நடப்பு
Published:Updated:

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

தங்கம்!

“தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் விலை குறைந்து காணப் பட்டது.சீனாவின் பொருளாதாரம் இறக்கத்தில் காணப்பட்டதை அடுத்து தங்கத்தின் விலையில் சற்று இறக்கம் ஏற்பட்டது. சர்வதேச சந்தைகளில் முதலீட்டாளர்களின் விருப்பம் பங்குச் சந்தை பக்கம் திரும்பியுள்ளதும் இந்த விலைகுறைவுக்கு காரணமாகியுள்ளது.சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1,238 டாலராக வர்த்தகமாகி வருகிறது. இதன் விலை 1,200 டாலர் முதல் 1,273 டாலர் வரை வர்த்தகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியச் சந்தைகளில் தங்கத்தின் விலை சிறிய அளவு இறக்கம் காணப் பட்டது. 10 கிராம் தங்கத்தின் விலை 27,371 ரூபாயாக வர்த்தகமாகிறது. வரும் வாரம் பண்டிகை காலம் என்பதால் சற்று விலையில் ஏற்ற இறக்கம் காணப்படும். பெரும்பாலும் சர்வதேச சந்தை மற்றும் ரூபாயின் மதிப்பைப் பொறுத்து தங்கத்தின் விலை இருக்கும்.”

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

வெள்ளி!

சர்வதேச சந்தையில் வெள்ளியின் விலை குறைந்தே வர்த்தகமாகிறது. தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சிறிய இறக்கம் வெள்ளியின் விலை குறையக் காரணமானது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி 17.3 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகிறது. அமெரிக்கப் பொருளாதாரச் செய்திகள் நாட்டின் முன்னேற்றத்தைக் காட்டுவதால் மெட்டல் பொருட்களின் விலையில் இறக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.


இந்திய கமாடிட்டி சந்தையில் வெள்ளியின் விலை சற்று அதிகரித்தே வர்த்தகமானது. 0.27 சதவிகிதம் அதிகரித்துள்ள வெள்ளியின் விலை வரும் வாரங்களில் சர்வதேச விலை நிலவரங்களைப் பொறுத்தே அமையும் என்று கூறப்படுகிறது.

காப்பர்!

காப்பரின் விலை சர்வதேச சந்தையில் விலை குறைந்தே வர்த்தகமாகியது. உலகப் பங்குச் சந்தைகள் கடந்த வாரத்தில் சந்தித்த இறக்கம் காப்பர் விலை குறைவுக்கு காரணமாகியுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு காப்பரின் விலை குறைந்து வர்த்தகமாகியது. அதிகரித்து வரும் அமெரிக்கப் பொருளாதாரமும், டாலரின் மதிப்பில் ஏற்பட்ட சிறு சறுக்கலும் காப்பரின் விலை குறையக் காரணமாகியுள்ளது.
 

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

இந்திய கமாடிட்டி சந்தையிலும் காப்பரின் விலை குறைந்தே வர்த்தக மானது. கடந்த வாரத்தில் ரூபாயின் மதிப்பு குறைந்திருந்தாலும் காப்பரின் விலை 3 சதவிகிதம் குறைந்து வர்த்தக மானது. அமெரிக்கப் பொருளாதாரத் தகவல்களைப் பொறுத்தும், சர்வதேச சந்தையின் நிலவரத்தைப் பொறுத்தும் காப்பரின் விலை அமையும் என்று கூறப்படுகிறது. இந்திய சந்தையில் ரூபாயின் மதிப்பைப் பொறுத்து காப்பரின் விலை மாறுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கச்சா எண்ணெய்!

கமாடிட்டி மெட்டல் & ஆயில்

கச்சா எண்ணெய் சர்வதேச சந்தைகளில் விலை குறைந்தே வர்த்தகமாகியுள்ளது. இஐஏ அளித்த தகவலின்படி, அமெரிக்காவில் கச்சா எண்ணெய்யின் இருப்பு 8.9 மில்லியன் பேரல் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்திலிருந்து 25 சதவிகிதம் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்துள்ளதாக இஐஏ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க இருப்பு அதிகரிப்பால் கச்சா எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. சீனா பொருளாதாரச் சரிவும் கச்சா எண்ணெய்யின் விலை குறையக் காரணமாகும் என்று கூறப்படுகிறது.

இந்திய கமாடிட்டி சந்தையிலும் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து குறைந்தே காணப்படுகிறது. இந்திய சந்தையில் 0.3 சதவிகிதம் குறைந்து வர்த்தகமான கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச விலை நிலவரங்களைப் பொறுத்து வரும் வாரங்களில் குறைந்து வர்த்தகமாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.