மத்திய அரசு 2014-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலில் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் மீதான வரி விதிப்பு முறையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. அதாவது, வருமான வரி கணக்கிடும் முறையில் மாற்றத்தைச் செய்துள்ளது. இந்த வரிச் சலுகை மாற்றத்தினால் எஃப்எம்பி திட்டங்களில் லாபம் கிடைக்காது என பலரும் நினைக்கிறார்கள். ஆனால், இந்தத் திட்டங்களின் மூலமும் லாபம் பார்க்க முடியும். அது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

பட்ஜெட்டில் அறிவித்த வருமான வரிவிதிப்பு மாற்றத்தினால், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட மியூச்சுவல் ஃபண்ட் கடன் திட்டங்களில் அதிக வருமானம் கிடைப்பதற்கான வழிகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

பட்ஜெட்டில் அறிவித்த மாற்றங்கள் அனைத்தும் ஜூலை 11, 2014-லிருந்துதான் அமல்படுத்தப்பட்டது. அதற்குமுன் விற்பனை செய்யப்பட்ட யூனிட்களுக்குப் பழைய சட்டங்கள் அப்படியே பின்பற்றப்படும். பட்ஜெட்டுக்கு முன், ஈக்விட்டி அல்லாத கடன் சார்ந்த ஃபண்டுகளை ஒரு வருடத்துக்குமேல் வைத்திருந்து விற்றால் கிடைக்கும் வருமானத்துக்கு நீண்டலகால மூலதன ஆதாய வரி கட்டினால் போதும் என்றிருந்தது.

ஆனால் தற்போதைய பட்ஜெட்டில் மூன்றாண்டு காலத்துக்குமேல் வைத்திருந்து விற்றால்தான் நீண்டகால மூலதன ஆதாயமாக கருதப்படும் என்று கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20 சதவிகிதம் வரி செலுத்த வேண்டும். பணவீக்க விகித சலுகையைப் பெற வேண்டுமெனில், நீங்கள் மூன்று ஆண்டுகள் முதலீட்டை வைத்திருக்க வேண்டும்.

ஒப்பன் எண்டட் மற்றும் குளோஸ் எண்டட் கடன் ஃபண்டுகள், கடன் சார்ந்த ஃபண்டுகளான எம்ஐபி, எஃப்எம்பி, இன்டர்நேஷனல் ஃபண்ட், கோல்டு ஃபண்ட், ஹைபிரிட் ஃபண்டுகள் மற்றும் ஃபண்ட் ஆஃப் ஃபண்டுகள் அனைத்தும் ஈக்விட்டி அல்லாத மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களாகும்.

கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஜூலை 10-ம் தேதிக்குமுன் யூனிட்களை விற்பனை செய்தவர்கள், பணவீக்க விகித சரிக்கட்டலுக்குமுன் 10 சதவிகிதமும், பணவீக்க விகித சரிக்கட்டலுக்குப் பிறகு 20 சதவிகிதமும் வரிச் செலுத்த வேண்டியிருக்கும். தற்போது பட்ஜெட்டில், பணவீக்க விகித சரிக்கட்டலுக்குமுன் 10 சதவிகித வரி என்பது நீக்கப்பட்டுள்ளது. இனி இந்த மாற்றங்கள் கடன் சார்ந்த ஃபண்டுகளை எவ்வாறு பாதிக்கும் என பார்ப்போம்.

லிக்விட் அல்லது அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்ட் திட்டங்களில் குறுகிய கால நோக்கில் (ஒரு வருடத்துக்குக் குறைவாக) முதலீடு செய்திருப்பவர் களுக்கு பெரிய மாறுதல் கிடையாது. அதற்குக் காரணம், ஒரு வருடத்துக்கு குறைவாக முதலீடு செய்திருந்தால் குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். இந்த வரியில் எந்த மாற்றமும் இல்லை.

உங்களின் அஸெட் அலோகேஷனில் கடன் சார்ந்த ஃபண்டுகளில் மூன்றாண்டுகளுக்கு மேலாக முதலீடு செய்வதற்குத் திட்டமிட்டிருந்தால், பணவீக்க விகித சரிக்கட்டலை பயன்படுத்திக்கொள்ள முடியும். கடந்த மூன்று ஆண்டுகள் பணவீக்க விகிதம் அதிகமாக இருந்தது. (கடந்த மூன்று வருடமாக ஆண்டுக்கு 9.2 சதவிகிதமாக இருந்தது!) எனவே, நீங்கள் வரியே செலுத்த தேவையில்லாமலும் இருந்திருக்கும்.

இதைப்போலவே, கோல்டு ஃபண்ட் அல்லது இன்டர்நேஷனல் ஃபண்டுகளும் நீண்டகால நோக்கிலேயே சொத்து உருவாக்குவதற்காக முதலீடு செய்யப் பட்டவையாக இருக்கும். அதனால் மேற்சொல்லப்பட்ட வருமான வரி மாற்றங்கள் இந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலான முதலீட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது.

எஃப்எம்பி எதிர்காலம் என்ன?

எஃப்எம்பி திட்டங்களில் 1-3 வருடங் களுக்கு முதலீடுகளை வைத்திருக்கிறீர்கள் எனில், உங்களுக்குக் கிடைக்கும் வருமானமானது ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிகமாக இருக்க வாய்ப்பில்லை. அதேசமயம் எஃப்எம்பி திட்டங்களில், அவை அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகளை மேற்கொண்டால் சற்று அதிக வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், நீங்கள் முதலீடு செய்யும் நோக்கமானது குறைவான ரிஸ்க், அதேநேரத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் எனில், எஃப்எம்பி முதலீ்டுகள் பொருத்தமானதாக இருக்காது.

இதற்குமுன் எஃப்எம்பி திட்டங்களில் 365 நாட்களுக்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு ‘இரட்டை பணவீக்க விகித’ (Double Indexation) சலுகையைப் பெற முடியும். ஆனால், 2014-ம் நிதியாண்டு பட்ஜெட் தாக்கலுக்குப்பின், இந்தச் சலுகையைப் பெற முடியாது. அதாவது, மூன்று வருடத்துக்்குக் கீழ் எஃப்எம்பி திட்டங்களில் முதலீடு செய்யும்போது இரட்டை பணவீக்க விகித சலுகையைப் பெற முடியாது.

ஷார்ட் டேர்ம் டெட் ஃபண்ட் உத்திகள்!

எஃப்எம்பி திட்டங்களில் ஷார்ட், மீடியம் டேர்ம் காலங்களில் ஒப்பன் எண்டட் கடன் ஃபண்ட் திட்டங்களில் 1-3 வருடங்களுக்கு முதலீடு செய்திருந்தால் பணவீக்க விகித சலுகையைப் பெற முடியாது. உங்களுடைய முதலீட்டின் தேவை ஓராண்டு காலத்துக்கு மேல் இருந்தால், வரும் காலங்களில் வட்டிவிகிதம் குறையும்போது இந்த ஃபண்டுகளில் அதிக வருமானம் கிடைக்கும். வரிக்குப் பிந்தைய வருமானம் எஃப்டியைவிட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.

முதலீட்டாளர்களுக்கு மாற்று வழி திட்டங்கள்!

ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் இதற்கான முதல் வழி. இந்தவகை ஃபண்டுகள் ஈக்விட்டி வகையைச் சார்ந்தது. இந்தவகை ஃபண்டுகள் தாங்கள் முதலீடு செய்திருக்கும் பங்குகளில் டெரிவேட்டிவ் (ஃப்யூச்சர் & ஆப்ஷன்) சந்தையிலும் முதலீடு செய்திருக்கும். இதற்கு வருமானமானது ரொக்கச் சந்தைக்கும் டெரிவேட்டிவ் சந்தைக்கும் இருக்கும் வித்தியாசத்திலிருந்து கிடைக்கும்.

பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கத்தில் இருக்கும்போது இந்தவகை ஃபண்டுகள் நன்றாகச் செயல்படும். சந்தை ஒரே திசையில் செல்லும் போது வருமான வாய்ப்புகள் அவ்வளவாக இருக்காது. ஆனால், ஈக்விட்டி ஃபண்டுகள் கொடுக்கும் வருமானத்தை இந்த ஃபண்டுகள் தராது. அதேபோல ஈக்விட்டி ஃபண்டுகளைப்போல, அதிக இறக்கத்தையும் கொடுக்காது. எஃப்டி போன்ற பாரம்பரியமான முதலீடுகள் தரும் லாபத்தைவிட சிறிது அதிக லாபமே தரும். முதலீட்டுக்கான ரிஸ்க் என்பதை ஏறக்குறைய இல்லை என்றே சொல்லலாம்.

இந்தவகை ஃபண்டுகளுக்கு வெளியேறும் காலம் குறைவு மற்றும் டிவிடெண்ட் விநியோக வரி இருக்காது. ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு நீண்டகால மூலதன ஆதாய வரி கிடையாது. வரிச் செலுத்த விரும்பாதவர் களுக்கு இது ஒரு நல்ல திட்டமாகும்.

இந்தவகை ஃபண்டான ஐசிஐசிஐ புரூடென்ஷியல் ஈக்விட்டி ஆர்பிட்ரேஜ், ஐடிஎஃப்சி மற்றும் எஸ்பிஐ ஆர்பிட்ரேஜ் ஆப்பர்சூனிட்டீஸ் ஃபண்டுகள் கடந்த ஒரு வருடத்தில் 9.4 - 9.8 சதவிகித வருமானம் கொடுத்துள்ளன.

2-3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யக்கூடியவர்கள் எம்ஐபி மற்றும் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்யலாம். இவற்றையும் 3 வருடங்கள் வைத்திருந்தால்தானே வரிச் சலுகை கிடைக்கும் என்று நினைக்கலாம். ஆனால், இந்த ஃபண்டுகள் கடந்த 2-3 வருடங்களில் டெப்ட் ஃபண்டுகளைவிட அதிக வருமானம் தந்துள்ளது.

அதாவது, கிடைக்கும் வருமானத்தில் உங்களுடைய வரம்புக்குரிய வரியை செலுத்தியபிறகு ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட சற்று அதிக வருமானம் கொடுத்துள்ளது. ஆனால், இந்த ஃபண்டுகளில் பங்கு முதலீடு 20-25 சதவிகிதம் இருப்பதால் ரிஸ்க் இருக்கும். வருமான வரி வரம்பு 10-20 சதவிகிதத்தில் இருப்பவர்களுக்கு இது உகந்ததாக இருக்கும்.

முதலீட்டாளர்கள் வரிக்குப் பிந்தைய வருமானத்தைக் கணக்கிட்டு முதலீடு செய்வது அவசியம். பொதுவாக மூன்று வருட காலத்தில், 9 சதவிகிதம் வட்டி தரும் எஃப்டியில் வரிக்குப் பிந்தைய வருமானம் என்பது 6.3லிருந்து 6.6 சதவிகிதமாக இருக்கும். கடன் சார்ந்த ஃபண்டுகளில் வருமானம் தினசரி கூட்டு வளர்ச்சியில் இருக்கும். அதுவே எஃப்டியில் வட்டியானது காலாண்டுக்கு ஒருமுறையே கணக்கிடப்படும். இதுவும் ஃபண்டுகள் அதிக வருமானம் தருவதற்கு காரணமாகும்.