Published:Updated:

மளிகைக்கடை நடத்தும் எனக்கு ஆன்லைன் பரிவர்த்தனையால் என்ன நன்மை?

பிசினஸ் கிளினிக்...

பிரீமியம் ஸ்டோரி

நான் ஆண்டுக்கு ரூ.5 கோடி அளவுக்கு டேர்ன்ஓவர் செய்யும் எஸ்.எம்.இ. வெளிநாடுகளில் 2% முதல் 3% வட்டியில் தொழில் கடன் கிடைப்பதாகச் சொல்கிறார்கள். நான் இந்தத் தொழில் கடன் பெற என்ன செய்ய வேண்டும்?

ஆர்.கதிர்வேல், திருச்சி

பி.ராமகிருஷ்ணன், தொழில் ஆலோசகர், பி.ஆர்.கே அகாடமி.

மளிகைக்கடை நடத்தும் எனக்கு ஆன்லைன் பரிவர்த்தனையால் என்ன நன்மை?

‘‘முதலில், இந்தக் கடனை வாங்குவதற்குமுன் சில விஷயங்களை நீங்கள் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் நீங்கள் தொழில் கடன் வாங்கும்போது உங்களுக்கான கடன் பணத்தை டாலரில்தான் தருவார்கள். இன்றைக்கு இந்திய ரூபாய்க்கு நிகரான ஒரு டாலரின் மதிப்பு ரூ.70 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் ரூ.70 லட்சம் தொழில் கடன் வாங்குகிறீர்கள் என்றால், 1,00,000 டாலர்கள் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டாலரை இந்திய ரூபாயாக மாற்றி, நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மளிகைக்கடை நடத்தும் எனக்கு ஆன்லைன் பரிவர்த்தனையால் என்ன நன்மை?

இந்தக் கடனை வாங்கியபின் ஓராண்டு காலத்தில் திரும்பக் கட்டவேண்டும். அப்படித் திரும்பக் கட்டும்போது உங்களிடம் இருக்கும் இந்திய ரூபாயை டாலராக மாற்றித்தான் கட்டவேண்டும். அப்போது டாலரின் மதிப்பு முன்பிருந்ததைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். உதாரணமாக, ஓராண்டுக்கு முன் ரூ.70-க்கு வாங்கிய டாலரின் மதிப்பு, தற்போது ரூ.77-ஆக உயர்ந்திருக்கிறது எனில், 10% கூடுதல் பணம் தந்துதான் நீங்கள் டாலரை வாங்கவேண்டியிருக்கும். இதன்மூலம், கடனுக்கான வட்டி 3%, டாலர் மதிப்பு உயர்வினால் நீங்கள் கூடுதலாகக் கட்டும் பணம் 10% என மொத்தம் 13% நீங்கள் கட்டவேண்டியிருக்கும். எனவேதான், பலரும் வெளிநாடுகளிலிருந்து டாலர்மூலம் கிடைக்கும் கடனை வாங்க யோசிக்கிறார்கள்.

ஆனால், நீங்கள் ஒரு ஏற்றுமதியாளராக இருக்கும்பட்சத்தில், இந்த ஆபத்திலிருந்து பெரிய பாதிப்பு எதுவும் இல்லாமல் தப்பித்துவிட முடியும். காரணம், நீங்கள் ஏற்றுமதி செய்யும் பொருளுக்கான பணம் டாலரில் உங்களுக்குக் கிடைக்கும் என்பதால், அதை வைத்தே உங்கள் கடனில் பெரும்பகுதியைக் கட்டிவிட முடியும்.

இந்தக் கடனைப் பெற நீங்கள் கரன்ட் அக்கவுன்ட் வைத்திருக்கும் உங்கள் வங்கி யிலேயே விசாரியுங்கள். உங்கள் டேர்ன்ஓவர் அல்லது வொர்க்கிங் கேப்பிட்டல் அடிப்படையில் உங்களுக்கு இந்தக் கடன் கிடைக்க அவர்களே உதவி செய்வார்கள்!’’

நான் ஓரளவுக்குப் பெரிய அளவில் மளிகைக்கடை நடத்தி வருகிறேன். ரொக்கமாகப் பணத்தை வாங்காமல், ஆன்லைன்மூலம் பணம் வாங்கினால் எனக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?

டி.தவமணி, கும்பகோணம்.

கோபால் கிருஷ்ணராஜு, ஆடிட்டர், சென்னை.

மளிகைக்கடை நடத்தும் எனக்கு ஆன்லைன் பரிவர்த்தனையால் என்ன நன்மை?

‘‘ஆண்டு டேர்ன்ஓவர் ரூ.50 கோடிமேல் உள்ளவர்கள் ஆன்லைன் மூலமாகத்தான் அனைத்துப் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்பது கட்டாயம். உங்கள் ஆண்டு டேர்ன்ஓவர் ரூ.50 கோடிக்குள் இருக்கும்பட்சத்தில் நீங்கள் ஆன்லைன் மூலமாகத்தான் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனாலும், நீங்கள் ஆன்லைன்மூலம் பணப் பரிவர்த்தனை செய்தால், உங்களுக்குப் பல நன்மைகள் கிடைக்கும்.

மளிகைக்கடை நடத்தும் எனக்கு ஆன்லைன் பரிவர்த்தனையால் என்ன நன்மை?

ஆன்லைன்மூலமாக பணப் பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்துக்கு 6% வரி கட்டினால் போதும். (பிற நிறுவனங்களுக்கு இது 8%). ஆன்லைன்மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும்போது, உங்கள் கணக்குவழக்குகள் எல்லாமே சரியாக இருக்கும் என்பதால், உங்கள் பிசினஸை இன்னும் பெரிதாக்க அது நிச்சயம் உதவும். தவிர, வங்கியில் உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். மேலும், ‘ஒன் கார்டு, ஒன் நேஷன்’ என்கிற திட்டத்தின்படி இனி நம்மிடம் இருக்கும் எல்லா கார்டுகளும் ஒரே கார்டின்கீழ் ஒருங்கிணைக்கப்படவுள்ளன. இந்த கார்டு நடைமுறைக்கு வந்துவிட்டால், ஆன்லைன் மூலம் எல்லோருமே பணம் செலுத்தத் தொடங்கிவிடுவார்கள். எனவே, நீங்களும் இப்போதே ஆன்லைனுக்கு மாறிவிடுங்கள்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிழகம் முழுக்க உள்ள லட்சக் கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு இதுமாதிரி பல கேள்விகளும் சந்தேகங்களும் வருவது இயற்கையே. இந்தக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் உரிய பதிலை நிபுணர்களிடமிருந்து தருவதே இந்தப் பகுதியின் நோக்கம். நீங்கள் செய்துவரும் தொழில் பற்றி உங்களுக்குக் கேள்விகள் ஏதும் இருந்தால், businessclinic@vikatan.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கான பதில் நாணயம் விகடன் இதழில் இடம்பெறும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு