தொழில் முனைவோர்களின் வெற்றிக்கு...

சென்ற வாரம் மாநில அரசு அளிக்கும் மானியங்கள் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் மத்திய அரசு அளிக்கும் மானியங்கள் குறித்து பார்ப்போம். மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் மற்ற மானியங்கள் குறித்த தகவல்களை தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கத்தின் தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் சொல்வதைக் கேட்போம்.

‘‘மாநில அரசு முக்கியமாக மூலதனம், வட்டி மற்றும் தொழில் மேம்பாட்டுக்கு அதிக அளவில் மானியங்களை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, மாநில அரசுடன், மத்திய அரசு இணைந்து தொழிலின் செயல்பாடுகளுக்கு மானியத்தை வழங்குகிறது.

கடன் சார்ந்த மூலதன மானியம் (Credit Linked Capital Subsidy)

தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக ஒரு நிறுவனத்துக்குத் தேவையான இயந்திரங்கள் வாங்குவதற்கு அதற்கான மதிப்பீட்டில் 15% மானியமாக வழங்கப்படும். அதாவது, அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை இந்த மானியம் வழங்கப்படும்.

ஜவுளி மேம்பாட்டு நிதி மானியம் (Textile Upgradation Fund Subsidy)

1. வட்டி மானியம் (Interest Subsidy)

நூற்பாலைகளுக்கு 20% மானியம், டெக்ஸ்டைல் பிராசஸிங் உள்ளிட்ட பிற நெசவுப் பிரிவுகளுக்கு 5% வட்டி மானியம், 10% மூலதன மானியம் புதிய நாடா இல்லாத நெசவு (New shuttle less loom weaving units) பிரிவுகளுக்கு 6% வட்டி மானியம் மற்றும் 10% மூலதன மானியம் அளிக்கப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் இவை அல்லாத நிறுவனங்களுக்கும் இந்த மானியம் வழங்கப்படுகிறது.

2. மூலதன மானியம் (Capital Subsidy)

ரூ.5 கோடிக்குள் முதலீடு செய்யப்படும் குறு மற்றும் சிறு தயாரிப்பு நிறுவனங் களிடம் இருக்கும் இயந்திரங்களின் அடிப்படையில் 15% - 30% வரை மானியம் வழங்கப்படும். அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை மானியம் பெறலாம்.

உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான மானியம் (Food processing Subsidy)

தகுதியுடைய முதலீட்டுக்கு அனைத்து ஆவணங்களும் திட்டமும் சரியாக இருக்கும்போது அந்த நிறுவனத்துக்கு ரூ.50 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.

வெளிநாட்டிலிருந்து முதல்முறையாக இறக்குமதி செய்யப்பட்டுக் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இயங்கும் நிலை யிலுள்ள இயந்திரங்களை நிறுவி உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். மூலதன மானியம் வழங்கும்போது நிலம் மற்றும் கட்டடம் ஆகியவற்றின் மதிப்பு சேர்க்கப்பட மாட்டாது. இயந்திரங்களின் மதிப்பை மட்டுமே கணக்கிட்டு மானியம் வழங்கப்படும்.
இனி, மத்திய - மாநில அரசுகள் அளிக்கும் வேறு சில மானியங்கள் குறித்த தகவல்களைப் பார்ப்போம்.

குழும திட்ட (Cluster) மேம்பாட்டுக்கான திட்ட மதிப்பீட்டில் 25 சதவிகிதம், அதிகபட்சமாக ரூ.1 கோடி வரை தமிழக அரசு மானியம் வழங்கப்படும்.

ஏற்கெனவே இயங்கிவரும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிலகத்தின் தொழில் நுட்பத்தை மேம்பாடு செய்துகொள்ளப் பெறும் ரூ.1 கோடி வரையிலான கடன் களுக்கு 3 சதவிகிதம் வட்டி மானியம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும்.
தொழில்நுட்ப வணிகச் சேவை அமைக்க மையம் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.50 லட்சம் அரசு மானியமாக அளிக்கப்படும்.

இதர மாநிலங்கள் மற்றும் சென்னை யில் நடத்தப்படும் கண்காட்சிகளுக்கு ஆகும் செலவில் 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரையிலும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நடத்தப்படும் கண்காட்சிகளுக்கு ஆகும் செலவில் 50 சதவிகிதம் அல்லது அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரையிலும் மானியமாக வழங்கப்படும்.

சிறுதொழில் சங்கத்தினர் செயல்திறன் மேம்பாட்டுக்காக நடத்தும் பயிற்சிக் கட்டணத்தில் 50 விழுக்காடு மானியமாக வழங்கப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களைப் புனரமைக்க நலிவுற்ற நிறுவனத்தின் நிலுவை விற்பனை வரி / மதிப்புக் கூட்டு வரி அவற்றின் மீதான வட்டி ஆகியவற்றை மென் கடனாக மாற்றவும், அந்தக் கடனை 9 விழுக்காடு வட்டியுடன் நான்காண்டுகள் கழித்துத் திருப்பிச் செலுத்தவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

நலிவுற்ற நிறுவனங்களுக்குச் சீரமைப்பு மற்றும் இணைப்புக் கடன் ரூ.15 லட்சம் வரை வழங்கவும், கடன் தொகையில் 4% வட்டி மானியம் 2 ஆண்டுகளுக்கு வழங்கவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. சீரமைக்கப்படும் நிறுவனங்களின் வணிக வரிபாக்கி போன்றவற்றை ஆறு மாதம் தள்ளிவைக்க நடவடிக்கை எடுக்க வழிவகைச் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் அளிக்கும் இதுபோன்ற மானியங்களை சரியாகப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் எஸ்எம்இகள் தங்கள் தொழிலை மேம்படுத்திக் கொள்ளலாமே!

டை அறிவித்த பில்லியன் டாலர் நிறுவனங்கள்!

டை (T ie) என்பது எஸ்எம்இகளுக்கு உதவி செய்யும் ஒரு அமைப்பாகும். இந்த அமைப்பு தமிழ்நாட்டில் உள்ள சிறந்த எஸ்எம்இ நிறுவனங்களை அடையாளம் கண்டு, அதில் சில நிறுவனங்கள் வருங்காலத்தில் ஒரு பில்லியன் (6,000 கோடி ரூபாய்) மதிப்பு நிறுவனங்களாக வளரும் என்று அறிவித்துள்ளது.

பலகட்ட தேர்வுகளுக்குப் பிறகு இந்த நான்கு நிறுவனங்களை அறிவித்துள்ளது. இதில் மேக்ஸ்டர், எஃப்எஸ்எஸ், விஏ டெக் வபாக் மற்றும் கான்குரெண்ட் ஆகிய நிறுவனங்கள் அவை. நவம்பரில் சென்னையில் நடைபெறும் டைகான் கருத்தரங்கில் இந்த நிறுவனங்கள் அறிமுகம் செய்யப்படும்.

‘இந்த நிறுவனங்கள் தற்போது நல்ல நிலையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் நிச்சயம் ஒரு பில்லியன் இலக்கை எட்டும் என்று நடுவர்கள் குழுவைக் கொண்டு கணித்துள்ளோம். அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் கருத்தரங்கு, எஸ்எம்இகள் கலந்துகொண்டு தங்களுக்கான தொழில் மேம்பாடுகளை அறிந்து கொள்ளும் விதமாக அமையும்’ என டை அமைப்பினர் தெரிவித்தனர்.

SME Q &A

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாகத் தொழில் துவங்கலாம் என்று இருக்கிறேன். இங்குள்ள தொழில் வாய்ப்புகள் குறித்த தகவல்கள் தேவை?

@ சந்திரசேகர், திருநெல்வேலி.

இதுகுறித்து பதிலளித்த திருநெல்வேலி மாவட்ட தொழில் மைய அதிகாரிகள், ‘‘திருநெல்வேலியில் விவசாயத்துக்குப் பயன்படும் பொருட்களுக்கும், சிறு தொழில்களில் கயிறு மற்றும் அதன்மூலம் தயாரிக்கப்படும் பொருட்களுக்கும் அதிக வரவேற்பு உள்ளது. பிளாஸ்டிக் உற்பத்தி தொழில்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைப்பதால், தற்போது அந்தத் தொழிலுக்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன” என்று தெரிவித்தனர்.

எஸ்.எம்.இ தொழில்முனைவோர் கவனத்துக்கு...

உங்களுடைய சந்தேகங்கள் மற்றும் உங்களுக்கான பிரச்னைகள் பற்றிய கேள்விகளுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி: னீsனீமீ@ஸ்வீளீணீtணீஸீ.நீஷீனீ குரல்பதிவு மூலமாகவும் உங்கள் கேள்வியை பதிவு செய்யலாம். அதற்கு 044-66802920 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள். கணினி குரல் வழிகாட்டும்.