பிரீமியம் ஸ்டோரி

வீடுகள் விற்பனை மும்பை முதலிடம்!

ந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வீடு விற்பனையானது கணிசமாக அதிகரித்திருப்பதாக நைட் ஃப்ராங்க் நிறுவனம் சொல்லியிருக்கிறது. இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் ரியல் எஸ்டேட் விற்பனை பற்றி ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிட்டி ருக்கிறது.

நாணயம் பிட்ஸ்...

கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை யிலான ஆறு மாதங்களில் அகமதாபாத்தில் 3,398 புதிய புராஜெக்ட்டுகள் தொடங்கப் பட்டுள்ளன. இது கடந்த ஆண்டைவிட 157% அதிகம். புனே 52 சதவிகிதமும், ஹைதராபாத்தில் 47 சதவிகிதமும், மும்பையில் 22 சதவிகிதமும் புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களைத் தொடங்குவதில் வளர்ச்சி கண்டுள்ளது. மும்பையில் மட்டும் கடந்த ஆறு மாதங்களில் 33,731 வீடுகள் விற்கப்பட்டுள்ளன.

ஆனால், தேசிய தலைநகரப் பகுதியிலும் (NCR), கொல்கத்தாவிலும் வீடு விற்பனை இன்னும் சூடுபிடிக்க வில்லை என்கிறது அந்த அறிக்கை.

#தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் சூடுபிடிக்கவில்லையே, ஏன்?

ரூபாய் அச்சடிக்கும் செலவு குறைந்தது!

நாணயம் பிட்ஸ்...

ரூ.2,000 நோட்டினை அச்சடிக்க ஆகும் செலவு ஆண்டுதோறும் குறைந்துவருகிறது. கடந்த 2017-18-ம் ஆண்டு ரூ.2000 நோட்டினை அச்சடிக்க ரூ.4.18 செலவானது. இதுவே 2018-19-ல் ரூ.3.53 மட்டுமே செலவாகியிருக்கிறது. இதேபோல, 2017- 18-ல் ரூ.500 அச்சடிக்க ரூ.2.39 செலவானது. ஆனால், 2018-19-ல் ரூ.2.13 மட்டுமே செலவாகிறது. ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரன் பிரைவேட் லிமிடெட் (BRBNMPL) என்கிற நிறுவனமே நமது அரசுக்குத் தேவையான பணத்தை அச்சடித்துத் தருகிறது. ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க ஆகும் செலவு குறைந்தாலும், அதிக ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததால், அரசின் செலவும் அதிகரிக்கவே செய்திருக்கிறது. அதாவது, 2017-18-ல் ரூ.4,912 கோடி செலவானது, 2017-18-ல் ரூ.7,965 கோடியாக உயர்ந்திருக்கிறது.

#ரொக்கப் பணப்புழக்கத்தைக் குறைக்க டிஜிட்டல் பரிவர்த்தனைதான் ஒரே வழி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கார்ப்பரேட் நன்கொடை... முதலிடத்தில் பா.ஜ.க!

நாணயம் பிட்ஸ்...

கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவதில் முதலிடத்தில் இருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. கடந்த 2016-17 மற்றும் 2017-18 ஆகிய இரு ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங் களிடமிருந்து அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை ரூ.1,059 கோடி. இதில் 92% நன்கொடையை அதாவது, ரூ.915 கோடியை பா.ஜ.க பெற்றிருக்கிறது. 1,731 கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த நன்கொடையைத் தந்திருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சியோ 151 நிறுவனங்களிடமிருந்து ரூ.55 கோடி அளவுக்கு மட்டுமே நன்கொடை பெற்றிருக்கிறது. கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (சி.பி.ஐ) கட்சி ரூ.20 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

#ஆனா, பட்ஜெட்ல பெரும் பணக்காரங்களுக்கு அதிக வரி போட்டுட்டாங்களே!

நேரடி வரி இலக்கு ரூ.13 லட்சம் கோடி!

நாணயம் பிட்ஸ்...

ந்த 2019-20-ம் ஆண்டில் நேரடி வரிக்கான இலக்கு ரூ.13.35 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. முன்னர் ரூ.13.78 லட்சம் கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது மிக மிக அதிகம் என்பதால், தற்போது இந்த இலக்கு கொஞ்சம் குறைக்கப்பட்டு உள்ளது. # அரசாங்கத்தை ஏமாத்தாம கரெக்டா வரியைக் கட்டிடுங்க மக்களே!

ரத்தான என்.பி.எஃப்.சி நிறுவனங்கள்!

டந்த 2018-19-ம் ஆண்டில் ரத்தான வங்கிசாரா நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை 1701-ஆக இருக்கிறது. வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வாங்கிவிட்டு, மோசடி நடவடிக்கையில் இறங்கியது கண்டுபிடிக்கப் பட்டதன் விளைவாக இந்த வங்கிசாரா நிதி நிறுவனங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது! #உஷார், என்.பி.எஃப்.சி

டெபாசிட் பண்ணுங்க, வெளிநாட்டுக்குப் போங்க!

நாணயம் பிட்ஸ்...

வெளிநாட்டுக்குப் போவதற்கு அனுமதி கேட்ட ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயலுக்கு அனுமதி தர மறுத்திருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் ஏறக்குறைய ரூ.18,000 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பதாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டினைத் தொடர்ந்து, அவர் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடைக்காலத் தடை வழங்கவேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் நரேஷ். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, ‘‘ரூ.18,000 கோடியை முதலில் டெபாசிட் பண்ணுங்கள்; நீங்கள் விரும்புகிறமாதிரி வெளிநாட்டுக்குப் போய் வாருங்கள்’’ என்று தீர்ப்பளித்து விட்டார். கடந்த மே மாதத்தில் வெளிநாட்டுக்குச் செல்ல விமானம் ஏறிவிட்ட நிலையில், அவரும் அவரின் மனைவியும் இறக்கிவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#விட்ராதீங்க, போனா திரும்பி வரமாட்டாங்க!

என்.பி.ஏ-வைக் குறைக்க ஐ.ஓ.பி. சி.இ.ஓ-வின் திட்டம்!

நாணயம் பிட்ஸ்...

‘‘வாராக் கடனைக் குறைத்து, வங்கியை லாபப் பாதைக்குக் கொண்டுவருவதே தன்னுடைய நோக்கம்’’ என்று சொல்லியிருக்கிறார் ஐ.ஓ.பி-யின் புதிய சி.இ.ஓ கர்ணம் சேகர். ‘‘நிகர வட்டி வருமானத்தை அதிகரிக்கச் செய்வதால் நிகர வட்டியின்மூலம் கிடைக்கும் லாபத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும். வாராக் கடன் மீதான சொத்துகளை அதிக விலைக்கு விற்று, கடனுக்கு ஈடான தொகையைப் பெறவேண்டும். இப்படி யெல்லாம் செய்வதன்மூலம்தான் ஆர்.பி.ஐ விதித்திருக்கும் ‘ப்ராம்ப்ட் கரெக்டிவ் ஆக்‌ஷனிலிருந்து (PCA) வெளியே வரமுடியும். வாராக் கடனை 6 சதவிகிதத்துக்கும் குறைவாகக் கொண்டுவந்தால் மட்டுமே பி.சி.ஏ-விலிருந்து வெளியே வரமுடியும்’’ என்று சொல்லியிருக்கிறார் கர்ணம் சேகர்.

#அரசியல் தலையீட்டை ஒழிச்சுக் கட்டினாலே வாராக் கடன் குறைஞ்சுடுமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு