Published:Updated:

இந்திய இளைஞர்கள் 'அப்ரோச்' எப்படி? - 'காசு... பணம்... துட்டு...' சர்வே முடிவுகள்

இந்திய இளைஞர்களில் 86.9% பேர், இலக்குகள், ஆசைகளை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகிறார்கள்

இளைஞர்கள்
இளைஞர்கள்

நம் நாட்டிலிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்களே. ஸ்மார்ட்போனில் ஆரம்பித்து பைக்குகள் வரை இளைஞர்களின் விருப்பத்துக்குரிய பொருள்களே இன்றைக்கு விற்பனையில் சக்கைப்போடு போடுகின்றன. நிலைமை இப்படியிருக்க, அண்மையில் இந்திய நிதிச் சந்தையில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான பேங்க் பஜார், சர்வே ஒன்றை நடத்தியது. இன்றைய இளைஞர்களின் சேமிப்பு மற்றும் செலவு செய்யும் மனப்பான்மை, முதலீட்டுக்கு அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவம், கடன் வாங்கும் தன்மை உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி கேள்வி கேட்கப்பட்டு, அதற்கான பதில் பெறப்பட்டது. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/35zfORl

செல்வம், புகழ், பெயர், உறவுகள், சொந்த வளர்ச்சி மற்றும் உடல்நலம் ஆகிய ஆறு அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த சர்வே நடத்தப்பட்டது. பணம், வாழ்க்கைமுறை, ஆரோக்கியம், ஆகியவை தொடர்பான இளைஞர்களின் பார்வை குறித்தும் அவர்களின் ஆசைகள் மற்றும் அவற்றை அடைவதற்குத் தயார் செய்யும் நிலை குறித்தும் இந்த சர்வே நடத்தப்பட்டது.

இந்திய இளைஞர்கள் 'அப்ரோச்' எப்படி? - 'காசு... பணம்... துட்டு...' சர்வே முடிவுகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்குகளில் எது முக்கியம், அதை அடைவதற்கான முயற்சிகள் மற்றும் தயார்நிலை உள்ளிட்டவை குறித்துக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. ஒவ்வோர் இலக்குத் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, இளைஞர்களின் மனவோட்டம் அறிந்துகொள்ளப்பட்டது.

இந்திய இளைஞர்களில் 86.9% பேர், இலக்குகள், ஆசைகளை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வருகிறார்கள். இவர்களில், கிழக்கிந்திய இளைஞர்கள் ஆசைகளை அடைவதில் அதிக அளவு ஆர்வத்துடன் (87.9%) இருக்கிறார்கள். மேற்கிந்திய இளைஞர்களின் ஆர்வம் 86.8 சதவிகிதமாக இருக்கிறது. வடஇந்திய இளைஞர்கள் மற்றும் தென்னிந்திய இளைஞர்கள் முறையே 86.1% மற்றும் 86.8% ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

சர்வே உணர்த்துவது என்ன?

> ஆண்களைவிடப் பெண்கள் அதிக அளவில் இலக்குகளை அடைவதில் ஆர்வம் மற்றும் ஆசைகொண்டவர்களாக இருக்கிறார்கள். இந்திய இளைஞர்கள் மத்தியில் ஆரோக்கியம், உறவுகள் மற்றும் சொத்து சேர்ப்பது ஆகியவை முக்கிய நோக்கங்களாக இருக்கின்றன.

இந்திய இளைஞர்கள் 'அப்ரோச்' எப்படி? - 'காசு... பணம்... துட்டு...' சர்வே முடிவுகள்

> புகழ், தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவை அதற்கு அடுத்த இடங்களைப் பெறுகின்றன. மண்டல அளவிலான மாறுபாடுகளையெல்லாம் கடந்து ஆண், பெண் ஆகிய இருபாலினரின் ஆசைகளும் வீடு வாங்கும் விஷயத்தில் ஒரே மாதிரியாக இருக்கின்றன.

> 'சேமிப்பு, முதலீடுகளில் இளைஞர்கள் கவனம் செலுத்துவதில்லை' என்பது தகர்ந்துபோய், அவற்றுக்கு அவர்கள் காட்டும் முக்கியத்துவம் தெளிவாகியிருக்கிறது. 'இந்திய இளைஞர்கள் சம்பாதிப்பதில் 40% முதலீடு மற்றும் சேமிப்புக்காக ஒதுக்குகிறார்கள்' என இந்த சர்வே முடிவு தெரிவித்திருக்கிறது.

- இந்த சர்வே முடிவுகளை ஒவ்வோர் அம்சமாகவும், எளிய வடிவில் முழுமையாகவும் அறிந்துகொள்ள, வாசிக்கவேண்டிய நாணயம் விகடன் கவர் ஸ்டோரி > சேமிப்பு... செலவு... கடன்... முதலீடு... இன்றைய இளைஞர்கள் எப்படி? https://www.vikatan.com/news/general-news/an-analysis-on-this-generation-youngsters-money-handling-habits

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2MuIi5Z |