Published:Updated:

ஹோம் பட்ஜெட் : பெண் தொழில்முனைவோர்கள்...சந்திக்கும் சவால்கள்... சமாளிக்கும் வழிகள்!

இரா.ரூபாவதி

பெண்களுக்கான நிதி நிர்வாக வழிகாட்டி!

பிசினஸ் என்பது ஆண்களின் உலகம் என்பதை மாற்றி, நாங்களும் பிசினஸில் கில்லாடிகள் என்று நிரூபித்து வருகிறார்கள் இன்றைய இளம்தலைமுறைப் பெண்கள்.  என்றாலும், தொழில் தொடங்கும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன, இந்தப் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என கிண்டியில் உள்ள எம்எஸ்எம்இயின் உதவி இயக்குநர் புனிதவதியிடம் கேட்டோம். விரிவாக எடுத்துச் சொன்னார் அவர்.

‘‘சொந்தமாகத் தொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு முதலில் குடும்பத்தில் முழு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். சில பெண்களுக்கு குடும்பத்தின் ஆதரவு தானாகவே கிடைத்துவிடும். சிலர் போராடிதான் பெற வேண்டியிருக்கும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இவர்கள் முதலில் குடும்பத்தில் நம்பிக்கையை  உருவாக்க வேண்டும். இதற்கு குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் செய்யும் தொழில், அதன் தற்போதைய நிலை, எதிர்காலத்தில் நீங்கள் அடையப் போகும் இலக்கு பற்றி விளக்கமாக எடுத்துக் கூற வேண்டும். குடும்பத்துக்கு அடுத்தபடியாக, சமூகத்தின் மூலமாக நிறையப் பிரச்னை களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதாவது, வங்கியில் கடன் கேட்பதில் சில சிக்கல்கள் வரலாம்.

வங்கிகளில் கடன் கேட்டுச் செல்வதற்குமுன் அங்கு என்னென்ன ஆவணங்கள் கேட்பார்கள் என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், வங்கி அதிகாரிக்கு உங்கள் மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும்.  இதற்கு உங்களிடம் துணிச்சலான பேச்சும், தைரியமான அணுகுமுறையும் இருக்க வேண்டும். அதாவது, இவர் கடனை சரியாகத் திரும்பச் செலுத்துவார்; தொழிலை நல்லபடியாக நடத்துவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் உங்களின் திட்ட அறிக்கையும், அணுகுமுறையும் இருக்க வேண்டும்.

ஹோம் பட்ஜெட் : பெண் தொழில்முனைவோர்கள்...சந்திக்கும் சவால்கள்... சமாளிக்கும் வழிகள்!

தொழில் சார்ந்த முடிவுகளை நீங்களே நன்கு ஆராய்ந்து எடுக்கக்கூடிய வராக இருக்க வேண்டும். அனைத்துக்கும் கணவரை சார்ந்து இருக்கக்கூடாது. அதற்காக கணவரிடம் எந்தவிதமான தகவலும் சொல்லக்கூடாது என்றில்லை. தொழில் சம்பந்தமான முக்கிய தகவல்களை கணவரிடமோ அல்லது குடும்ப உறவுகளிடமோ பகிர்ந்து கொள்வது தொழில் ரீதியான சில முடிவுகள் எடுக்க உங்களுக்கு உதவியாக இருக்கும்.  

சில விஷயங்களை மற்றவர்களுடன்  பகிர்ந்துகொண்டாலும், முடிவு உங்களுடையதாகவே இருக்க வேண்டும். ஏனெனில், உங்களின் தொழிலுக்கு எந்த முடிவு சரியாக இருக்கும் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும். இந்த விஷயத்தில் உங்கள் தொழில் நிபுணத்துவம்தான் உங்களைக் காக்கும்.

குடும்பத்தில் உள்ள பிரச்னையையும், தொழிலில் உள்ள பிரச்னையையும் எப்போதும் ஒப்பீட்டுப் பார்க்கக் கூடாது. மேலும், பிரச்னை வந்ததும் அதைக் கண்டு பயப்படாமல், அவற்றைச் சமாளிக்கும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.  தொழில் ஆரம்பித்தவுடனே லாபம் கிடைத்துவிடும் என்று  நினைக்கக் கூடாது. அதேபோல, லாபம் கிடைத்த வுடன் மகிழ்ச்சியும், நஷ்டம் வரும்போது விரக்தியும் அடையாமல் இரண்டையும் ஒரேமாதிரி பார்க்க வேண்டும்.

ஹோம் பட்ஜெட் : பெண் தொழில்முனைவோர்கள்...சந்திக்கும் சவால்கள்... சமாளிக்கும் வழிகள்!

இனி குறிப்பாக, பிசினஸில் சந்திக்க வேண்டிய பிரச்னைகள் பற்றிச் சொல்கிறேன்.

 ஆர்டர்!

நிறுவனத்துக்கு வேண்டிய ஆர்டர் களை நேரடியாக நீங்கள் எடுப்பது புத்திசாலித்தனமாக இருக்கும். ஏனெனில், இடைத்தரகர்கள் மூலமாக ஆர்டர் எடுக்கும்போது லாபம் குறைய வாய்ப்புள்ளது.

 முதலீடு!

ஹோம் பட்ஜெட் : பெண் தொழில்முனைவோர்கள்...சந்திக்கும் சவால்கள்... சமாளிக்கும் வழிகள்!

தொழிலில் கிடைக்கும் லாபம் முழுவதையும் தொழிலிலேயே முதலீடு செய்யாமல், குறிப்பிட்ட அளவு தொகையைத் தனியாக சேமித்து வைக்க வேண்டும். அப்போதுதான் நஷ்டம் ஏற்படும்போது சமாளிக்க முடியும்.

 இன்ஷூரன்ஸ்!

நிறுவனத்தின் பெயரிலும் உங்கள் பெயரிலும் இன்ஷூரன்ஸ் எடுப்பது அவசியம். ஏனெனில், நிறுவனத்துக்கும் உங்களுக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படும் சமயங்களில் இன்ஷூரன்ஸ் மூலம் பாதுகாப்பு கிடைக்கும்.

 தொழில்நுட்பங்கள்!

ஒரு தொழில்முனைவோராக வெற்றி பெற வேண்டும் எனில், நீங்கள் செய்யும் தொழில் குறித்த தொழில்நுட்பங்களை அப்டேட் செய்வது அவசியம். அப்படிச் செய்தால்தான், தொழிலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.  அதேபோல, தொழில் சார்ந்த கருத்தரங்கம், கண்காட்சி போன்றவற்றில் கலந்துகொள்வது நல்லது.

ஹோம் பட்ஜெட் : பெண் தொழில்முனைவோர்கள்...சந்திக்கும் சவால்கள்... சமாளிக்கும் வழிகள்!

 இதன்மூலம் போட்டியாளர்கள் யார், அவர்கள் தொழிலை எப்படி செய்கிறார்கள், உற்பத்தி செய்யும் பொருட்களை எப்படி மார்க்கெட்டிங் செய்கிறார்கள் என்பதையெல்லாம் இன்னும் நன்றாகக் கற்றுக்கொள்ள முடியும்.

போட்டியாளர்களுடன் சகஜமாகப் பழகும் மனநிலையை உருவாக்கி கொள்வது நல்லது. அப்போதுதான் தொழில் சார்ந்த பிரச்னைகள் வரும் போது, அவர்களும் உதவியாக இருப்பார் கள்’’ என்று முடித்தார் எம்எஸ்எம்இயின் உதவி இயக்குநர் புனிதவதி.

பிரச்னைகளைச் சந்திக்காமல் பிசினஸ் செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொண்டாலே போதும், பெண்கள் துணிச்சலாக அதில் இறங்கி, ஜெயிக்கலாம்!