Published:Updated:

முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய கௌதம் அதானி; ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்!

கெளதம் அதானி

அதானியின் முயற்சியினால் $ 2.9 டிரில்லியன் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும், 2070-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கார்பன் நிகர-பூஜ்ஜிய இலக்கை அடையவும் பிரதமர் மோடி எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிய கௌதம் அதானி; ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம்!

அதானியின் முயற்சியினால் $ 2.9 டிரில்லியன் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும், 2070-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கார்பன் நிகர-பூஜ்ஜிய இலக்கை அடையவும் பிரதமர் மோடி எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

Published:Updated:
கெளதம் அதானி

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி கௌதம் அதானி முதலிடம் பிடித்துள்ளார்.

சிறிய பொருட்களிலிருந்து தனது வர்த்தகத்தை தொடங்கிய அதானி தற்போது சுரங்கங்கள், துறைமுகங்கள் மற்றும் பசுமை எரிசக்தி எனப் பல கூட்டு நிறுவனங்களாக வேரூன்றியுள்ளார்.

ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 87.9 பில்லியன் டாலராக உள்ள நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 88.5 பில்லியன் டாலராக உயர்ந்து உள்ளதாக தெரிவித்துள்ளது, ப்ளூம்பெர்க் ஆய்வு.

 முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த மொத்த சொத்து மதிப்பில் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மட்டும் 12 பில்லியன் உயர்துள்ளதால், இந்த ஆண்டில் உலகின் அதிக வருமானத்தை ஈட்டியவர் என்ற பெயரெடுத்துள்ளார் அதானி. புதுப்பிக்க கூடிய எரிசக்தி, விமான நிலையங்கள் மற்றும் தரவு மையங்களில் சரியான நேரத்தில் ஒப்பந்தங்களை செய்திருப்பதே அதானியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதானியின் இந்த வளர்ச்சி நாட்டின் நீண்ட கால இலக்குகளை அடைவதற்கும், தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் முக்கியமானதாக இருக்குமென தெரிவித்துள்ளார், நரேந்திர மோடி. மேலும் அவருடைய முயற்சியினால் $ 2.9 டிரில்லியன் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும், 2070-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் கார்பன் நிகர-பூஜ்ஜிய இலக்கை அடையவும் பிரதமர் மோடி எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அதானி
அதானி
vikatan

நிலக்கரி தொழிலில் அதானி குழுமத்தின் சில பங்குகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 600%-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களான அம்பானி மற்றும் அதானி புதைபடிவ எரிபொருட்கள், நிலக்கரி போன்ற பசுமை எரிசக்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், 2030-ம் ஆண்டுக்குள் தனது குழுவை உலகின் மிகப்பெரிய புதுப்பிக்க கூடிய எரிசக்தி உற்பத்தியாளராக மாற்றுவதற்காக மொத்தம் 70 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக உறுதியளித்துள்ளார், அதானி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism