Published:Updated:

வங்கிக் கடன்களில் மொத்தம் எத்தனை வகை இருக்கு தெரியுமா? வாங்க தெரிஞ்சிப்போம்! #LoanVenumaSir - 2

நம் வாழ்க்கையின் முன்னேற்றத்தும், சில சமயங்களில் கஷ்டங்களும் வருவதற்குக் காரணமாக விளங்கும் இந்தக் கடன் பற்றி முழுமையாக எடுத்துச் சொல்லத்தான் `லோன் வேணுமா சார்?’ என்கிற இந்தப் புதிய தொடர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``ஹலோ சார், நாங்க ஏடிபிசி பேங்க்ல இருந்து பேசுறோம். உங்களுக்கு 10 லட்ச ரூபாய் பர்சனல் லோன் தர்றோம். வாங்கிக்கிறீங்களா, நீங்க ஓகே சொன்னா அடுத்த நிமிஷமே உங்க அக்கவுன்ட்ல பணத்தைப் போட்றோம். ஓகேயா?’’
``சார், நீங்க எங்களுடைய பெருமைமிகு கஸ்டமர். 10 லட்சம் ரூபாய் லிமிட் இருக்கிற மாதிரி உங்களுக்கு கிரெடிட் கார்டு தர முடிவு செஞ்சிருக்கோம். கிரெடிட் கார்டை எப்ப உங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்?’’
``சார், நீங்க உங்க ஹவுஸிங் லோனை சரியா கட்டிக்கிட்டு வர்றீங்க. உங்களுக்கு ரூ.5 லட்சம் டாப் அப் லோன் குடுக்கிறோம். வாங்கிக்கிறீங்களா?’’

தினம் தினமும் இப்படி நமக்கு வரும் போன் கால்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. நம்மை எப்படியாவது கடன்காரனாக்கிவிடுவது என்கிற உறுதிமொழி எடுத்துக்கொண்டு, வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் பலர்.

இன்றைக்குக் கடன் வாங்கியவர்கள் மட்டும் கஷ்டப்படவில்லை, கடன் கொடுத்தவர்களும் `ஏன்டா, இவனுக்குக் கடன் கொடுத்தோம்’ என்று புலம்பித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது தனிநபர்களுக்கு மட்டுமல்ல, வங்கிகளுக்கும் பொருந்தும்.

இன்றைய தேதியில், அதுவும் கொரோனா தொற்று நோய் வந்த பிறகு, வங்கிகளிலும் தனியார் நிதி நிறுவனங்களிலும் கடன் வாங்கியவர்கள் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். காரணம், ஏதோ ஒரு நம்பிக்கையில் கடன் வாங்கிய பலரும் இன்று கடனைத் திரும்பக் கட்ட முடியாமல் முழிபிதுங்கி நிற்கிறார்கள். வாங்கிய கடனுக்கு வட்டி, குட்டி மேல் குட்டி போட்டு மலைக்க வைத்துக்கொண்டிருக்கிறது.

Lakshmi Vilas Bank ATM
Lakshmi Vilas Bank ATM
Photo: Vikatan / Vijayakumar.M

கடன்கள் பலவிதம்...

வங்கிகளும் தனியார் நிதி நிறுவனங்களும் தரும் கடன்களும் பல விதங்களில் உள்ளன.

1. தனிநபர் கடன் (Personal Loan).

2. சொத்து அடமானம் ஏதும் இல்லாத வியாபார கடன் (Unsecured Business Loan).

3. வீடு வாங்க, கட்ட, புதுப்பிக்க கடன் (Home Loan).

4. சொத்து அடமானம் மீதான கடன் (Loan Against Property).

5. இருசக்கர வாகனம் வாங்க கடன் (Two Wheeler Loan).

6. கார் வாங்க மற்றும் பழைய காரின் மீதான கடன் (Car Loan).

7. வர்த்தக வாகனம் வாங்க மற்றும் பழைய வாகனத்தின் மீதான கடன் (Commercial Vehicle, Construction Equipment, Tractor Loan).

8. தங்க நகைக் கடன் (Gold Loan).

9. கல்விக் கடன் (Education Loan).

10. கடன் அட்டை (Credit Card).

11. தொழிற்சாலை இயந்திரங்கள் வாங்க மற்றும் பழைய இயந்திரங்களின் மீதான கடன் (Machinery Loan).

12. நிர்வாகத்தின் அன்றாட செலவுகளுக்கான கடன் (Working Capital Loan).

13. சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் (SME Loans).

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடன்கள் பல வகை...

தனிநபர்கள் பொருள்களை வாங்கவும் தனிப்பட்ட சில செலவுகளை மேற்கொள்வதற்கும் தரப்படும் கடன்கள் சில்லறைக் கடன்கள் (Retail Loans) என்று அழைக்கப்படுகின்றன. பெரும் தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் ரூ.10 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை கடன் தரும். இந்த வகையான கடன்கள் தொழில் கடன்கள் (Industrial loans / Corporate Loans) என்று சொல்லப்படுகின்றன.

loan
loan
வங்கிக் கடன்களை ஏன் நம்மால் தவிர்க்க முடிவதில்லை? #LoanVenumaSir - புதிய தொடர்

இதேபோல, பெரும் எண்ணிக்கையில் அடுக்குமாடி வீடுகளைக் கட்டுவது, பாலம் கட்டுவது, பெரிய அளவிலான கட்டடங்களைக் கட்டுவது என உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன்கள் உள்கட்டமைப்புக் கடன் (Infrastructure Loans) என்று அழைக்கப்படுகிறது. வீட்டுக் கடன் தருவதற்கு மட்டுமே பிரத்யேக வீட்டுக் கடன் வசதி நிறுவனங்களும் (Housing Finance Companies) இருக்கின்றன.

கடன்களின் வகைகள் குறித்து இந்த அத்தியாயத்தில் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா? அடுத்த அத்தியாயத்தில் சில்லறைக் கடன்கள் குறித்து பார்ப்போம். இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வி... பொதுவாக, கடன்களை வாங்கும்போது எது முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? ஏன்? உங்கள் பதிலை கமென்ட் செய்யுங்கள்.

1. கடன் தொகை

2. கடனுக்கான வட்டி

3. கடன் செலுத்தும் காலம்

4. கடன் தரும் நிறுவனம்

வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் இந்தத் தொடர் விகடன் இணையதளத்தில் வெளியாகும். தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்.
கட்டுரையாளர் பற்றி...

வி.தியாகராஜன், சென்னையில் வசிக்கும் ஆடிட்டர். முன்னணி வங்கிகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். தற்போது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆடிட்டிங் தொடர்பான ஆலோசனை தந்து வருகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு