Published:Updated:

ஜிஎஸ்டி ரிட்டர்ன் ஃபைல் செய்யாவிட்டால் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுமா?

ஜி.எஸ்.டி இ-வே பில்
ஜி.எஸ்.டி இ-வே பில்

"அனைத்துமே கணினிமயமாக்கப்பட்டுவரும் சூழலில், ஜிஎஸ்டி ரிட்டர்ன் ஃபைல் செய்வதில் காலம் தவறாமல் செயல்பட வேண்டும். அதில் தவறும்போது, ஆட்டோமேட்டிக்காக இத்தகைய சிக்கலுக்குள் தள்ளப்படுவோம்."

ஜிஎஸ்டி ரிட்டர்ன் ஃபைல் செய்யாதவர்களுக்கு, இ-வே பில் முடக்கப்படும் என்று கூறப்படுகிறது. ரிட்டர்ன் ஃபைல் செய்யாத அனைவருக்கும் உடனடியாக முடக்கம் செய்யப்படுமா, நேர்மையாக வணிகம் செய்பவர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுமா என்றெல்லாம் வணிகர்கள் மத்தியில் குழப்பமும் அச்சமும் நிலவுகிறது. எனவே, இதுகுறித்து ஆடிட்டர் கோபால்கிருஷ்ணராஜுவிடம் கேட்டோம்.

ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி

"நேர்மையான முறையில் தொழில் செய்பவர்கள், இ-வே பில் முடக்கம்குறித்து அச்சப்படத் தேவையில்லை. தொழிலில் நேர்மையைக் கொண்டுவர வேண்டும். ஜிஎஸ்டி வரியை முறையாகச் செலுத்த வேண்டும் என்பதே, ஜிஎஸ்டிஆர் 3பி விதிமுறை கொண்டுவரப்பட்டதின் முக்கிய நோக்கமாகும். முறையாக ஜிஎஸ்டி செலுத்தியவர்கள், மொத்த விற்பனை எவ்வளவு எனக் கணக்கிட்டு, அதில் உள்ளீட்டு வரிக் கடன் எவ்வளவோ அதைக் கழித்தபின் வரும் தொகைக்கு, ஜிஎஸ்டி ரிட்டர்ன் ஃபைல் பண்ண வேண்டும். இது, ஜிஎஸ்டி-யில் கட்டாயமான நடைமுறை. இரண்டு மாத காலமாக ஜிஎஸ்டிஆர்-3பி (GSTR-3B) ஃபைல் செய்யாவிட்டால் மட்டுமே இ-வே பில்லின் லாகின் முடக்கப்படும்.

பிசினஸ் செய்யக்கூடிய ஒருவர், பர்ச்சேஸ் ஆர்டரெல்லாம் வாங்கிவிட்டு, வாகனம் மூலமாக அனுப்பவேண்டிய பொருள்களை பேக்கிங் செய்தபின், ஆன்லைனில் இ-வே பில் தயாரிக்கும்போது, லாகின் தடை செய்யப்பட்டிருக்கும். அது ஒரு இக்கட்டான சூழல். அனைத்துமே கணினிமயமாக்கப்பட்டுவரும் சூழலில், ஜிஎஸ்டி ரிட்டர்ன் ஃபைல் செய்வதில் காலம் தவறாமல் செயல்பட வேண்டும். அதில் தவறும்போது, ஆட்டோமேட்டிக்காக இத்தகைய சிக்கலுக்குள் தள்ளப்படுவோம். கணினி மென்பொருளைப் பொறுத்தவரை, அதன் ப்ரொக்ராம்படி செயல்படக்கூடியது என்பதை மனதில்கொள்ள வேண்டும்.

ஆடிட்டர் கோபால்கிருஷ்ண ராஜு
ஆடிட்டர் கோபால்கிருஷ்ண ராஜு
காளிமுத்து

ஜிஎஸ்டி ரிட்டர்ன் ஃபைல் செய்வதில் ஒரு மாதம் தாமதித்தாலே எச்சரிக்கையாக வேண்டும். இரண்டாவது மாதத்துக்குள் அதை ஃபைல் செய்ய வேண்டும். ஜிஎஸ்டி ரிட்டர்ன் ஃபைல் செய்வதற்குத் தாமதிக்கும்போதே உங்களுக்கு அலர்ட் மெசேஜ்கள் வரக்கூடும். உடனே நீங்கள் இதைச் செலுத்திவிட்டால் எந்தச் சிக்கலும் இல்லை. இரண்டு மாதங்களாக ஜிஎஸ்டி ரிட்டர்ன் செய்யாமல் விட்டாலே இ-வே பில் உருவாக்க முடியாது என்பது ஓர் எச்சரிக்கை.

அடுத்ததாக, ஜிஎஸ்டி ரிட்டர்ன் ஃபைல் செய்யாவிட்டால் வங்கிக்கணக்குகளும் முடக்கப்படும் என்று செய்திகள் வருகின்றன. அதுகுறித்து பார்த்தோமானால், ஃபைல் செய்யாமல் தாமதிப்பது மிகத்தீவிரமான பிரச்னையாக உணரப்படும்போதுதான் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இன்னமும் அதைச் சட்டமாகக் கொண்டுவரவில்லை. இனிதான் அதுகுறித்த சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டு அமலாக்கம் செய்யப்படும். தற்போதைக்கு இதுகுறித்த ஆலோசனைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இ-வே பில்
இ-வே பில்
நீங்களே ஆன்லைனில் வருமான வரி தாக்கல் செய்யலாம்... எப்படி?! #DoubtOfCommonMan

ஜிஎஸ்டி ரிட்டர்ன் முறையாக ஃபைல் பண்ணாமல் அரசை ஏமாற்ற முயற்சி செய்பவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில்தான் இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டிருக்கிறது. நேர்மையாகச் செயல்படுபவர்கள், இதனால் எவ்விதத்திலும் பாதிக்கப்படப்போவதில்லை" என்றார்.

இ-வே பில் முடக்கத்திலிருந்து மீள்வது எப்படி?

செலுத்தத் தவறிய ஜிஎஸ்டியை முழுமையாகச் செலுத்தி, ஜிஎஸ்டி ரிட்டர்ன் ஃபைலிங் செய்யப்பட்டபின், மறுநாளிலேயே இ-வே பில் தடை நீக்கப்படும். வாடிக்கையாளர் உடனடியாக இ-வே பில் தடையை நீக்க விரும்பினால், அதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஜிஎஸ்டி ரிட்டர்னை முறையாக ஃபைல் செய்தபின், அதே போர்ட்டலில் 'Search Update Block Status' என்பதைத் தேர்வுசெய்ய வேண்டும். அதன்பின், தங்களது 'GSTIN' விவரத்தை அளிக்க வேண்டும். அதன்பின்பு, கேப்சா கோட் விவரத்தைக் கேட்கும். அதைச் சரியாகச் செலுத்தியதும் தடை நீக்கப்பட்டுவிடும்.

சரக்கு வாகனம்
சரக்கு வாகனம்
ஃபாஸ்டேக்கில் (Fastag) மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டண சலுகை உண்டா? #DoubtOfCommonMan

அப்போதும் தடை நீக்கப்படாவிட்டால், 'Update Unblock Status from GST Common Portal' என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். உடனடியாக, சமீபத்தில் ஜிஎஸ்டி ஃபைலிங் செய்தவர்களின் விவரங்களைச் சரிபார்க்கும். சரிபார்க்கும்போது நீங்கள் ரிட்டர்ன் ஃபைல் செய்தது தெரிய வரும். தடையையும் நீக்கிவிடும். தடை நீக்கப்பட்டதும் 'unblocked' எனக்காட்டும்.

அடுத்த கட்டுரைக்கு