Published:Updated:

ஹோம் பட்ஜெட் - பெண்களுக்கும் தேவை டேர்ம் இன்ஷூரன்ஸ்

இரா.ரூபாவதி படங்கள்: ஆ.முத்துக்குமார், தே.தீட்ஷித்.

பிரீமியம் ஸ்டோரி

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

இன்றைய நவநாகரீக உலகில் குழந்தைகளின் கல்விக்கு தரமான பள்ளி, சொந்தமாக வீடு, கார், சொகுசு வாழ்க்கை என்பதுதான் பெரும்பாலான தம்பதிகளின் கனவாக உள்ளது. இந்தக் கனவை நிறைவேற்ற  கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது.  குடும்பச் செலவில் பெண்களின்  பங்களிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
 
முன்பெல்லாம் பெரும்பாலான குடும்பங்கள் ஆண்களை மட்டுமே நம்பி இருக்கும். இதனால், இன்ஷூரன்ஸ் பாலிசியும் ஆண்களின் பெயரிலே எடுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இன்றோ, ஆண்களைப்போல  பெண்களும் வாகனம் ஓட்ட ஆரம்பித்து விட்டார்கள். அதேபோல கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே கடன் வாங்குகிறார்கள்.

மேலும், கணவன், மனைவி இருவரும் அலுவலகம் மற்றும் குடும்ப மேம்பாடு களில் அதிகக் கவனம் செலுத்துவதால், கூடுதல் சுமை உருவாகி பல உடல் ரீதியான பிரச்னைகளையும் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இதுபோன்ற உடல்நலம் சம்பந்தப்பட்ட சிக்கல் களிலிருந்து பொருளாதார ரீதியாகப் பாதுகாத்துக்கொள்ள இன்ஷூரன்ஸ் பாலிசிகள் எப்படி உதவும் என்பதை மும்பையைச் சேர்ந்த செவன்லேடர் நிறுவனத்தின் இயக்குநர் சுரேஷ் சடகோபன் விளக்குகிறார்.

‘‘குடும்பத்தில் வருமானம்  ஈட்டுபவர் களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழும் போது குடும்பத்தின் சூழ்நிலையே தலைகீழாக மாறிவிடும். இருவரின் வருமானத்தையும் வைத்து குடும்பம் இயங்கும்போது, கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால், அந்தக் குடும்பத்தின் முக்கிய மற்றும் ஏற்கெனவே திட்டமிட்ட தேவைகளைக் குறைத்துக்கொள்ள முடியாது. தொடர்ந்து குடும்பத்தை நடத்த அதே  வருமானம் தொடர்ந்துவர வேண்டும்.

ஹோம் பட்ஜெட் - பெண்களுக்கும் தேவை டேர்ம் இன்ஷூரன்ஸ்

இன்றைய சூழ்நிலையில் திருமணமான உடனே கணவன், மனைவி இணைந்து வீட்டுக் கடன், கார் கடன் வாங்குகிறார்கள். அதேபோல ஓய்வுக்காலம், குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்காக குறிப்பிட்ட அளவு சேமிக்கவும் செய்கிறார்கள். கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் பெரும்பாலான வீடுகளில் ஒருவரின் சம்பளத்தைக் கடனை அடைக்க அல்லது சேமிப்புக்கு ஒதுக்கிவிடுகிறார் கள். எதிர்பாராதவிதமாக அசம்பாவிதம் நிகழ்ந்தால், சேமிப்பைக்கூட குறைத்துக் கொள்ள முடியும். ஆனால், கடனைக்  கட்டாயம் அடைத்தே தீரவேண்டும். வீட்டுக் கடனுக்கு வேண்டுமெனில், கடனுக்கு ஈடான இன்ஷூரன்ஸை தனியாக எடுத்துக் கொள்ளலாம். பிற கடன்களுக்கு இது முடியாது. எனவே, வருமானம் ஈட்டும் எல்லோரும் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்து வைப்பது மிக மிக அவசியம்.

வேலை பார்க்கும் பெண்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் கட்டாயம் தேவை. கணவருக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசி உள்ளது. அதனால் நமக்குத் தேவையில்லை என அலட்சியமாக இருக்கக் கூடாது. ஏனெனில் எப்போது என்ன நடக்கும் என்பது தெரியாது. அது வும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு உடல்ரீதியாக இயல்பாகச் சில பிரச்னைகள் ஏற்படும். இதனால் ஆண்களைவிட பெண்களுக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் அவசியம் தேவை.
 

ஹெல்த் இன்ஷூரன்ஸ் என்பது அனைத்து பெண்களுக்கும் கிடைக்கும். குறைந்தபட்சம் ரூ.5 லட்சத்துக்காவது ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி வைத்திருப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை பார்க்கும் நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தாலும் தனியாக அவரவர் தேவையின் அடிப்படையில் பாலிசி வைத்திருப்பது நல்லது. இதைக் குடும்பத்தில் உள்ள எல்லோருக்குமான ஃப்ளோட்டர் பாலிசியாக எடுத்தால் பிரீமியம் குறையும்.

ஹோம் பட்ஜெட் - பெண்களுக்கும் தேவை டேர்ம் இன்ஷூரன்ஸ்

அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண்கள் பெரும்பாலும் ஓய்வுபெறும் வயது வரை கட்டாயம் வேலைக்குப் போவார்கள். இதனால் 50 வயதுக்கு மேல் உருவாகும் தேவைகளை அப்போது வரும் சம்பாத்தியத்தில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என நினைக்கலாம். இந்த எண்ணம் முற்றிலும் தவறு.

உதாரணமாக, பிள்ளைகளைத் தரமான கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும், ஆடம்பரமாகத் திருமணம் செய்ய வேண்டும் என எல்லோரும் கனவு வைத்திருப்பார்கள். இந்தச் சூழ்நிலையில் 50 வயதில் ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் கனவு நிறைவேறுவதில் சிக்கல் வரும்.
டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்த வரை, மரணம் அடைந்தால்தான் க்ளைம் கிடைக்கும். எனவே, இந்த பாலிசி தேவையில்லை என பலர் நினைக்கிறார்கள். 30 வயதில் ஒருவர் ரூ. 30 லட்சத்துக்கு 20 வருட பாலிசி எடுக்கிறார். வருடத்துக்கு பிரீமியமாக சுமார் ரூ.8 ஆயிரம் செலுத்துகிறார் என வைத்துக் கொள்வோம்.

20 வருடத்துக்கு மொத்தமாக ரூ.1,60,000 பிரீமியம் செலுத்துவார். ஆனால், ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் கிடைப்பது ரூ.30 லட்சம். நீங்கள் செலவு செய்யும் தொகை அதிக பாதுகாப்பைப் பெற உதவும் என்பதை மறந்துவிடக் கூடாது. மேலும், வருமானம் ஈட்டுபவர் இல்லாவிட்டாலும், அவர் கண்ட கனவுபடி குறிக்கோள்களையும் நிறைவேற்றிக் கொள்ளலாம்.

ஹோம் பட்ஜெட் - பெண்களுக்கும் தேவை டேர்ம் இன்ஷூரன்ஸ்

டேர்ம் இன்ஷூரன்ஸ் என்பது வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். ஆண்டு வருமானத்தைப்போல, 10-12 மடங்கு தொகைக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் எடுத்துக்கொள்வது அவசியம். ஏனெனில், எதிர்பாராதவிதமாக அசம்பாவிதம் நிகழும்போது குடும்பத்தின் தேவைகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதற்காக இன்ஷூரன்ஸ் கட்டாயம் தேவை.

இன்றைய நடுத்தரக் குடும்பத்தினர் குழந்தைகளைப் பெரும்பாலும் தனியார் பள்ளிக்கூடங்களிலே படிக்க வைக்கிறார் கள். வருடத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் கல்விக் கட்டணம் இருக்கும். ஒருவரின் வருமானம் குறையும்போது குறைந்த வசதிகள் கொண்ட பள்ளிக்கு மாற்றும் போது குழந்தைகள் அந்தச் சூழ்நிலைக்கு மாறுவதற்கு அதிகச் சிரமப்படுவார்கள். எனவே கணவன், மனைவி இருவரும் தங்களின் சம்பளத்தைப்போல 10 மடங்குக்கு இன்ஷூரன்ஸ் எடுத்து வைப்பது நல்லது.

டேர்ம் இன்ஷூரன்ஸை பொறுத்த வரை, கணவன், மனைவி இருவருக்கும் சேர்த்து ஒரே பாலிசியாகக் கிடைப்பதில்லை. சில நிறுவனங்கள் இருவருக்கும் சேர்த்து வழங்குகிறது. ஆனால், அதில் இருவரும் தனித்தனியாகச் செலுத்தும் பிரீமியத்தைவிட ஒரு சில ஆயிரங்கள் தான் குறைவாக இருக்கும். ஆனால், கவரேஜ் தொகையும் குறைவாகவே இருக்கும்’’என்றார். இன்ஷூரன்ஸ் என்பது பாதுகாப்புக் கவசம் என்பதை உணர்ந்தால் குடும்பம் குதூகலமாக இருக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு