Published:Updated:

`நடப்பு நிதியாண்டிலேயே விற்பனை'- ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் குறித்து நிர்மலா சீதாராமன்!

இரு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் ( ANI )

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நடத்திய நேர்காணலில் பொருளாதாரம் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து நிதி நெருக்கடியில் சிக்கிவரும் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்தவர், `அவை நடப்பு நிதியாண்டிலே விற்பனை செய்யப்படும்' என எதிர்பார்க்கிறோம். அதற்கான பணிகள் நடந்து வருன்றன என்றார்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம்தான் முதலில் நிறுவியது. அதன்பின் அரசு கைப்பற்றியது. மத்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனம் நீண்ட காலமாக நிதி நெருக்கடியில் சிக்கி வருகிறது. குறிப்பிட்ட சதவிகித பங்குகளை அரசு தன்னிடம் வைத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை விற்பனை செய்ய முயன்றது. ஆனால், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க எந்த நிறுவனமும் ஆர்வம் காட்டவில்லை. பல்வேறு சலுகைகளை அளித்து ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது.

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த மோசடியடுத்து கூட்டுறவு வங்கிகளைக் கண்காணிக்க எதாவது திட்டம் இருக்கிறதா எனக் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்தவர் ``இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநரிடம் ஆலோசனை மேற்கொண்டேன். அதில் இருக்கும் சிக்கல்களைத் தெரிந்துகொண்டேன். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன என பதிலளித்தார்.

ஏர் இந்தியா
ஏர் இந்தியா

பொருளாதார மந்தநிலை குறித்து அரசு ஆராய்ந்து வருகிறது. ஜிஎஸ்டி வரி வசூலால் சில துறைகளில் விற்பனை அதிகரித்துள்ளது. தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும்” என்றார்.