Published:Updated:

ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனங்களை விற்க அனில் அம்பானி முடிவு!

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் விற்பனைக்கு வந்ததுமே, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் செயல்பாடும் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. எனவே, இந்த விற்பனை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானி
அனில் அம்பானி ( vikatan )

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழும (ADAG) நிறுவனங்களின் கடன்களில் ரூ15,000 கோடி வரையிலான கடன்களை, வரும் 2020 மார்ச் மாதத்திற்குள் திருப்பிச் செலுத்துவதற்கு முடிவெடுத்துள்ளார். ஏற்கெனவே, இந்தக் குழுமத்துக்கு சுமார் ரூ 1.7 லட்சம் கோடி கடன் இருந்தது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், தன்வசமிருந்த முக்கியச் சொத்துகளை விற்றுக் கிடைத்த தொகையின்மூலம் ஓரளவு கடன்களை அடைத்ததால், 2019 ஜூலையில் கடன் தொகை ரூ.93,900 கோடிகளாகக் குறைந்தது.

அனில் அம்பானி
அனில் அம்பானி
vikatan

அடுத்ததாக, ரிலையன்ஸ் கேப்பிட்டலைச் சேர்ந்த ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனங்களை, வரும் டிசம்பர் மாதத்துக்குள் விற்பனைசெய்ய முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் சொத்துகள் விற்பனைக்கு வந்ததுமே, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் செயல்பாடும் பெரிதும் பாதிப்புக்குள்ளானது. எனவே, நஷ்டத்தில் செயல்படும் அந்த நிறுவனங்களையும் விற்பனைசெய்ய முடிவெடுத்துள்ளார்கள்.

இரண்டு நிறுவனங்களையும் விற்பனைசெய்வது தொடர்பாக, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்குக் கடன் வழங்கியவர்களுக்கும், இந்த நிறுவனங்களின் பங்குதாரர்களுக்கும் இடையே இணக்கமான சூழல் ஏற்படுத்தப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது. அந்த நடவடிக்கை, வரும் டிசம்பர் மாதத்தில் நிறைவுபெறும். அதன்பின்னர், அதிலிருந்து கிடைக்கும் வருவாயைக்கொண்டு மொத்தக் கடனில் ஒரு பகுதி செலுத்தப்படும்.

அனில் அம்பானி
அனில் அம்பானி
vikatan

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தையடுத்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் வெளியேறும் இரண்டாவது பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் கேப்பிட்டல் உள்ளது. விற்பனைசெய்வது குறித்த செய்தி வெளிவந்ததுமே, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் பங்கு விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.