஸ்சேஞ்சில் தங்கள் நிறுவனத்தை பட்டியலிட வேண்டும், இதனால் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

எப்படி பட்டியலிடுவது?

எஸ்எம்இகள் தங்கள் நிறுவனங்களை இந்த எக்ஸ்சேஞ்சில் பட்டியலிட என்ன செய்ய வேண்டும்?

1.பங்குகளை வெளியிடும் எஸ்எம்இகள் மெர்ச்சன்ட் பேங்கரிடம் முதலில் ஆலோசனை செய்ய வேண்டும்.

2. பங்கு பட்டியலிடத் தேவையான ஆவணங்களைத் தயாரிக்க வேண்டும்.நிதிக் கணக்குகளுக்கான ஆவணங்கள், பொருட்களுக்கான ஒப்பந்தங்கள், அரசின் அனுமதி ஆகியவற்றைப் பட்டியலிடுவதற்கு விண்ணப்பிக்கும் முன் மெர்ச்சன்ட் பேங்கரிடம் தர வேண்டும்.

அவற்றை மெர்ச்ன்ட் பேங்கர் தரப்பில் சரிபார்த்திருக்கப்பட வேண்டும். பங்கு வெளியீடு பற்றிய அறிக்கையை மெர்ச்சன்ட் பேங்கர் தயாரிக்க வேண்டும்.

3. நிறுவனத்தைப் பற்றியும் பங்கு வெளியீடு பற்றியும் முழு விவரங்கள் அடங்கிய டிஆர்ஹெச்பி-யை (Draft Red-herring Prospectus) சமர்ப்பிக்க வேண்டும். அதனை பிஎஸ்சி எக்ஸ்சேஞ்சானது சரிபார்த்து ஐபிஓ மூலம் பங்கு வெளியிடுவதற்கு அனுமதி அளிக்கும். இதன்பிறகு அந்தப் பங்கு பிஎஸ்இ எஸ்எம்இ எக்ஸ்சேஞ்சில் வர்த்தகம் ஆகத் தொடங்கும்.

அடிப்படைத் தகுதிகள்!

எஸ்எம்இகள் தங்கள் நிறுவனத்தை இந்த எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடுவதற்கு சில அடிப்படைத் தகுதிகள் இருக்க வேண்டும்.

எஸ்எம்இகளின் மொத்த சொத்து மதிப்பு என்பது சமீபத்திய கணக்கீட்டின் படி ரூ.1 கோடிக்குமேல் இருக்க வேண்டும்.

கம்பெனிகள் சட்டம் 1956-ன்படி, 205-வது பிரிவின் கீழ் லாபம் என்பது சராசரியான அளவில் உயர்ந்திருக்க வேண்டும். ஒருவேளை எதிர்பாராத அதிகபட்ச வருமானம் காரணமாக உயர்ந்திருந்தால், மொத்த சொத்து மதிப்பு ரூ.3 கோடியாக இருக்க வேண்டும்.

நிறுவனம் கட்டாயமாக ஓர் இணையதளத்தை வைத்திருக்க வேண்டும்.

எஸ்எம்இ எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்த நிறுவனம் ஓர் ஆண்டு்க்கு புரமோட்டர்ஸ் யாரையும் மாற்றக் கூடாது.

நிறுவனம் மற்றவர்கள் வர்த்தகம் செய்ய வசதியாக டீமேட் கணக்குகளை வழங்க வழிசெய்ய வேண்டும்.

பட்டியலிடுவதற்கான வழிகாட்டுதல்கள்:

பங்குகளை வழங்க ஆரம்பித்தபிறகு அவர்களது மூலதனத்தின் முக மதிப்பு 25 கோடி ரூபாய்க்குள் இருக்க வேண்டும். இதற்கான குறைந்தபட்ச விண்ணப்ப மற்றும் டிரேடிங் லாட் அளவு
1 லட்சத்துக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தின் பங்கு, சந்தையில் பட்டியலிடப்பட்டபின் யார் வேண்டுமானாலும் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முடியும்.

நிதிப் பிரச்னை தீரும்!

சிறு தொழில்முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை இந்த எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடுதன் மூலம் அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று பிஎஸ்இயின் சிஇஓ ஆஷிஷ் செளஹான் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘எஸ்எம்இ-கள் இந்த எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடுவதற்கு சற்று தயங்கு கிறார்கள் 2010-ல் ஆரம்பித்த எஸ்எம்இ எக்ஸ்சேஞ்சில் தற்போதுவரை 63 எஸ்எம்இகள் மட்டுமே பட்டிய லிட்டுள்ளனர்.

இதில் பட்டியலிடப்படுவதால் பல நன்மைகள் உள்ளன. முதலாவதாக, எஸ்எம்இகளின் முக்கியப் பிரச்னையான நிதிப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இதில் பட்டியலிடப்படுவதன் மூலம் அவர்களது மூலதனம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், வெளியே உள்ள வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும் எஸ்எம்இயை பற்றி அதிகம் தெரியவும், அதன் மதிப்பு கூடவும் வாய்ப்பிருக்கிறது. நிறுவனங்கள் இணைவது மற்றும் வாங்குதல் எளிதாகும்.

சிறப்பாகச் செயல்படும்பட்சத்தில் நிறுவனத்தின் ரிஸ்க் குறைய வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குப் பங்குகளையே சம்பளமாக அளிக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் நிறுவனம் மீதான அக்கறையும் அதிகரிக்கும்.

ஒரு எஸ்எம்இ தனது நிறுவனத்தை பட்டியலிடுவதன் மூலம் குறுகிய காலத்தில் தங்களை சர்வதேச தரத்துக்கு தரம் உயர்த்திக்கொள்ள முடியும்” என்றார்.

உதவி செய்யத் தயார்!

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய என்எஸ்இ-ன் சிஇஓ சித்ரா ராமகிருஷ்ணா, ‘‘பெரிய நிறுவனங்கள் டிரேட் செய்யும் பங்குச் சந்தைகளில் எஸ்எம்இகளாலும் டிரேட் செய்ய முடியும் என்பதற்கு தற்போது பட்டிய லிடப்பட்டுள்ள 63 எஸ்எம்இகள் ஒரு முன்னுதாரணம்.

முதலில் எஸ்எம்இகள் தொழில் செய்ய மிகப் பெரிய மூலதனம் தேவைப்படுகிறது. அதற்கு ரிஸ்க் அதிகம் என்பதால் அவர்கள் தங்களைப் பட்டிய லிடுவது அவசியமாகிறது. இதன் வேகம் தற்போதுதான் அதிகரிக்கத் துவங்கி யுள்ளது.

தற்போது எஸ்எம்இகளுக்கு இதில் உள்ள சிக்கலாக நாங்கள் கருதுவது அவர்களிடம் சரியான வழிகாட்டுதலும், திட்டமிடலும் இலலாததுதான். இந்தச் சிக்கலை தீர்ப்பதற்குத்தான் பங்குச் சந்தை அமைப்புகள் சிட்பியுடன் இணைந்து வழிகாட்டுதலுக்கு உதவிபுரியத் தொடங்கியுள்ளோம்’’ என்றார்.

செபி ஒரு மேம்படுத்தும் அமைப்பு!

இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட செபியின் சேர்மன் யூ.கே.சின்ஹா ‘‘செபி என்பது போலியான நிறுவனங்களைத் தண்டிக்கும் அமைப்பு அல்லது முறைகேடான நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துத் தடை செய்யும் அமைப்பு என்கிற எண்ணம் தான் எல்லோருக்கும் உள்ளது.

நாங்கள் (செபி) வெறும் நெறிமுறை யாளராக மட்டும் அல்லாமல், மேம்படுத்த உதவும் அமைப்பாகவும் செயல்படுகிறோம் என்பதற்கு இது போன்ற திட்டங்கள்தான் உதாரணம். இந்தத் திட்டங்களை எஸ்எம்இகள் சிறப்பாகப் பயன்படுத்தி அதேசமயத்தில் பாதுகாப்பாக வர்த்தகம் செய்ய செபி இவர்களுக்கு உதவும்’’ என்றார்.

தகுதியான எஸ்எம்இகள் சிறிய அளவில் தொழில் செய்துகொண்டி ருந்தால் தங்களைத் தரம் உயர்த்திக் கொள்ள, வர்த்தகத்தைப் பெருக்க பங்குச் சந்தையில் தங்களைப் பட்டிய லிட்டுக் கொள்ளலாமே!

நீங்களும் உங்கள் நிறுவனத்தை மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிட விரும்பினால், அதுகுறித்து மேற்கொண்டு தெரிந்துகொள்ள பின்வரும் இணையதளத்துக்கு சென்று மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

http://www.bsesme.com/GetListed/ Regist_From.aspx?expandable=2&ddlid=LC

படங்கள்: மு.குகன்.