Published:Updated:

பொருளாதார மந்தம்… காற்றாடும் நட்சத்திர விடுதிகள்!

ஆ.பழனியப்பன்

இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டிருப்பதால், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள நட்சத்திர விடுதிகளில் பெரும்பாலான அறைகள் காலியாகக் கிடக்கின்றன.

நவீன அறைகள்
நவீன அறைகள்

பொருளாதார மந்தநிலை காரணமாகப் பயணிகள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கானோர் வேலையிழந்துவருகின்றனர். ஜவுளி உட்பட பல்வேறு துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. உற்பத்தித் துறைகள் மட்டுமல்லாமல், சேவைத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நட்சத்திர விடுதி
நட்சத்திர விடுதி

ஒரு நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்றால், விமானப் பயணங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில்தான் அதன் அறிகுறிகள் முதலில் தெரியும் என்று பொருளாதார வல்லுநர்களில் சிலர் கூறிவருகிறார்கள். அதன்படி பார்த்தால், தற்போது சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள நட்சத்திர விடுதிகளில் காலியாகக் கிடக்கும் அறைகள், இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது.

சென்னை நகருக்கும் உள்ளேயும், கிழக்குக் கடற்கரைச் சாலை உட்பட நகரைச் சுற்றிய பகுதிகளிலும் ஏழு நட்சத்திர விடுதிகள், ஐந்து நட்சத்திர விடுதிகள் ஏராளமாக உள்ளன. இந்த விடுதிகளில் சுமார் 10,000 அறைகள் உள்ளன.

நட்சத்திர விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆறு மாதங்களில் 55 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது.

நட்சத்திர விடுதிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆறு மாதங்களில் 55 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது என்று தென்னிந்திய தங்கும் விடுதிகள் மற்றும் உணவுவிடுதிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

பெரும்பாலும் பிசினஸ் தொடர்பாக வருபவர்களும், மருத்துவச் சிகிச்சைகளுக்காக வருபவர்களுமே நட்சத்திர விடுதிகளில் தங்குபவர்களாக இருந்துவரும் நிலையில், அதுபோன்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தற்போது சரிந்திருக்கிறது.