Published:Updated:

ஷேர்லக் - டிசம்பருக்குள் சென்செக்ஸ் 28000

ஷேர்லக் - டிசம்பருக்குள் சென்செக்ஸ் 28000

ஷேர்லக் - டிசம்பருக்குள் சென்செக்ஸ் 28000

ஷேர்லக் - டிசம்பருக்குள் சென்செக்ஸ் 28000

Published:Updated:

வந்ததும் வராததுமாக ஷேர்லக்கிடம் ஒரு முக்கிய மான கேள்வியைக் கேட்டோம். ‘‘சந்தை இறங்கும் என கடந்த வாரம் நீர் சொன்னீர். அப்படி எதுவும் நடக்க வில்லையே?’’ நம் கேள்வியைக் கேட்டுவிட்டு, அமைதியாக பதில் சொல்ல ஆரம்பித்தார் ஷேர்லக்.

‘‘அப்போதிருந்த உலக நிலைமை அப்படி. தவிர, ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜனின் எச்சரிக்கை வேறு அந்த கோணத்தில் நம்மை யோசிக்க வைத்தது. சந்தை இறங்கினால் தொடர்ந்து முதலீடு செய்யுங்கள் என்றுதான் நான்  சொன்னேன். இதில் தவறேதும் இல்லையே!   2015 ஆகஸ்ட் மாதத்துக்குள் சென்செக்ஸ் 30000-ஐ தாண்டிவிடும் என பங்கு தரகு நிறுவனமான நோமுரா கணித்திருக்கிறது. ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, கெயில் இந்தியா, கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக் போன்ற பங்குகளை முதலீட்டு நோக்கில் கவனிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.

ஆனால், டாயிட்ச் பேங்க் 2014 இறுதியில் சந்தை 28000 புள்ளி களையும், பேங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லின்ச் 2014 இறுதிக்குள் சந்தை 27000 புள்ளிகளை யும் சொல்லியிருக்கிறது. பங்குச் சந்தையின் அடுத்த மூவ் எப்படி இருக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றவருக்கு சூடாக டீ கொடுத்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘கோல் இந்தியா நிறுவனத்தில் என்ன பிரச்னை?'' என்று விசாரித்தோம்.

ஷேர்லக் - டிசம்பருக்குள் சென்செக்ஸ் 28000

‘‘முதல் காலாண்டில் இந்த நிறுவ னத்தின் லாபம் 8% அதிகரித்து ரூ.4033 கோடியாக உள்ளது. உற்பத்தி குறைந்துள்ள நிலையில் விற்பனை அதிக ரித்ததால் நிகர லாபம் உயர்ந்துள்ளது. ஆனால், இது எதிர்பார்ப்பைவிட குறைவு. மேலும், மொத்த செலவும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு தன்வசம் உள்ள பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. பங்கு விற்பனை வெற்றி பெற சந்தை மட்டும் நன்றாக இருந்தால் போதாது; நிறுவனத்தின் செயல்பாடும் நன்றாக இருக்க வேண்டும். அந்த வகையில், பணியாளர்களின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கையில் கோல் இந்தியா இறங்கி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் 3.4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். பல பிரிவுகளில் தேவைக்கு அதிகமாக பணியாளர்கள் இருப்பதால், அவர் களை திறமையாக பயன்படுத்தத் திட்ட மிட்டு வருகிறது'' என்றும் சொன்னார்.

‘‘இந்த வாரம் வெளியான கம்பெனி களின் காலாண்டு முடிவுகள் எப்படி?’’ என்று கேட்டவுடன்,  வரிசையாக பல நிறுவனங்கள் பற்றி அடுக்கினார்.
 
‘‘டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் முதல் காலாண்டில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. டாடா மோட்டார்ஸின் பிரிட்டிஷ் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ஓவரின் விற்பனை அதிகரித்ததால் நிகர லாபம் மூன்று மடங்கு மேல் அதிகரித்து ரூ.5,398 கோடியாக உள்ளது.

பொதுத்துறை ஸ்டீல் நிறுவனமான செயில்-ன் நிகர லாபம் 18% உயர்ந்து உள்ளது. மூலப்பொருட்கள் விலை குறைவு, விற்பனை அதிகரிப்பு போன்ற வற்றால் முதல் காலாண்டில் இந்த நிறுவ னத்தின் நிகர லாபம் ரூ.530 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் நிகர லாபம் ரூ.400 கோடியாக இருக்கும் என்பது அனலிஸ்ட் கள் எதிர்பார்ப்பாக இருந்தது.

கெயில் நிறுவனத்தின் லாபம் 23% குறைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 3.7%  அதிகரித்துள்ள நிலையில் நிகர லாபம் 23% வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் இயற்கை எரிவாயு பகிர்மானச் சேவை மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகத்தின் செயல்பாடு சரியில்லை என்பதால் நிகர லாபம் குறைந்துள்ளது.

ஜிவிகே பவர் அண்ட் இன்ஃப்ராவின் நிகர இழப்பு 9 மடங்கு அதிரித்துள்ளது. இதன் மும்பை விமான நிலைய புராஜெக்ட் மூலமான இழப்பு மிகவும் அதிகரித்ததால் நிகர இழப்பு ரூ.281 கோடியாக உயர்ந்துள்ளது. ஒருமுறை கட்டணமாக ரூ.287 கோடி செலுத்தியதால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபமும் குறைந்துள்ளது. தங்க நகைக் கடன் வழங்குவது மீது விதிக்கப்பட்ட தடையால் கடன் வழங்குவது குறைந்து லாபம் குறைந்துள்ளது. தற்போது, வழங்கப்படும் கடன் சதவிகிதம் மற்றும் கடன் தொகை அளவு மீதான தடைகள் நீக்கப்பட்டு இருப்பதால் வரும் காலாண்டுகளில் இந்த  நிறுவனத்தின் செயல்பாடு மேம்படும்.
ரியல் எஸ்டேட் நிறுவனமான பர்ஸ்வ்நாத்-ன் நிகர லாபம் 60% வீழ்ச்சி கண்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், நிறுவனத்தின் அதிக கடன் சுமையாகும். நிறுவனத்தின் முக்கிய புரோ மோட்டர்களில் ஒருவரான பிரதீப் குமார் ஜெயின் அதிக அளவிலான பங்குகளை அடமானம் வைத்திருப்பதால், பங்கு முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் லாபம் 70% குறைந்திருக்கிறது. முதல் காலாண்டில் இதன் நிகர விற்பனை 11% அதிகரித்து, ரூ.36,143 கோடியாக உள்ளது. அதேநேரத்தில், கடனுக்கான வட்டி, வரி மற்றும் ஒருமுறை செலுத்தும் கட்டணம் ரூ.262 கோடி போன்றவற்றால் நிகர லாபம் 70% குறைந்து ரூ.337 கோடியாகி இருக்கிறது’’ என பல செய்திகளைச் சொன்னார்.

‘‘ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனப் பங்கின் விலை ஒரேநாளில் 10% குறைந்துள்ளதே, என்ன காரணம்?’’ என்று விசாரித்தோம்.

‘‘இந்த நிறுவனத்துக்கு 60,000 கோடி ரூபாய் கடன் மற்றும் ரியல் எஸ்டேட் வணிகம் மூலமான வருமானம் 84% குறைந்து போனது போன்றவற்றால் பல பங்கு தரகு நிறுவனங்கள், இந்தப் பங்கை விற்க பரிந்துரை செய்திருக்கின்றன. இதனால், பங்குகள் அதிகம் விற்கப்படவே விலை வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது’’ என்றவர், ‘‘வெளியே எப்போது வேண்டுமானாலும் மழை வருகிற மாதிரி இருக்கிறது'' என்று சொல்லிவிட்டு, சட்டென புறப்பட்டுச் சென்றார்.

கடைசி செய்தி: ரிசர்வ் வங்கியின் நிர்வாகத்தை மேம்படுத்த பல சீர்திருத்தங்களையும், புதிதாக சிஓஓ (சீஃப் ஆபரேட்டிங் ஆபீஸர்) என்கிற பதவியையும் உருவாக்க ஆர்பிஐ இயக்குநர் குழு ஒப்புதல் அளித்தாலும் இதற்கு நிதி அமைச்சகம் ஒப்புதல் தருமா என்கிற  கேள்வி எழுந்திருக்கிறது. இதனால் ஆர்பிஐக்கும் நிதி அமைச்சகத்துக்கும் புது மோதல் உருவாகி இருப்பதாக மும்பை வட்டாரத்தில் பேச்சு!