ஒருநாள் எனது அலுவலக மேலாளருடன் வெளியில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவரின் எளிமையான வாழ்க்கை குறித்து அவரிடம் பேச்சு கொடுத்தபோது எளிமை மற்றும் சிக்கனம் குறித்த அவசியத்தையும், அவசியமற்ற செலவுகளைத் தவிர்ப்பது பற்றியும், தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் தொடர் மருத்துவச் செலவுகள் பற்றியும் அதற்காக அவர் செய்து வைத்திருக்கும் இன்ஷூரன்ஸ் திட்டம் பற்றியும் விளக்கினார்.

வாழ்வில்பட்ட சுகதுக்கத்துக்குப் பிறகு அவர் வீடு வாங்கிய விஷயங்கள் என்று நாங்கள் இருவரும் பேசிக்கொண்டே காரில் பயணித்தோம். எனக்கு ஆர்வம் தொற்றிக்கொள்ள பல கேள்விகளைக் கேட்டு அதற்கான வழிமுறைகளையும் தெரிந்து கொண்டேன். இறுதியாக, அவர் தனது பிள்ளைகளின் கல்வி மற்றும் திருமணத்துக்கு செய்த முதலீட்டுத் திட்டங்களையும், வாங்கிய கடனால் வந்த வேதனைகளையும் எடுத்துச் சொன்னார்.

பயணம் முடிந்து திரும்பும்போது, அன்று அவரிடம் இருந்து எனக்கு கிடைத்தது நிதி சார்ந்த அறிவு மட்டுமல்ல, என் வாழ்க்கைக்கான பாடம் என்பதை உணர்ந்திருந்தேன். இந்த மேலாளர்போலவே எல்லோருக்கும் இருந்துவிட்டால், முதலீடு சார்ந்த விஷயங்கள், வாழ்க்கைக்குத் தேவை யான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தவிக்கும் நிலை யாருக்கும் வராது.

பகிர்வதால் பலன் உண்டு!

ஆனால், பெண்ணிடம் வயதைக் கேட்கக்கூடாது, ஆணிடம் சம்பாத்தியத்தைக் கேட்கக்கூடாது என்று நமக்கு நாமே பல தேவையில்லாத கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டு சம்பளத் தொகையைச் சொல்வதில் ஆரம்பித்து குடும்பத்தின் பொருளாதார நடவடிக்கைகள்வரை சுற்றத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதில் பாசாங்கு செய்து வருகிறோம். கல்வியைக் கற்றுத் தருவதால் அறிவு வளர்வதுபோல, நிதி சார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து கொண்டால், அனுபவம் அதிகரிக்கும் என்பதே உண்மை.

எதற்காக நிதி சார்ந்த விஷயங்களை அடுத்தவர்களிடம் பகிர வேண்டும், எந்தெந்த விஷயங்களைப் பகிரலாம், எதை பகிர்தல் கூடாது போன்ற விஷயங்களைப் பார்ப்போம்.

முதலீடு சார்ந்த அறிவே பணக்காரனாக்கும்!

''ரியல் எஸ்டேட், தங்கம், பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் போன்றவை ஒருவரை பணக்காரர்களாக மாற்றிவிடாது. இந்த முதலீடுகள் சார்ந்த அறிவே ஒருவரை பணக்காரர்களாக ஆக்கும்' பிரபல ஆங்கில எழுத்தாளர் ராபர்ட் டி.கியோசகி எழுதிய புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார். அப்படி இருக்கையில் தன்னுடைய முதலீடு சார்ந்த அறிவுகளை நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தாராளமாக பகிர்ந்துகொள்ளலாம். அதை அவர்கள் தெரிந்துகொள்ளும் ஆர்வம் காட்டும் போது இரு தரப்பினருக்கும் சாதகமான சூழ்நிலை உருவாகிறது.

ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில் பணிக்குச் செல்வோர், தொழில்முனைவோர் என எல்லோரும் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். நலம் விசாரிப்பதில்கூட கஞ்சத்தனம் காட்டி வருகிறோம். முதலில் இந்தக் குணநலன்களை மக்கள் தகர்த்தெறிய வேண்டும். நம்மில் பெரும்பாலானவர் களுக்கு தன் குடும்பத்தின் நிதி நிலைமை, சேமிப்பு, காப்பீடு மற்றும் எதிர்காலம் போன்றவற்றை நினைக்க, செயல்படுத்த நேரம் இருந்தும் அதை செய்யாமல் காலதாமதப்படுத்தி வருகிறோம். நண்பர் களுடன், உறவினர்களுடன் குடும்ப பொருளாதாரத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது இந்தக் காலதாமதம் கூட தகர்ந்துபோகும் என்பதே உண்மை.

முதலீட்டு விஷயங்களை சாதகமாக்குதல் அவசியம்!

இன்றைய இனணயதள உலகில் பொருளாதார ரீதியில் நமக்கு கிடைக்கும் செய்திகள் ஏராளம். இந்தச் செய்திகளை நமக்கு எப்படி சாதகமாக்கிக் கொள்கிறோம் என்பதில்தான் நமக்குள் இருக்கிறது வேறுபாடு. வெகு சிலர் முதலீட்டு விஷயங்களை தாங்கிவரும் செய்திகளை ஆராய்ந்து அதில் எதிர்கால தேவைகளுக்கான முதலீட்டை ஆரம்பித்துவிடுவார்கள்.

இதுபோன்ற விஷயங்களை கவனிக்காதவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருப்பார்கள். இந்த இடத்தில்தான் மேற்கொண்ட முதலீட்டின் மூலம் கிடைத்த அனுபவத்தை அல்லது அது சார்ந்த விஷயங்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது அவர்களும் இதன் மூலம் லாபமடைவார்கள்.

எதை, யாரிடம் பகிரலாம்?

பகிர்தல் என்றவுடன் நம்மிடையே எழும் கேள்விகள் ஏராளம். யாரிடம், எந்தெந்த விஷயங்களில்..? இந்தக் கேள்விகளுக்கு ஒரே பதில் கிடையாது. இது மனிதருக்கு மனிதர் வித்தியாசப் படும். முதலில் நிதி சார்ந்த விஷயங்களை, அனுபவங்களை பகிரும்போது ஆர்வமாக கேட்கும் நபர்களிடம் பகிர்ந்துகொள்வது உத்தமம்.

பகிர்தல் என்று வரும்போது இருதரப்பினர் களிடமும் பகிர்தலுக்கான உணர்வு இருப்பது அவசியம். அப்போதுதான் நிதி சார்ந்த அனுபவங்களை ஒருவருக் கொருவர் பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் தெளிவு வாழ்க்கைக்கு நன்மை தருவதாக இருக்கும்.

நீங்கள் எந்தத் திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்துள்ளீர்கள் என்பதைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். எங்கெல்லாம் சேமிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது என்பதிலிருந்து அதற்கான வழிமுறைகள் என்ன என்பதை பகிர்ந்து கொள்ளலாம். இது தொடர்பாக நண்பர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கலாம். இத்தகைய செய்திகள் மற்றும் விவரங்களை அறிய உதவும் இதழ்களும், வலைதளங்களும் ஏராளமாக இருக்கின்றன. அதையும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பகிர்வதால் அவர்களுக்கு நம் மீதான மதிப்பும் மரியாதையும் கூடும்.

அனுபவம் சொல்லித் தந்த பாடம்!

சமீபத்தில் ஒரு நிதித் திட்டம் குறித்து பேச நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவருக்கு 25 வயதில் மகன் இருக்கிறான். அவனது பெயர் ரகு. நான் சென்றிருந்த அன்று ரகுவின் பெரியப்பா மகன் பாரதியும் வந்திருந்தார். இருவரும் ஹாலில் உட்கார்ந்து வெகு சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் என் நண்பரும் நிதி ஆலோசனை குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த விஷயம் என்னை வெகுவாக கவர்ந்தது. பாரதி, வங்கியில் கடன் வாங்கி சொந்தமாக வீடு கட்டி வருவதாகவும், அதற்காக அவர் மேற்கொண்ட முன்பணத் தொகை செலுத்தியது, வங்கியின் செயல்பாடு, வீட்டு கட்டுமான பொருட்கள் வாங்கியது போன்ற அத்தனை விஷயங்களையும் ரகுவிடம் பகிர்ந்துகொண்டிருந்தான். இடையிடையே சந்தித்த சிக்கல்களையும் அதை எதிர்கொண்ட விதத்தையும் விளக்கமாகச் சொன்னபோது ரகுவுக்கு ஆர்வம் தொற்றிக்கொள்ள பல்வேறு சந்தேகங்களை பாரதியிடம் கேட்டு தெரிந்துகொண்டான்.

அவர்கள் பேசி முடித்ததும் ரகுவுடன் நான் பேசினேன். ''நானும் எதிர்காலத்துல வீடு கட்டணும்னு திட்டம் வச்சிருக்கேன். பாரதி அண்ணா சொன்னது எனக்கு ரொம்ப உதவியா இருந்தது' என்றான். இதுபோன்ற அனுபவ பகிர்தலே எலோருக்கும் தேவை.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்தலாம்!

இந்தக் கால இளைய தலைமுறை யினருக்கு அறிவுரைகள் பிடிப்பதில்லை. நாம் பகிர்ந்துகொள்ளும் விவரங்கள் அறிவுரையாக இல்லாமல், அனுபவங்களாக வழங்கப்பட்டால் கேட்பவர்களுக்கு சுவாரஸ்யம் கூடும். இளைய தலைமுறையினர்களில் பெரும்பாலானவர்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற வலைதளங்களை அநாவசியமாக பயன்படுத்தி வருகிறார்கள். இதைப் பொழுதுபோக்காக மட்டும் பயன்படுத்தாமல் நண்பர்கள், உறவினர்களுக்கு இடையே நிதி சார்ந்த விவரங்களைப் பகிர்வதற்காகவும் பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.