Published:Updated:

ஹோம் பட்ஜெட்!

மைக்ரோ ஃபைனான்ஸ்...சின்னக் கடன், பெரிய லாபம்! இரா.ரூபாவதி

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!


பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ராஜீ. பள்ளிக்கூடத்தில் படிக்கும் தனது இரண்டு குழந்தைகளையும் ஆட்டோவில் அனுப்ப மாதமொன்றுக்கு 1,200 ரூபாய் செலவு செய்ய வேண்டி யிருந்தது. சொந்தமாக ஒரு வண்டி யிருந்தால் அவரே குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துக்கொண்டுபோய் வந்துவிடுவார். இதனால் மாதம் 1,200 ரூபாய் மிச்சமாகுமே என்று நினைத்தார். ஆனால், வண்டி வாங்குகிற அளவுக்கு அவரிடம் பணமில்லை.

இந்த நேரத்தில்தான் அவருக்கு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் பற்றி தெரியவர, அதில் 50,000 ரூபாய் கடன் வாங்கி, வண்டி வாங்கினார். ஒவ்வொரு மாதமும் தவணை தவறாமல் பணம் கட்டி, இப்போது அந்த வண்டியையே சொந்தமாக்கிக் கொண்டுவிட்டார் ராஜீ.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஹோம் பட்ஜெட்!

ராஜீ மாதிரி மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் மூலம் பயனடைந்த பெண்கள் பலர் தமிழகம் முழுக்க இருந்தாலும், இன்னும் பல லட்சம் பேர் மைக்ரோ ஃபைனான்ஸினால் எந்தப் பயனும் அடையாமலே இருக்கின்றனர். இதுமாதிரியானவர்கள் தங்களின் பொருளாதாரத் தேவைகளை மைக்ரோ ஃபைனான்ஸ் மூலம் எப்படி நிறைவேற்றிக்கொள்வது என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்னார் மதுரை ‘தான் பவுண்டேஷன்’ அமைப்பு தலைவர் வாசிமலை.

ஹோம் பட்ஜெட்!

இவர் அஹமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மேன்ட்டில் படித்தவர். படித்து முடித்தபின் பெரிய நிறுவனங்களில் கிடைத்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு, கஷ்டப்படும் மக்கள் பொருளாதார ரீதியில் உயர தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்.

‘‘பெரிய அளவில் வளர்ச்சியடையாத கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் என அனைத்து இடத்திலும் மைக்ரோ ஃபைனான்ஸ் அமைப்புகள் செயல்படு கின்றன. இந்த அமைப்புகள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்து வதற்கு சின்னச் சின்னக் கடன் உதவிகளைச் செய்து வருகின்றன. அதாவது, குறைந்தபட்சம் 2 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை இந்த அமைப்பின் மூலமாகக் கடனுதவி பெற முடியும். ஒருமுறை வாங்கிய கடன் தொகை முழுவதையும் திரும்பச் செலுத்திவிட்டு, மீண்டும் புதிதாகக் கடன் வாங்கிக்கொள்ளலாம்.

கடன் வாங்குவதற்கான காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பிட்ட இந்தக் காரணத்துக்காக மட்டும்தான் என்று இல்லாமல், அதிக வட்டிக்கு வாங்கியக் கடனை அடைக்க,  குழந்தையைப் படிக்கவைக்க, சொத்து உருவாக்க, வியாபாரம் செய்வதற்கு, தொழில் துவங்குவதற்கு என பல்வேறு காரணங் களுக்காக கடன் வழங்கப்படுகிறது.

ஹோம் பட்ஜெட்!

மைக்ரோ ஃபைனான்ஸ் என்பது கடனுக்காக மட்டும் என்று இல்லாமல் சேமிப்பு, கடன், காப்பீடு என்பதன் அடிப்படையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அது முழுமை பெறும். ஏனெனில், கடன் வாங்குபவர் எவ்வளவு சேமிப்பு வைத்துள்ளார் என்பதைப் பார்த்து, மூன்று மடங்கு அதிகமாகக் கடன் வழங்கலாம். 

அடுத்து, கடன் வாங்குபவருக்குக் காப்பீடு என்பது அவசியம். கடனுக்கு மட்டும் இல்லாமல் பொருளாதார ரீதியாக அவரின் குடும்பத்தை உயர்த்திக்கொள்வதற்கு இந்தக் காப்பீடு உதவும்.

ஹோம் பட்ஜெட்!

வங்கிகள் நேரடியாக மைக்ரோ ஃபைனான்ஸை செயல்படுத்தாமல் இருப்பதற்கான காரணம் அதிகச் செலவாகும் என்பதால்தான். அதாவது, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட அளவு தொகையை கடனாக வழங்க வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது.
ஆனால், வங்கிகள் நேரடியாகப் பயனாளர்களைத் தேடி கடன் வழங்கும் போது, கடன் வழங்குவதற்கான செலவு அதிகமாகிறது. இதனால் வங்கிகள் தொண்டு நிறுவனங்களின் மூலம் மக்களை நாடிச் செல்கிறது. இதன் கீழ் இயங்கும் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் வழங்குகிறது.
இதனால் கடன் வாங்குபவரின் நம்பிக்கைதன்மை அதிகரித்து, அந்தப் பணம் சரியாக திரும்ப வருமா என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.

ஹோம் பட்ஜெட்!

அடமானம்!

மைக்ரோ ஃபைனான்ஸ் அமைப்பின் கீழ் கடன் வாங்குவதற்கு எந்தவிதமான அடமானமும் தரத்  தேவையில்லை. அதிகபட்சம் 50 ஆயிரம் ரூபாய்தான் ஒருவர் இந்த அமைப்பில் கடன் வாங்க முடியும். அரசு விதிகளின்படி, கடன் தொகைக்கு ஈடாக அடமானம் கேட்கக் கூடாது. விதிகளை மீறி அடமானம் கேட்டால் அவர்கள் மீது வழக்குத் தொடுக்க முடியும்.

ஹோம் பட்ஜெட்!

வட்டி விகிதம்!

மைக்ரோ ஃபைனான்ஸ் என்பது வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் நலன்களுக்காகத்தான். எனவே, இதில் வட்டி விகிதம் என்பது அதிகபட்சம் 24 சதவிகிதத்துக்குமேல் இருக்கக்கூடாது. ஏனெனில், எந்த ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனமும் தங்களின் சொந்த பணத்தை மட்டும் கடனாகத் தருவதில்லை. வங்கி மற்றும் டிரஸ்ட்கள் மூலம் மொத்தமாகக் கடன் வாங்கி, அதை 1 அல்லது
2 சதவிகிதம் கூடுதலாக வட்டி வைத்து என்ஜிஓகளுக்குத் தரும்.  அதற்குமேல் கூடுதலாக ஓரிரு சதவிகிதம் வட்டி வைத்து பெண்களுக்கு கடன் தரப்படும்.

பணம் கேட்டு மிரட்டுதல்!

இப்படி பெறப்படும் கடன் சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், சில நிறுவனங்கள் அந்த நபர் மீது சட்டத்தை மீறி மிரட்டுகிறது. இது முற்றிலும் தவறு. இப்படி செய்பவர்களின் மீது சட்டப்படி  வழக்குப் பதிவு செய்ய முடியும்.

ஹோம் பட்ஜெட்!

ஒருவர் வாங்கிய கடனை சரியாகத் திரும்பச் செலுத்தவில்லை எனில், கடன் வாங்கியவரின் தற்போதைய நிலையை அடிப்படையாக வைத்து,  தவணைமுறைகளில் மாற்றம் செய்வதுதான் ஒரே வழி. மேலும், கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் தொகைக்கு ஈடான இன்ஷூரன்ஸ் எடுத்துவைப்பது அந்த நிறுவனத்தின் கடமை” என்றார்.

சிறிய அளவில் கடன் வாங்கி, அதன்மூலம் தங்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்த மைக்ரோ ஃபைனான்ஸ் அமைப்புகள் செய்யும் உதவியை பெண்கள் அவசியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.