ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ வங்கியின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில், மியூச்சுவல் ஃபண்ட் சொத்துக்களை நிர்வகிப்பதில், இரண்டாவது பெரிய நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. 1,18,000 கோடி ரூபாய்க்கும் மேலான சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. முதல் இடத்தில் ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் உள்ளது.

இந்த நிறுவனம் நிர்வகிக்கும் அதிகச் சொத்துடைய திட்டங்களில் இதுவும் ஒன்று. இந்தத் திட்டம் நிர்வகிக்கும் சொத்தின் மதிப்பு ரூ.4,254 கோடியாகும். இந்த நிறுவனத்தின் முதன்மை முதலீட்டு அலுவலர் (Chief Investment Officer) சங்கரன் நரேன் ஆவார். அவரே ஃபண்டின் மேனேஜரும் ஆவார்.

அவருடன் மித்துல் காலவாடியாவும் இணைந்து இந்த ஃபண்டினை நிர்வகித்து வருகிறார்.

இந்த ஃபண்ட் ஆரம்பித்தபோது (அக்டோபர் 31, 2002) ஒருவர் செய்த முதலீடான ரூ.1 லட்சம் இன்றைய தினத்தில் (செப்டம்பர் 19, 2014) ரூ.18,05,600-ஆக உள்ளது. இது கூட்டு வட்டி அடிப்படையில் ஆண்டுக்கு 27.54 சதவிகிதத்துக்குச் சமம்.

இந்த ஃபண்டானது பேலன்ஸ்டு ஃபண்ட் போன்ற சாயலில் செயல் படும். அதாவது, இந்த ஃபண்டில் பங்குகளுக்கும் கடன் உபகரணங் களுக்குமான அலோகேஷன் டைனமிக்காக இருக்கும். பொதுவாக, சந்தை ஏறிக் கொண்டிருக் கும்போது, போர்ட்ஃபோலியோவில் பங்குகளின் சதவிகிதம் குறைந்து, கடன் உபகரணங்களின் சதவிகிதம் ஏறும். அதுவே, சந்தை இறங்கும்போது உல்ட்டாவாக மாறும்.

தற்போது இதன் போர்ட்ஃபோலியோவில் ஏறக்குறைய 80 சதவிகிதம் பங்கு சார்ந்த முதலீட்டிலும், எஞ்சியது கடன் சார்ந்த முதலீட்டிலும் உள்ளது. அதிகபட்சமாக 35% வரை கடன் சார்ந்த உபகரணங்களிலும், 100% வரை பங்கு சார்ந்த முதலீட்டிலும் இந்தத் திட்டத்தினால் செல்ல முடியும். பங்குகளுக்கும் கடன் உபகரணங் களுக்குமான சதவிகிதத்தை சந்தை விலைக்கும் புத்தக மதிப்புக்கும் உள்ள விகிதாசாரத்தை வைத்து பிரதானமாக இந்த ஃபண்ட் முடிவு செய்கிறது. இது தவிர, வட்டி விகிதம், அரசாங்க வரவு-செலவுகள் போன்ற மேக்ரோ குறியீடு களையும் வைத்து முடிவு செய்கிறது.

தற்போது பங்கு சார்ந்த முதலீட்டில் ஏறக்குறைய 74% லார்ஜ் கேப் பங்கு களிலும், மீதமுள்ளவை மிட் அண்ட் ஸ்மால் கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஃபைனான்ஸ், எனர்ஜி மற்றும் டெக்னாலஜி இதன் டாப் துறைகளாக உள்ளன. பங்குகளில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் 9.36 சதவிகிதமும், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ பேங்க் முறையே 8.28%, 7.02 சதவிகிதமாகவும் உள்ளன. பிற பங்குகள் எல்லாம் போர்ட்ஃபோலியோவில் 5 சத விகிதத்துக்கும் குறைவாகவே உள்ளன. இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோ டேர்னோவர் 100 சதவிகிதத்துக்கும் மேல். இதன் முக்கிய காரணம், ஃபண்ட் மேனேஜர் பங்குகளைச் சற்று அதிகமாக வாங்கி விற்பதுதான்.

அதாவது, இந்த ஃபண்ட் கடைப்பிடிக்கும் டிஃபென்ஸிவ் யுக்திதான். அதாவது, சொத்தை, சந்தை நிலவரங்களைப் பொறுத்து, பங்கு களிலிருந்து கடன் சார்ந்த முதலீட்டுக்கும் அல்லது உல்ட்டாவாகவும் மாற்றுவது தான்.

இந்த ஃபண்டின் பீட்டா 0.85 என்பது சந்தையுடன் ஒப்பிடும்போது சற்று குறைவான ரிஸ்க்கை காண்பிக்கிறது. அதேசமயத்தில், இதன் ஆல்ஃபா 5.38 ஆகும். குறைந்த ரிஸ்க்கில் நல்ல வருமானத்தை ஈட்டித் தருவதை இந்த இரண்டு அளவுகோல்களும் காண்பிக் கின்றன.

சந்தை நன்றாக இருக்கிறது; ஆனால் தான் செய்த முதலீட்டின் வருமானம் அவ்வளவு சரியாக இல்லை என்று எண்ணுபவர்களுக்கு, இந்த ஃபண்ட் பிரச்னையைத் தீர்த்துவைக்கும். மேலும், மொத்தமாக முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு, 100% ஈக்விட்டி திட்டங்களைவிட இந்த ஃபண்ட் நன்றாகப் பொருந்தும். ஏனென்றால், இதனுள் இருக்கும் டைனமிக் அசெட் அலோகேஷன் மாடல் ஏற்ற இறக்கத்தைக் குறைக்கிறது. இந்த ஃபண்ட் பிர்லா சன் லைஃப் ஃபிரன்ட் லைன் ஈக்விட்டி, ஃப்ராங்க்ளின் இந்தியா பிரைமா பிளஸ் போன்ற திட்டங்களுக்கு ஈடாக கடந்த 11 வருடத்தில் வருமானத்தைக் கொடுத்துள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு ஆண்டைத் (2007) தவிர, மீதமுள்ள ஒன்பது ஆண்டுகளிலும் நிஃப்டி குறியீட்டைவிட அதிக வருமானம் தந்துள்ளது. காளைச் சந்தையைவிட கரடிச் சந்தையில் இந்தத் திட்டம் நன்றாகச் செயல்படும்.

இந்த ஃபண்டின் டிவிடெண்ட் ஆப்ஷனின் என்ஏவி ரூ.24.17 ஆகும். 2005-லிருந்து தொடர்ச்சியாக இந்தத் திட்டம் டிவிடெண்ட் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டிலிருந்து தீபாவளிக்கு சற்று முன்பாக டிவிடெண்ட் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்தப் பழக்கம் இனிவரும் ஆண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட கால முதலீட்டை நாடுபவர்கள், சற்று குறைவான ரிஸ்க்குள்ள ஈக்விட்டி ஃபண்டை நாடுபவர்கள், நல்ல தரமான ஃபண்ட் மேனேஜேரை தேடுபவர்கள் என அனைவரும் இந்தத் திட்டத்தில் எஸ்ஐபி மூலமாகவும், சந்தை சரிவுகளைப் பயன்படுத்தி மொத்தமாகவும் முதலீடு செய்யலாம்.

யாருக்கு உகந்தது:

அனைத்து வயதினர், பணம் அதிகம் உள்ளவர்கள், செல்வத்தைப் பெருக்க நினைப்பவர்கள், ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள், பணம் உடனடியாக தேவை இல்லாதவர்கள், நீண்ட காலத்தில் குறைந்த ஏற்ற இறக்கத்துடன் நல்ல வருவாயை ஈட்ட நினைப்பவர்கள்.

யாருக்கு உகந்ததல்ல:

குறுகிய காலத்தில் பணம் தேவைப்படுபவர்கள், உத்தரவாதமான வருமானத்தை விரும்புபவர்கள், அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்குபவர்கள், குறுகிய காலத்தில் ஏற்படும் மதிப்பு இழப்பை ஜீரணிக்க முடியாதவர்கள்.