Published:Updated:

அதிக பங்குகள் அதானி குழுமம் வசம்: என்டிடிவி-யின் காங்கிரஸ் நிலைப்பாடு மாறுமா?

அதானி குழுமம்
News
அதானி குழுமம்

தற்போது ஊடகத்துறையில் நடுநிலை என்ற நிலைப்பாடு குறைந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஊடகங்களை தமக்காக உருவாக்கி தான் விரும்பும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது

அதிக பங்குகள் அதானி குழுமம் வசம்: என்டிடிவி-யின் காங்கிரஸ் நிலைப்பாடு மாறுமா?

தற்போது ஊடகத்துறையில் நடுநிலை என்ற நிலைப்பாடு குறைந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஊடகங்களை தமக்காக உருவாக்கி தான் விரும்பும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது

Published:Updated:
அதானி குழுமம்
News
அதானி குழுமம்

என்டிடிவி நிறுவனத்தின் 29.18% பங்குகந்த் தற்போது அதானி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் 26% பங்குகளை ஓப்பன் மார்க்கெட்டில் அதானி குழுமம் வாங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அவ்வாறு 26% பங்குகளை அதானி குழுமம் வாங்கும் பட்சத்தில் என்டிடிவி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் அதானி குழுமத்திடம் சென்றுவிடும்.

என்டிடிவி நிறுவனம் வாங்கிய 403 கோடி ரூபாய் கடனுக்காக அந்தப் பங்குகளை அடமானம் பெற்ற மற்றொரு நிறுவனம் அதானி குழுமத்திடம் தற்போது அந்தப் பங்குகளை விற்றுள்ளது தெரியவந்துள்ளது.

அதானி குழுமம்
அதானி குழுமம்

இவ்வாறு அந்த நிறுவனம் பங்குகளை விற்றது என்டிடிவி நிறுவனத்தின் தலைவரான ராதிகா மற்றும் பிரணாய் ராய் ஆகிய இருவருக்கும் தெரிவிக்காமல் நடைபெற்றுள்ளதாக என்டிடிவி தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது ஊடகங்களில் குறிப்பாக, செய்திகளை ஒளிபரப்பும் ஊடகங்களில் அரசியல் கட்சி சார்பு என்பது ஒரு நியதியாக மாறிவிட்டது. நம் நாட்டில் பெரும்பாலான செய்தி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சி நிறுவனங்கள் கட்சி சார்பு உடையதாகவே உள்ளன. அந்த வகையில் தற்போது வரை என்டிடிவி தொலைக்காட்சி காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி அல்லாத எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் ஊடகமாக அறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த ஊடகத்தின் பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது பெரிய அளவில் அந்தத் தொலைக்காட்சியின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இதுபற்றி கருத்து தெரிவித்த என்டிடிவி நிறுவனத்தின் தலைவர் பிரணாய் ராய் தமது நிறுவனம் தொடர்ந்து கட்சி சார்பின்றி பொதுவான ஊடகமாகத் தமது பணிகளைத் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மே மாதத்தில் பிரபல ஊடகமான Bloomberg Quint என்ற நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வாங்கியதன் மூலம் மீடியா துறையில் வலுவான காலடியை அதானி குழுமம் பதித்தது. தற்போது என்டிடிவி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை கையகப்படுத்தினால் ஊடகத்துறையில் முக்கிய அங்கமாக அதானி குழுமம் மாறும்.

கௌதம் அதானி
கௌதம் அதானி

தற்போது 32% பங்குகள் என்டிடிவி குழுமத்தின் உரிமையாளர் களிடம் உள்ளது. அதனால் தற்போது வரை என்டிடிவி நிறுவனத்தில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் அதன் நிறுவனர்களே உள்ளனர். சிறு முதலீட்டாளர்கள், பெரு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் 40% பங்குகள் உள்ளன. அவர்களிடமிருந்து அதானி குழுமம் எளிதாக 21% பங்குகளை தற்போதைய நிலையில் வாங்க முடியும்.

தற்போது ஊடகத்துறையில் நடுநிலை என்ற நிலைப்பாடு குறைந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் ஊடகங்களைத் தமக்காக உருவாக்கி தாம் விரும்பும் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் சூழ்நிலை உருவாகிவிட்டது. இன்னும் 2 ஆண்டுகளில் நமது நாட்டின் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்குள் என்டிடிவி நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை அதானி குழுமம் கைப்பற்றும் பட்சத்தில் அரசியல் சதுரங்கத்தில் முக்கிய காய் நகர்த்தலாக அது பார்க்கப்படும்.