நடப்பு
Published:Updated:

அதிக லாபம் தரும்... ஃபண்ட் தேர்வுக்கு... ஆல்பா, பீட்டா !

இரா.ரூபாவதி

ஒருவரது எதிர்கால நிதித் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சிறந்ததாக இருக்கும் என்பது காலம் சொல்லும் நிஜம். இதற்கு சரியான மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது அவசியம். மியூச்சுவல் ஃபண்டுகளைத் தேர்வு செய்வதற்கு பல்வேறு அளவுகோல்கள் உள்ளன.

இந்த அளவுகோல்களில் மிகவும் முக்கியமானது ஆல்பா மற்றும் பீட்டா அளவுகோல்கள். ஆல்பா, பீட்டா என்றால் என்ன, இதை எப்படிக் கணக்கிடுவது, இதனால் என்ன பயன் என்பது குறித்து ஃபண்ட்ஸ் இந்தியா டாட்காம் நிறுவனத்தின் மியூச்சுவல் ஃபண்ட் ரிசர்ச் ஹெட் வித்யா பாலா கூறுகிறார்.

“ஆல்பா என்பது நீங்கள் முதலீடு செய்திருக்கும் மியூச்சுவல் ஃபண்டின் வருமானம், பெஞ்ச்மார்க் குறியீட்டை விட எவ்வளவு சதவிகிதம் அதிக வருமானம் கொடுத்துள்ளது என்பதைப் பார்ப்பதற்கு உதவும். அதாவது, கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட குறியீடு (சென்செக்ஸ், நிஃப்டி) வருடத்துக்கு 10 சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது என்று வைத்துக் கொள்வோம்.

அதிக லாபம் தரும்... ஃபண்ட் தேர்வுக்கு... ஆல்பா, பீட்டா !

அதே குறியீட்டை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் வருடத்துக்கு 17 சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது என வைத்துக் கொள்வோம். இப்போது இந்த ஃபண்டின் ஆல்பா 7 ஆகும். அதாவது, குறியீட்டை விட வருடத்துக்கு 7 சதவிகிதம் அதிக வருமானம் கொடுத்ததைக் காட்டுகிறது.

ஆல்பா அதிகமாக இருப்பது நல்லது. அதேநேரத்தில் மறைமுகமாக ரிஸ்க்கும் அதிகமாக இருக்க வாய்ப்புண்டு.

மேலும், இந்த ஆல்பா என்பது நீங்கள் எடுத்திருக்கும் ரிஸ்குக்கு ஏற்ப வருமானம் கிடைத்துள்ளதா என்பதைக் கணக்கிடுவதற்கு உதவும்.

பீட்டா!

அதிக லாபம் தரும்... ஃபண்ட் தேர்வுக்கு... ஆல்பா, பீட்டா !

பீட்டா என்பது ஒரு ஃபண்டின் ஏற்ற, இறக்கத்தைக் கணக்கிட உதவும் அளவுகோல் ஆகும். சென்செக்ஸ், நிஃப்டி போன்ற குறியீட்டுடன் முதலீடு செய்திருக்கும் ஃபண்டை ஒப்பிட்டுப் பார்க்கலாம். பீட்டாவைப் பலவழிகளில் கணக்கிடலாம். அதில் ஓர் எளிய வழியை இப்போது பார்ப்போம்.
அதாவது, மிட் கேப் ஃபண்டுகள் 12 சதவிகிதம் வருமானம் கொடுத்துள்ளது என வைத்துக் கொள்வோம். அதே குறிப்பிட்ட பெஞ்ச்மார்க் கொண்ட குறியீடு 16 சதவிகிதம் வருமானமும், சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் 14% வருமானமும் கொடுத்துள்ளது என வைத்துக் கொள்வோம்.

பெஞ்ச்மார்க் குறியீட்டின் வருமானத்திலிருந்து அதே குறியீட்டைக் கொண்ட மிட் கேப் ஃபண்டின் வருமானத்தை (16% --12% = 4%) கழிக்க வேண்டும். அடுத்து சந்தை குறியீட்டின் வருமானத்திலிருந்து மிட் கேப் ஃபண்டின் வருமானத்தை (14% - 12% = 2%) கழித்தால் 2% கிடைக்கும்.
முதலில் கிடைத்த மதிப்பை (4), இரண்டாவதாகக் கிடைத்த மதிப்பால் (2) வகுத்தால் கிடைப்பதுதான் பீட்டா (4/2 = 2). இந்த மதிப்பு 1-க்குக் கீழ் இருந்தால் அந்த ஃபண்ட், சந்தையைவிடக் குறைவான ஏற்ற இறக்கத்தைக் கொண்டுள்ளது என தீர்மானிக்கலாம்.

பீட்டாவின் மதிப்பு 1-க்குக் கீழ் இருந்தால், பெஞ்ச்மார்க்கைவிடக் குறைவான வருமானம் கிடைக்கும். அதுவே, 1-க்கு மேல் இருந்தால் பெஞ்ச்மார்க் வருமானத்தைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.

அதிக லாபம் தரும்... ஃபண்ட் தேர்வுக்கு... ஆல்பா, பீட்டா !

ஆல்பா, பீட்டாவின் மதிப்பை முதலீட்டாளர் கணக்கிடுவது சற்று கடின மானது. இந்த மதிப்பை ஃபண்டின் ஃபேக்ட்ஷீட்டிலிருந்து தெரிந்துகொள்ளலாம்” என்றார்.

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் இனி ஆல்பா, பீட்டா விஷயங்களைக் கவனித்து முதலீடு செய்யலாமே!