Published:Updated:

சம்பளத்தை சரியாக செலவழிக்க 5 வழிமுறைகள் #MoneyManagement

சாஃப்ட்வேர் போன்ற நவீன துறைகளில் வேலை இழப்பு அதிகமாக இருப்பதால், அவசரக்கால வைப்பு நிதியை உருவாக்குதல் மிகவும் முக்கியம்.

இறுதியாண்டு கல்லூரி மாணவர்கள், வேலை உலகில் அடியெடுத்து வைக்கும் காலமிது. சம்பாதிக்கும் பணம் கையில் கிடைக்கும்போது, மகிழ்ச்சியுடன் கூடவே பயமும் வருவது வழக்கமானதுதான். சம்பளத்தை எப்படி செலவு செய்வது, எப்படிச் சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது போன்ற பல குழப்பங்களுக்கான தீர்வுகள் இதோ உங்களுக்காக...

நடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா?  #SmartInvestorIn100Days நாள்-65
2
Emergency fund

அவசர வைப்பு நிதியை உருவாக்குங்கள்!

முதலில் வருமானத்தைச் சரியாக சேமிக்கவும் முதலீடு செய்யவும் கற்றுக்கொள்ள வேண்டும். சம்பளம் வாங்கியவுடன், அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தெரியாமல், பல நேரங்களில் நாம் அநாவசிய செலவுகளில் ஈடுபடுவோம். சேமிக்கிறோம் என்றாலும், வங்கிகளில் சேமிப்பு கணக்கைத் தொடங்குவதைத் தவிர்த்து நாம் பெரிதாக எதுவும் செய்வதில்லை.

இந்த நேரத்தில் அவசர வைப்பு நிதியின் முக்கியத்துவத்தை அறிவது மிகவும் அவசியம். அவசர வைப்பு நிதி என்பது, தற்காலிகமாக வேலையிழந்தாலோ அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ, அதைச் சமாளிக்க உதவும் அவசரக்கால சேமிப்பாகும். 

சாஃப்ட்வேர் போன்ற நவீன துறைகளில் வேலைப் பாதுகாப்பு மிகவும் குறைவாக இருப்பதால், அவசரக்கால வைப்பு நிதியை உருவாக்குதல் மிகவும் முக்கியம். அதனால், சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கினை ஃபிக்சட் டெபாசிட்டிலும், குறுகிய கால மியூச்சுவல் ஃபண்டிலும் முதலீடு செய்வது பெஸ்ட் ஆப்ஷன்.

3
insurance

சொந்தமாகக் காப்பீடு!

கம்பெனிகளே இப்போது ஊழியர்களுக்காக காப்பீடுகள் எடுக்கின்றன. ஹெல்த், பர்சனல் ஆக்சிடண்ட் மற்றும் ஆயுள் காப்பீடு போன்ற காப்பீடுகள் வழக்கமாக எடுக்கப்படும். ஆனால், ஊழியர்களின் தகுதிக்கு ஏற்ப, காப்பீடுகள் வேறுபடும். சில சமயங்களில் எடுக்கப்படும் காப்பீடுகள் நமது தேவைக்கு ஏற்ப இல்லாமலிருக்கலாம்.

இதுமட்டுமில்லாமல், 20-30 வயதுக்குட்பட்டவர்கள் வேலை மாறிக்கொண்டே இருப்பதால், கம்பெனியின் காப்பீடுகளை மட்டும் நம்பியில்லாமல் தனியாக எடுத்துக் கொள்வது நல்லது. நீங்கள் வேலைக்குச் சேரும் புது இடத்தில் காப்பீடு வசதி இல்லாமலும் இருக்கலாம். அதனால், வேலைக்குச் சேர்ந்தவுடன் ஒரு காப்பீடு எடுத்துக்கொள்ளுங்கள். வயது குறைவாக இருப்பதால், பிரீமியமும் குறைவாகவே இருக்கும்.

4
Education loan

கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துங்கள்!

வேலைக் கிடைத்தவுடன், நமது சேமிப்பின் பெரும் பங்கு வாங்கிய கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தவே சென்றுவிடும். அதனால், கல்விக்கடன் முடியும் வரை செலவுகளைக் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. மேலும், கல்விக் கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்தலாமா அல்லது முழு பதவிக்காலம் வரை தொடர வேண்டுமா என்பதையும் நீங்கள் முடிவு செய்ய வேண்டும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 ன், கீழ், கல்வி கடனுக்காக நீங்கள் செலுத்தும் முழு வட்டி, வரி விலக்குக்குத் தகுதி பெறுகிறது. இந்த வருமான வரி விலக்கு எட்டு ஆண்டுகள் வரை நீடிக்கும்.

5
Dont get Debt

கடன் பெறுவதைத் தவிர்க்கவும்!

20-30 வயது வரம்பில் உள்ளவர்கள் மருத்துவ அவசரங்களுக்கும், திருமணத்திற்கும்தான் அதிகமாகக் கடன் பெறுகின்றனர். கிரெடிட் கார்டுகள் வழங்கும் ரிவார்ட் பாயிண்ட்ஸ், கேஷ் பேக் போன்ற ஆஃபர்கள், அதன் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. ஆனால், நமது திருப்பிச் செலுத்தும் எல்லையைத் தாண்டி கடன் சென்றுவிட்டால், அதைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகிவிடும். அதனால், கடன் பெறுவதை கூடுமானவரைத் தவிருங்கள்.

மேலும், இளைஞர்கள் மத்தியில் 'பேடே (payday)' கடன்கள் பிரபலமாகி வருகின்றன. இவை குறுகிய கால, பாதுகாப்பற்ற மற்றும் சிறிய டிக்கெட் அளவுகளின் உயர் வட்டியுடன் வரும் தனிநபர் கடன்கள் ஆகும். இக்கடன்களின் தொகை ரூ.500 முதல் சில லட்சம் ரூபாய் வரை நீளும். வட்டி விகிதம் ஒரு நாளைக்கு ஒரு சதவிகிதமாகும். பல இளைஞர்கள் தங்களது ஆடம்பரச் செலவுகளுக்கு 'பேடே' கடன்களைப் பயன்படுத்துகின்றனர். இம்முறையில் கடன் வாங்குபவர்கள் கவனமாக இல்லாவிட்டால், எளிதில் அதிகமான கடன் வலையில் சிக்க வேண்டியிருக்கும். ஆடம்பரச் செலவுகளுக்கு இத்தகைய கடன்கள் தவிர்க்கப்பட வேண்டியவை.

6
Savings for Future

எதிர்கால தேவைகளுக்கு முதலீடு செய்யுங்கள்!

வேலைக்குச் சேர்ந்தாலும், சிலருக்கு மேல்படிப்பு படிக்க வேண்டும் என்கிற கனவு இருக்கும். அதற்காகச் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். பெண்களாக இருந்தால், திருமணத் தேவைகளுக்காக முதலீடு செய்யலாம். வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலிருந்து ஓய்வுக்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்ய வேண்டும் என நிதி ஆலோசகர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதனால் அதற்காகவும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளை ஆரம்பியுங்கள். சரியான மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்ந்தெடுக்க முதலீட்டு ஆலோசகர்களை அணுகுவது சரியானது.

கல்லூரிகாலம் முடியும் வரை, நமது அன்றாட செலவுகளையும் தேவைகளையும் உங்களுடைய பெற்றோர்கள் கவனித்துக் கொண்டனர். இப்போது உங்களுக்கென்று ஒரு வருமானம் வந்துவிட்டது. நிதி சுதந்திரமும் கிடைத்து விட்டது. இந்த நிதி சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும். அதே சமயம் ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து, எதிர்காலத்திற்காகவும் கொஞ்சம் சேமிக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு