கேள்வி - பதில்

? வெளிநாடு செல்ல திட்டமிட்டுள் ளேன். இதற்கு என்னென்ன இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்?

குமார், மதுரை.

வி.ஆர்.ரவிக்குமார், துணை மேலாளர், யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனி.

“வெளிநாடு செல்லும்போது ஓவர்சீஸ் மெடிக்ளைம் பாலிசி எடுப்பது அவசியம். அங்கு சென்ற பிறகு ஏதாவது உடல்நலக் குறைவினால் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்கும்போது க்ளைம் பெற முடியும். மேலும், ஒவ்வொரு நாட்டுக்கும் அடிப்படை பாலிசிகள் வித்தியாசப்படும். அதாவது அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் ஒருவகையான பாலிசியும், ஐரோப்பா கண்டத்தில் ஒருவகையான பாலிசியும், பிற நாடுகளில் ஒருவிதமான பாலிசியும் நடைமுறையில் உள்ளது. இந்தவகை பாலிசியில் வெளிநாடு செல்லும் நபரின் வயது, அவர் அந்த நாட்டில் தங்கும் நாட்கள், கவரேஜ் தொகை ஆகியவற்றைப் பொறுத்து பிரீமியம் கணக்கிடப்படும். தனியார் மற்றும் பொதுத் துறை இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைக்கிறது.”

? எனக்கு 30 வயது. மாத சம்பளம் ரூ.25 ஆயிரம். இதில் 10 ஆயிரம் ரூபாய் சேமிக்க முடியும். எனக்கு 2020-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் தேவை. எந்த வகையான முதலீடுகளை மேற்கொள்வது?

கதிரவன், வேலூர்.

வி.சங்கர், நிதி ஆலோசகர்.

“உங்களின் எதிர்பார்ப்பு கற்பனையில் மட்டுமே சாத்தியம். ஏனெனில், உங்களு டைய குறிக்கோளை அடைய ஆறு (2015 - 2020) ஆண்டுகள் மட்டுமே உள்ளன. குறிக்கோளை அடைய வேண்டும் எனில், மாதத்துக்கு 5.85 சதவிகிதம் வருமானம் கிடைக்க வேண்டும். அப்படியெனில் வருடத்துக்கு 70 சதவிகிதம் வருமானம் கிடைக்க வேண்டும். இவ்வளவு வருமானத்தைக் கொடுக்கும் வகையில் எந்த நிதித் திட்டமும் இல்லை.

அதிகபட்சம் வருடத்துக்கு 15 சதவிகித வருமானம்தான் கிடைக்கும். அப்படியெனில் 2020-ம் ஆண்டு 12 லட்சம் ரூபாய் கிடைக்கும். எனவே, உங்களின் குறிக்கோளை அடைவதற்கான வாய்ப்பு இல்லை. அதை அடைய வருடத்துக்கு 15 சதவிகித வருமானம் கிடைத்தால் கூட 210 மாதங்கள் முதலீடு செய்ய வேண்டும்.”

? எனக்கு 27 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். ஓய்வுக்காலத்துக்காக மாதம் 5 ஆயிரம் ரூபாய் சேமிக்க நினைக்கிறேன். இதற்கு என்பிஎஸ் அல்லது இஎல்எஸ்எஸ் திட்டத்தில் முதலீடு செய்யலாமா? எது லாபகரமாக இருக்கும்?

கிருஷ்ணமூர்த்தி, குஜராத்.

வி.டி.அரசு, நிதி ஆலோசகர்.

“உங்கள் முதலீட்டை பிரித்து முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். என்பிஎஸ் (கடன் மற்றும் ஈக்விட்டி சார்ந்த) திட்டத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 3 ஆயிரம் ரூபாயை டைவர்ஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம். ஃப்ராங்க்ளின் இந்தியா ஃப்ளக்ஸி கேப் ஃபண்ட், எல் அண்ட் டி இந்தியா குரோத் ஃபண்ட், ஹெச்டிஎஃப்சி கோர் அண்ட் சாட்டிலைட் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்யலாம் . மேலும் இஎல்எஸ்எஸ் ஃபண்டுகள் வருமான வரிவிலக்கு பெறுவ தற்காக முதலீடு செய்யப்படுபவையாகும்.”

? பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி ஃபண்ட் திட்டத்தில் மாதம் 2 ஆயிரம் ரூபாயும், யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட்-ல் தினமும் 200 ரூபாயும் கடந்த ஒரு வருடமாக முதலீடு செய்து வருகிறேன். இந்த முதலீட்டை தொடரலாமா? 10 வருடம் கழித்துதான் பணம் தேவைப்படும்.

பெருமாள், கடலூர்.

வெங்கடேஸ்வரன், நிதி ஆலோசகர்.

“பிர்லா சன் லைஃப் ஃப்ரன்ட்லைன் ஈக்விட்டி மற்றும் யூடிஐ ஆப்பர்ச்சூனிட்டீஸ் ஃபண்ட் ஆகிய இரண்டு ஃபண்டுகளும் லார்ஜ் கேப் வகையைச் சேர்ந்தது. இவை மிகவும் சிறந்த ஃபண்டுகள். இந்த இரண்டு ஃபண்டுகளும் நீண்ட காலத்தில் பெஞ்ச்மார்கைவிட அதிக வருமானம் கொடுத்துள்ளன. அந்தவகையில், இந்த ஃபண்டுகளில் முதலீட்டை தொடரலாம்.”

? பிபிஎஃப் முதலீட்டின் வரம்பு இந்த நிதியாண்டில் உயர்த்தப்பட்டுள்ளது. எனது பிபிஎஃப் கணக்கில் ஏற்கெனவே ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்துவிட்டேன். இப்போது மீதமுள்ள 50 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்ய முடியுமா?

முருகன், சேலம்.

மெர்வின் அலெக்ஸாண்டர், போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், சென்னை தலைமை தபால் நிலையம்.

“பிபிஎஃப் வரம்பு உயர்த்தப்பட்ட 50 ஆயிரம் ரூபாயை உங்களின் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்யலாம். ஏனெனில், இந்த வரம்பு உயர்வு என்பது 2014-ம் ஆண்டுக்கானது. ஒரு வருடத்துக்கு அதிகபட்சம் 12 தவணைகளில் பணம் செலுத்த முடியும்.

அதாவது, மாதம் ஒரு தவணை என்ற ரீதியில் இதைச் செய்யலாம். 12 தவணைகளை யாரும் முடித்திருக்க வாய்ப்பில்லை. எனவே, உங்களின் கணக்கில் மீதமுள்ள தவணைகளில் அல்லது ஒருமுறையாகச் செலுத்தலாம்.”

? 5 வருடங்களுக்கு முன் தனியார் வங்கியில் வீட்டுக் கடன் வாங்கினேன். இன்னும் 5 ஆண்டுகளுக்கு இஎம்ஐ செலுத்த வேண்டும். தற்போது எனக்கு 52 வயதாகிறது. இந்த நிலையில் மீதமுள்ள வீட்டுக் கடன் தொகைக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியுமா?

சண்முகம், மதுரை.

பல்ராம், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்.

“உங்களின் வயது 52. நிலுவையில் உள்ள கடன் தொகை அளவுக்கு இன்ஷூரன்ஸ் கிடைப்பதற்கான வாய்ப்புக் குறைவு. நீங்கள் கடன் வாங்கிய வங்கியிலும் இன்ஷூரன்ஸ் கொடுக்கமாட்டார்கள். ஏனெனில், இந்த வயதில் அதிக ரிஸ்க் இருக்கும் என்பதால் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் உங்களுக்கு பாலிசி வழங்க மறுக்கலாம். அப்படியே வற்புறுத்தினாலும் அதிக பிரீமியம், மருத்துவப் பரிசோதனை இருக்கும்.”