‘‘நிறைய செய்திகளுடன் வந்திருக் கிறேன். எனக்கு ஒரு பக்கம் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்குமா?’’ என்று கோரிக்கை வைத்தபடி நம் எதிரில் உட்கார்ந்தார் ஷேர்லக். ‘‘உங்களுக்கு இல்லாததா, சொல்லுங்கள்?’’ என்று கேட்க ஆரம்பித்தோம்.

‘‘முடிந்த வாரத்தில் சந்தை ஏற்ற, இறக்கத்துடனே இருந்தது. 214 நிலக்கரி சுரங்கங்களுக்கு தரப்பட்ட அனுமதி ரத்து, எஃப் அண்ட் ஓ எக்ஸ்பைரி போன்றவற்றினால் சந்தை கணிசமாக இறங்கியது. என்றாலும், எஸ் அண்ட் பி நிறுவனம், இந்தியாவின் பொருளாதாரம் சீராக உள்ளது என்று சொன்னதால், சந்தை மீண்டும் உயர்ந்தது.

7940 என்பது நிஃப்டியின் முக்கியமான சப்போர்ட் லெவல். இதனை உடைத்தால் சந்தை பெரிதாக இறங்கும் என என் டெக்னிக்கல் நண்பர்கள் சொன்னார்கள். நல்லவேளையாக, 7968-க்கு சந்தை வந்துவிட்டது. புதன், வியாழனன்று வெளியேறிய அந்நிய முதலீட்டாளர்கள் இன்று மீண்டும் முதலீடு செய்திருக்கலாம். நம் ஃபண்ட் நிறுவனங்களின் முதலீடு தொடர்ச்சியாக இருக்கிறது. எனவே, பெரிய அளவில் நெகட்டிவ் செய்தி ஏதும் இல்லாவிட் டால், சந்தை உயரவே வாய்ப்பு அதிகம்’’ என்றவரிடம், கவர் ஸ்டோரியைக் காட்டினோம்.

‘‘பிரமாதம், நீங்கள் கவர் ஸ்டோரியில் சொல்லியிருக்கிறபடி நம் வாசகர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நிச்சயம் கோடீஸ்வரர் களாக இருப்பார்கள்’’ என்றார்.

‘‘சிட்டி யூனியன் பங்கின் விலை வேகமாக ஏற ஆரம்பித்திருக்கிறதே?’’ என்று கேட்டோம்.

‘‘வெள்ளிக்கிழமை மட்டுமே 6 சத விகிதம் ஏறி இருக்கிறது. அந்த வங்கியில் எஃப்ஐஐ முதலீட்டை 40 சதவிகிதமாக அதிகரித்துக்கொள்ள ஆர்பிஐ அனுமதித்ததே இதற்கு காரணம். தற்போது இந்த வங்கியில் எஃப்ஐஐ முதலீடு 33.43 சதவிகிதமாக உள்ளது. அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாத சிறு முதலீட்டாளர்கள், இந்த வங்கிப் பங்கின் மீது ஒரு கண் வைக்கலாம்’’ என்றார்.

‘‘இது பங்குப் பிரிப்பு காலம் போலிருக் கிறதே?’’ என்று ஆச்சர்யம் காட்டினோம்.

‘‘பங்குச் சந்தையின் ஏற்றத்தால் பல நிறுவனப் பங்குகளின் விலை 1,000 ரூபாயைத் தாண்டி இருக்கிறது. இதனால் பங்குகள் மீதான வர்த்தகம் குறையும் நிலை காணப்படுகிறது. இதை சரிக்கட்ட பல நிறுவனங்கள் அவற்றின் பங்கின் முக மதிப்பை குறைக்க ஆரம்பித்திருக் கின்றன. குறிப்பாக, வங்கிகள் அதிக எண்ணிக்கையில் பங்குப் பிரிப்பில் இறங்கி இருக்கின்றன.

ஜம்மு அண்ட் காஷ்மீர், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க் போன்றவை கடந்த சில வாரங்களில் பங்குப் பிரிப்பை அறிவித்தன. இப்போது, எஸ்பிஐ வங்கி, அதன் 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட பங்குகளை 1 ரூபாய் முக மதிப்பு கொண்ட பங்குகளாக பிரிக்க இருக்கிறது. இதன் மூலம் பங்கின் விலை ஏறக்குறைய பத்தில் ஒரு பகுதியாக குறையும். இதன் மூலம் பங்கு மீதான வர்த்தகம் அதிகரிக்கும் என எஸ்பிஐ எதிர்பார்க் கிறது’’ என்று சொன்னவருக்கு, சுடச்சுட டீ தந்தோம். அதைக் குடித்தவர் அடுத்து ஒரு சூடான, எச்சரிக்கைச் செய்தியைச் சொன்னார்.

‘‘மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் விலையேற்றக் குமிழ் எந்த நேரத்திலும் உடையலாம். அந்தப் பங்கு களின் விலை கணிசமாக குறையலாம் என்று எச்சரிக்கிறார் முக்கிய அனலிஸ்ட் ஒருவர்.

மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் நான்கு ஆண்டுகளில் இல்லாத உச்ச விலையை அடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் தொடங்கி சென்செக்ஸே 47 சதவிகிதம் வளர்ந் திருக்க, பிஎஸ்இ-100 பங்குகள் மட்டும் 51 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

இந்த அதிவேக வளர்ச்சி நல்லதல்ல. எனவே, எந்த நேரத்திலும் மிட் மற்றும் ஸ்மால் கேப் பங்குகளின் விலை குறையலாம். முதலீட்டாளர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது’’ என்று எச்சரித்தார்.

‘‘நிலக்கரி சுரங்கங்களுக்கான அனுமதியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருப்பதால் என்னென்ன விளைவு கள் ஏற்படும்?’’ என கவலையோடு கேட்டோம்.

‘‘கடந்த 1993 முதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட 218 நிலக்கரி சுரங்கங் களுக்கான உரிமத்தில் 214-ஐ தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால் உரிமம் ரத்தான நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கு கடன் கொடுத்த வங்கிகளின் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கின்றன. அவற்றின் பங்குகளின் விலை கணிசமாக இறங்க ஆரம்பித்திருக்கிறது.

உரிமம் ரத்தான நிலக்கரி நிறுவனங் களுக்கு எஸ்பிஐ ரூ.4,134 கோடியும், ஆந்திரா வங்கி ரூ.4,346 கோடியும் கடன் வழங்கி உள்ளன. இதனால் இந்த பங்குகளின் விலை இறங்கியது.

கூடவே, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பிஹெச்இஎல், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, ஜெஎஸ்பிஎல், ஆர்ஐஎல் போன்ற பங்குகளின் விலையும் இறக்கம் கண்டது.

ரத்து செய்யப்பட்ட சுரங்கங்களில் சுமார் 40 சுரங்கங்களை, கோல் இந்தியா எடுத்து நடத்த மத்திய அரசு வற்புறுத்து கிறது. அந்தவகையில் அதன் விலை ஏற்றம் கண்டு வருகிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, நிலக்கரி சுரங்கங்கள் 2015 மார்சுக்குப்பின் நிலக்கரியைத் தோண்டி எடுக்க முடியாது என்பதால், நாட்டில் மின்சார உற்பத்தி வெகுவாகப் பாதிப்படையும். மேலும், ஸ்டீல் பொருள்கள், சிமென்ட் உற்பத்தியும் பாதிக்கும். இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் (ஜிடிபி) குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது. ‘மேக் இன் இந்தியா’ என்று சொல்ல ஆரம்பித்திருக்கும் மோடி, இந்தப் பிரச்னையை எப்படி சமாளிக்கப் போகிறாரோ?’’ என்றார், அவரும் கொஞ்சம் கவலையோடு.

‘‘ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறதே?’’ என்றோம்.

‘‘டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடந்த ஏழு வாரத்தில் இல்லாத அளவுக்கு வியாழக்கிழமை 61.35-க்கு இறங்கியது. எஃப்ஐஐக்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் அதிக அளவில் டாலர் வாங்கியது முக்கிய காரணம். கூடவே கடந்த வாரத்தில், முந்தைய வாரத்தோடு ஒப்பிடும்போது எஃப்ஐஐ களின் முதலீடு குறைந்துள்ளதும் இன்னொரு காரணம்.

அதேநேரத்தில், வெள்ளியன்று ரூபாய் மதிப்பு 61.14-க்கு உயர்ந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு இன்னும் குறையாமல் இருக்க ஆர்பிஐ, பொதுத்துறை வங்கிகள் மூலம் டாலரை விற்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. அப்போது டாலர் தாராளமாக கிடைப்பதால், ரூபாய் மதிப்பு குறைவு தடுக்கப்படும் என்கிறார்கள் அனலிஸ்ட் கள்’’ என்றார்.

‘‘பிஎஸ்இ குரூப் ஏ பங்குகளை மாற்றி அமைத்திருக்கிறது போலிருக்கிறதே?’’ என்றோம்.

‘‘பிஎஸ்இ அதன் குரூப் ஏ பங்குகளை மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் அடிப்படையில் மாற்றி அமைக்கிறது. யுனைடெட் ஸ்பிரிட்ஸ், ஃபைனான்ஷியல் டெக்னாலஜீஸ், எம்சிஎக்ஸ் இந்தியா போன்ற நிறுவனங் களின் பங்குகள் அக்டோபர் 7-ம் தேதி முதல் குரூப் ஏ-விலிருந்து வெளியேறு கிறது.

அதேநேரத்தில், இந்தியா புல்ஸ் ஹவுஸிங், வோல்டாஸ், ஜஸ்ட் டயல், பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், மைண்ட் ட்ரீ உள்ளிட்ட சுமார் 90 நிறுவனப் பங்குகளை பி குரூப்-லிருந்து ஏ குரூப்-க்கு தரம் உயர்த்தி இருக்கிறது’’ என்றார்.

‘‘பிஎஃப் முதலீடு பங்குச் சந்தைக்கு வராதது குறித்து செபி தலைவர் வருத்தப் பட்டிருக்கிறாரே?’’ என்று கேட்டோம்.

‘‘இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்து வெளிநாட்டு முதலீட்டாளர்களும், வெளிநாட்டு பென்ஷன் ஃபண்ட் நிறுவனங் களும் நல்ல லாபம் சம்பாதித்து செல்கின்றன. நடப்பு ஆண்டில் செப்டம்பர் 15 வரைக்கும் 3,400 கோடி டாலர் (சுமார் ரூ.2,04,000 கோடி) தொகையை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக் கிறார்கள்.

ஆனால், இந்திய பிஎஃப் அமைப்பு வசம் ரூ.7 லட்சம் கோடிக்கு மேலான தொகை இருந்தும் அது பங்குச் சந்தையில் கொஞ்சம் கூட முதலீடு செய்யப்படாமல் இருக்கிறதே என செபி அமைப்பின் தலைவர் யூ.கே. சின்ஹா வருத்தப்பட்டிருக்கிறார். அண்மை யில், பிஎஃப் தொகையில் 5 சதவிகிதத்தை பங்குச் சந்தையில் நேரடியாகவும், 10 சத விகிதத்தை ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் மூலமும் முதலீடு செய்ய மத்திய அரசும் சொல்லி இருந்தது.

எனினும், இதற்கு செவி சாய்க்க பிஎஃப் அமைப்பு மறுத்துவிட்டது. எதிர் காலத்தி லாவது மாற்றம் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்போம்’’ என்றவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, ‘‘ஷேர்டிப்ஸ் எதுவும் இந்த வாரம் வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டார்.