Published:Updated:

பசுவின் சாணத்தில் சோப்; மூங்கில் வாட்டர் பாட்டில்! - அறிமுகம் செய்து வைத்த நிதின் கட்கரி

அடுத்த இரண்டு வருடங்களுக்குள் காதி 10,000 கோடி வருவாயை எட்ட வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார் நிதின்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

காதியில் தயாரிக்கப்படும், பசுவின் சாணத்தில் செய்த சோப் மற்றும் மூங்கிலில் செய்த வாட்டர் பாட்டில்களை சமீபத்தில் டெல்லியில் அறிமுகம் செய்துவைத்திருக்கிறார், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

Nitin Gadkari
Nitin Gadkari

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் அமைச்சரான நிதின் கட்கரி, காந்தி ஜயந்தியை முன்னிட்டு டெல்லியின் முக்கிய வர்த்தக மையமான கன்னாட் பிளேஸில் நடந்த விழாவில் கலந்துகொண்டார். தான் இயற்கை விவசாயத்தின் ஆதரவாளர் என்று குறிப்பிட்ட அவர், தன் துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகள் குறித்தும் பேசினார்.

Vikatan

கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை (Khadi and Village Industries Commission - KVIC) பற்றிப் பேசிய நிதின் கட்கரி, அடுத்த இரண்டு வருடங்களுக்குள் காதி 10,000 கோடி வருவாயை எட்ட வேண்டும் என்றும், கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Nitin Gadkari
Nitin Gadkari

மூங்கில் வாட்டர் பாட்டிலின் விலை ரூ. 560 என்றும், 125 கிராம் சாண சோப்பின் விலை ரூ.125 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பல பிரபல பிராண்டுகளிலும் விற்பனைக்கு உள்ளன பசுஞ்சாணம் சோப்புகள். `நச்சுக்களை வெளியேற்றி சருமத்தை பொலிவாக்கும்', `பருக்களைக் குணமாக்கும்', `வியர்வை துர்நாற்றத்தைத் துரத்தும்', `சாணத்தின் வாசனை இருக்காது', `நுரைக்கும் ரசாயனங்கள் எதுவும் சேர்க்கப்படாததால் நுரை வராது' என்று பிராண்டுகள் தங்கள் குறிப்புகளில் இந்த சோப் பற்றித் தெரிவிக்கின்றன.

Vikatan

வடநாட்டில், சாணம், கோமியம், பால் உள்ளிட்ட பசு தரும் பொருள்களிலிருந்து தயாரிக்கப்படும் சோப், மில்க் க்ரீம், அண்டர் ஐ ஜெல், டூத்பேஸ்ட் போன்ற தயாரிப்புப் பொருள்கள், அங்கே கடைகளில் அடுக்கிவைக்கப்படுவது அதிகரித்து வருவதாகச் சொல்கின்றனர் காதி அதிகாரிகள்.