Published:Updated:

இரண்டு மாதக் குழந்தை... மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா ?

இரண்டு மாதக் குழந்தை... மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா ?

இரண்டு மாதக் குழந்தை... மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா ?

இரண்டு மாதக் குழந்தை... மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா ?

Published:Updated:

கேள்வி - பதில்

?என் குடும்பத்துக்கு மெடிக்ளைம் பாலிசி எடுக்கலாம் என திட்டமிட் டுள்ளேன். நான், கணவர் மற்றும் 5 வயதில் மகன்; மேலும், இரண்டு மாதத்தில் ஆண் குழந்தை இருக்கிறது.குழந்தையின் பெயரை மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா?

 உமா மகேஸ்வரி, நாமக்கல். ஜெ.ஜெயந்தி, மண்டல மேலாளர், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘உங்கள் இரண்டு மாதக் குழந்தையையும் மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியும். மெடிக்ளைம் பாலிசியில் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே கவரேஜ் கிடைக்கும். எனவே, உங்கள் குடும்பத்தில் உள்ள 4  உறுப்பினர்களையும் சேர்த்து பாலிசி எடுக்கலாம்.”

?என் நண்பரின் தந்தை ஏழு வருடத்துக்கு முன் இறந்துவிட்டார். அவர் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி கணக்குகளில் சுமார் ரூ.2 லட்சம்  எஃப்.டியில் போட்டுவைத்திருந்தார். இதற்கு நாமினியாக யாரையும் நியமிக்கவில்லை. அவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். இந்தப் பணத்தை எப்படி பெறுவது?

சந்திரன், மதுரை. ஜி.கந்த சுப்ரமணியன், உதவி பொதுமேலாளர், எஸ்பிஐ.

‘‘உங்கள் நண்பரின் தந்தை வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருந்தால், இப்போது உயிருடன் இருப்பவர் வங்கியை அணுகி டெபாசிட் பணத்தைப் பெறலாம்.  ஒருவேளை அவர் ஏதாவது உயில் எழுதி வைத்திருந்தால், உயிலில் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் வங்கியை அணுகி டெபாசிட்டை எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டு மாதக் குழந்தை... மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா ?

உயில் எதுவும் எழுதவும் இல்லை; அதே நேரத்தில் நாமினியையும் குறிப்பிடவில்லை எனில், டெபாசிட்டை திரும்பத் தர வங்கி சில ஆவணங்களைக் கேட்கும். அதாவது, டெபாசிட் வைத்திருப்பவரின் இறப்பு சான்றிதழ், சட்டப்படி பெறப்பட்ட வாரிசு சான்றிதழ் மற்றும் டெபாசிட்டை சட்டப் படியான வாரிசுக்குத் தரும்படி கேட்டு வங்கிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். மேலும், வங்கி டெபாசிட்டை தரும்போது, இந்த டெபாசிட்டின் மீது வேறு யாருக்காவது உரிமை உள்ளது என நிரூபிக்கப்பட்டால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வேன் என்கிற வாக்குறுதியை உங்களிடம் இருந்து  வாங்கிக்கொள்ளும். அதேபோல, ரத்த சொந்தம் இல்லாத ஒன்று அல்லது இரண்டு தனிப்பட்ட நபர்களிடம் ஷூரிட்டி வாங்கி வங்கியில் ஒப்படைத்தால்தான் டெபாசிட்டை பெற முடியும்.”

?என்னால் மாதம் ரூ.3,000 சேமிக்க முடியும். இதைப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என நினைக்கிறேன். இந்தத் தொகை எனக்கு 15 ஆண்டுகள் கழித்துதான் தேவை? நான் எந்தமாதிரியான பங்குகளில் முதலீடு செய்யலாம்?

 மோகன் குமார், சேலம். வெங்கடேஸ்வரன், இயக்குநர், மெக்கனோசி அண்ட் கோ.

‘‘தனிப்பட்ட பங்குகளில் நேரடியாக முதலீடு செய்வதில் ரிஸ்க் அதிகம். மேலும், நீண்ட கால முதலீட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் முதலீட்டை ஆய்வு  செய்வது அவசியம். ஆய்வின் அடிப்படை யில் முதலீட்டை மாற்றியமைப்பதும் முக்கியம். இதற்கு அதிக விவரம் மற்றும் நேரம் தேவைப்படும். எனவே, நீங்கள் பல நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் இடிஎஃப் திட்டங்களில் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும் தொகையை நிஃப்டி பீஸ், பேங்க் நிஃப்டி பீஸ் மற்றும் ஜூனியர் பீஸ் திட்டங்களில் பிரித்து முதலீடு செய்யலாம்.’’

இரண்டு மாதக் குழந்தை... மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா ?

?ரிலையன்ஸ் மீடியா பங்குகள் 250 வைத்துள்ளேன். இந்தப் பங்குகள் தற்போது டிரேட் ஆகவில்லை. இந்தப் பங்கு என் டீமேட் கணக்கில் இருக்குமா? இந்தப் பங்கு மீண்டும் டிரேட் ஆகும்போது என்னால் விற்றுக்கொள்ள முடியுமா?

 சுந்தர், திருச்சி. எம்.எஸ்.ஓ.அண்ணாமலை, ஷேர் புரோக்கர், சேலம்.

“ரிலையன்ஸ் மீடியா பங்கு டீலிஸ்ட் ஆகிவிட்டது. கடந்த மார்ச் 2014-ல் ரிலையன்ஸ் குழும நிறுவனமான ரிலையன்ஸ் லேண்ட் மற்றும் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனங்கள் இந்தப் பங்கு களை முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.61க்கு வாங்கிக்கொள்வதாக அறிவித்தன. இதற்கான ஆஃபர் கடிதமும் பங்குதாரர் களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஒருவேளை அந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கவில்லை எனில், செபியில்  உள்ள முதலீட்டாளர்கள் குறைதீர்க்கும் கமிட்டிக்கு கடிதம் எழுதி பிரச்னைக்கு தீர்வு காணலாம். நீங்கள் விற்காதவரையில் உங்களுடைய டீமேட் கணக்கிலே ரிலையன்ஸ் மீடியா பங்குகள் இருக்கும். எனினும் இந்த கம்பெனி பங்கு மீண்டும் லிஸ்ட் ஆவதற்கான வாய்ப்பு குறைவே.”

இரண்டு மாதக் குழந்தை... மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா ?

?என் நண்பர் பொதுத்துறை வங்கி ஒன்றில் ரூ.25 ஆயிரம் தனிநபர் கடன் வாங்கினார். அதற்கு நான் கேரன்டர் கையெழுத்து போட்டேன். நண்பர் கடனை சரியாக திரும்பச் செலுத்தாத காரணத்தினால் வங்கியானது கடன் தொகையைச் செலுத்துமாறு என்னிடம் கேட்டது. நானும் வேறு வழியில்லாமல் கட்டினேன். இந்தக் கடன் தொகையை என் நண்பரிடமிருந்து சட்டப்படி பெற ஏதாவது வழி உள்ளதா?

கிருஷ்ணன், மதுரை. ஆர்.முருகபாரதி, வழக்கறிஞர்.

“உங்கள் நண்பர் மீது உரிமை மற்றும் குற்றவியல் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். அதாவது, நீங்கள் வங்கியில்  பணம் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் உங்களை ஏமாற்றியதாகக் கூறி குற்றவியல் (கிரிமினல்) வழக்குப் பதிவு செய்யலாம். அடுத்து, வங்கியில் உங்கள் நண்பருக்காக பணம் செலுத்தியதற்கான ஆதாரத்துடன் அவருக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பலாம். அதற்கும் அவர் சரியான பதிலளிக்க வில்லை எனில் உரிமையியல் (சிவில்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம்.”

இரண்டு மாதக் குழந்தை... மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா ?

?தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி எடுத்துள்ளேன். இதில் மோட்டார் வாகனத்தினால் ஏற்படும் விபத்துக்குதான் க்ளைம் கிடைக்குமா? எதிர்பாராத விதமாக நிகழும் தீ விபத்து, பாம்பு கடிப்பது, கட்டடம் இடிந்துவிழுவது போன்றவற்றினால் உயிர் இழப்பு ஏற்பட்டால் க்ளைம் கிடைக்குமா?

செந்தில் குமார், பவானி. பி.பாகுபலி, மேலாளர், நேஷனல் இன்ஷூரன்ஸ் கம்பெனி.

‘‘தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசி எடுத்திருப்பவர்களுக்கு அனைத்து வகையான அசம்பாவிதங்களுக்கும் இழப்பீடு கிடைக்கும். அதாவது, மோட்டார் வாகன விபத்து மற்றும் எதிர்பாராதவிதமாக நிகழும் விபத்துகள் மூலமான உயிர் இழப்பு களுக்கும் க்ளைம் கிடைக்கும். ஒருவர் மாடி படியிலிருந்து தடுக்கிவிழுந்து மரணம் அடைந்தாலும் க்ளைம் கிடைக்கும். மேலும் பாம்பு கடிப்பது, தீவிபத்து, கட்டடம் இடிந்து விழுவது போன்றவற்றிக்கு க்ளைம் கிடைக்கும். இயற்கை மரணம்,
தற்கொலைக்கு க்ளைம் கிடைக்காது.”

இரண்டு மாதக் குழந்தை... மெடிக்ளைம் பாலிசியில் சேர்க்க முடியுமா ?