Published:Updated:

`எதிர்பார்த்ததைவிடவும் மிகவும் பலவீனம்!'- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஐ.எம்.எஃப்

மலையரசு

உலகத்தின் முக்கியமான பொருளாதார அமைப்புகள் எல்லாம் இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. அவற்றில் சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கியமானது.

IMF
IMF

உலக அளவில் அதிக மதிப்புகொண்ட பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஏழாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. `உற்பத்தி செய்யப்படும் பொருள்களின் விற்பனை சரிந்துவருகிறது; பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துவருகிறார்கள்; முதலீடுகள் வெகுவாகக் குறைந்துள்ளன; லாபம் சரிந்துள்ளது' என இந்தியாவின் பொருளாதார மந்த நிலை குறித்துப் பேசி வருகின்றனர் பொருளாதார நிபுணர்கள். இது 30 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடி என்றும் தெரிவிக்கின்றனர்.

finance
finance

உலகத்தின் முக்கியமான பொருளாதார அமைப்புகள் எல்லாம், `இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?' என்று கணிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன. அவற்றில் சர்வதேச நாணய நிதியம் (IMF) முக்கியமானது. 2019 மற்றும் 2020-ல் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கும் என்று ஐ.எம்.எஃப் கணித்துள்ள மதிப்பீடுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில், `இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடவும் மிகவும் பலவீனமாக உள்ளது. வங்கிசாரா நிதி அமைப்புகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, பலவீனங்களுக்கான காரணங்களாகும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Vikatan

இதே ஐ.எம்.எஃப் ஜூலையில் வெளியிட்ட அறிக்கையில், `2019 மற்றும் 2020-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருக்கும்' எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், `தற்போது ஜிடிபி முறையே 7 மற்றும் 7.2 சதவிகிதமாக வளர்ந்தாலும், உள்நாட்டில் தேவை அதிகம் உள்ளதால் எதிர்பார்த்ததைவிட பொருளாதார வளர்ச்சி பலவீனமாக உள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளது. எனினும், உலகின் மிக வேகமாக வளர்ந்துவரும் முக்கிய பொருளாதார நாடாகவும், சீனாவை விடவும் இந்தியா முன்னேறும் எனவும் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் உலகளாவிய நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Vikatan
finance
finance

இதற்கிடையே செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஐ.எம்.எஃப் செய்தித் தொடர்பாளர் கேரி ரைஸ், ``சமீபகாலமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தைவிட பலவீனமாகியுள்ளது. சில வங்கிசாரா நிதி நிறுவனங்களில் தொடரும் மந்தநிலை, நிச்சயமற்ற நிலையே இந்த பலவீனத்துக்கு காரணம்" எனக் கூறியுள்ளார்.